பக்கம் எண் :

478
சங்கீத ரத்னாகரர் துவாவிம்சதி சுருதி முறை.

பதினேழாவது.

IV. சாரங்கதேவர் சுருதி முறை.
இந்திய சங்கீதத்தில் துவாவிம்சதி சுருதிகள் வழங்கி வருகின்றனவென்று சொல்லும் சங்கீத ரத்னாகரத்தின் முறைப்படி வரும் சுருதிகள்.

இந்திய சங்கிதத்தில் வழங்கிவரும் துவாவிம்சதி சுருதிகள் இன்னவையென்று நிச்சயிப்பதும் அதன்படியே அனுபோகத்துக்குக் கொண்டு வருவதும் கூடிய காரியமென்று பலர் நினைத்தாலும், அவைகளை ஒருவாறு நிச்சயப்படுத்தலாமென்று எழுதிய கனவான்களின் அபிப்பிராயத்தால், அது கூடாத காரியமென்றே திட்டமாய்ப் புலப்படுகிறது. இவைகளில் இந்துஸ்தானி, சங்கீதத்தின் நுட்பமான இடங்களை விசாரித்து, இப்படியிருக்கலாமென்று அபிப்பிராயம் சொன்னவர் சிலர். அதுவுமின்றி, முன்னோர் எழுதியவைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொருக்கிக்கொண்டு இது தங்கள் சொந்த அபிப்பிராயமென்று சொன்னவர்கள் சிலர். எப்படியிருந்தாலும், இப்படிச் சொன்னவர்களின் அபிப்பிராயங்களை ஒன்று சேர்த்து அவைகளின் ஒவ்வாமையை எடுத்துக்காட்டி அதன்பின் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பற்றிச் சொல்வது நலமென்று தோன்றுகிறது. ஏனென்றால், இதன் முன் சுருதிகளைப் பற்றிச் சொல்லியவர்களின் அபிப்பிராயங்களை நாம் கவனிக்கையில், சாரங்கதேவரின் 22 சுருதிகள் என்ற வார்த்தையை மட்டும் விட்டுவிடாமல் சுருதி ஸ்தானங்களைக் குறித்தார்களேயல்லாமல் அவருடைய கருத்தையறிந்து சுருதிகள் நிச்சயம் செய்தார்களில்லை என்பது விளங்குகின்றது. மேலும் சிலர் இந்துஸ்தானி சங்கீதத்திற்கென்று எழுதி சில சுருதி அட்டவணைகளைக் கொடுத்தார்கள். அச் சுருதிகள் பெரும்பாலும் மேற்றிசையாரின் சங்கீதத்திற்கு ஒத்தவைகளா யிருக்கின்றனவென்று இதன் முன் சொன்னோம். அப்படிக் கொடுத்த அட்டவணைகளுக்கு இரண்டொரு சுருதிகளில் மாத்திரம் வித்தியாசப்பட்டு, மற்றபடி முற்றிலும் ஒத்திருக்கும்படி அட்டவணைகளைத் தயார் செய்து இவைகள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளென்று வேறு சிலர் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப் பலவிதமாகக் கொடுத்திருந்தும், இவைகள் யாவும் சாரங்க தேவருடைய துவாவிம்சதி சுருதிகளென்று ஒருவரைப் போலவே சொல்லுவதுதான் மிகுந்த ஆக்ஷேபனைக்கிடமாயிருக்கிறது.

சங்கீத ரத்னாகரத்தின் உயர்ந்த கருத்தையும் மேன்மையையும் இவர்கள் அறியாமல் 22 சுருதிகள் என்பதை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்தாயியில் நிரவல் செய்கிறதாகத் தெரிகிறதேயொழிய அவர் கருத்திற்குக் கடுகளவாவது இவர்கள் வந்து எட்டவில்லையென்பதைப் பிரத்தியட்சமாய்க் காணலாம். பூர்வகாலத்தில் எழுதப்பட்டதும் தற்காலத்தில் அனுபோகத்திற்கு வராததுமான ஒன்றை, தற்காலத்தில் வழக்கத்திலிருக்கிற ஒன்றோடு இணைப்பது கூடிய காரியமல்லவென்பதை விவேகிகள் யாவரும் உணர்வார்கள். பூர்வமான இரண்டில் ஒவ்வொன்றையும் தனித்தனி விசாரித்துத் தள்ள வேண்டியதைத் தள்ளவும் கொள்ள வேண்டியதை நிலை நிறுத்தவும் வேண்டும். பூர்வம் நல்லதாகவேயிருக்கிறதுமுண்டு. கால தர்மத்திற்கு அது மாறுபட அதிலும் மேலானதாக மற்றொன்று வருவதுமுண்டு. எப்படியிருந்தாலும் விவேகிகள் இரண்டையும்