ஆராய்ந்தறிந்து குணத்தைக் கொள்வதே மேன்மை. தற்கால அனுபோகத்திற்காக வேண்டித் தொன்று தொட்டுள்ள நல்லதைத் தள்ளி விடவும் கூடாது; தற்காலத்தில் அனுபோகத்திற்கு வராத பூர்வமான ஒன்றைக் கொள்ளாமல் விடவும் வேண்டும். சங்கீத ரத்னாகரர் எழுதிய முறை தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்ததுமல்ல. வட இந்திய சங்கீதமுமல்லவென்று இதன் பின்னால் வரும் காரியங்களால் திட்டமாய் அறியலாம். ஆகிலும் இந்திய சங்கீதத்திற்கு அது பூர்வ நூலாயிருப்பதினால் அவருடைய கருத்தின்படி சுருதி நிச்சயம் பண்ணிக் கொண்டு, அவர் கருத்து இன்னதென்று சொல்லும் வெவ்வேறு விதமான சுருதி நிச்சயத்தையும் சேர்த்துப் பார்த்து, இவைகள் இன்னபடி என்று சொல்ல வேண்டுமேயன்றி மற்றவர்கள் சொல்லுவதுபோல நியாயமின்றி நானும் சொல்லுவது தப்பிதமாகுமென்று நினைக்கிறேன். ஆகையால் சாரங்க தேவரின் கருத்து இன்னதென்று ஆராய்வோம். அவர் முதல் ஸ்தாயி ஒன்றானால் அதற்கடுத்த ஸ்தாயி அதற்கு இரு மடங்கும் அதற்கு மேல் ஸ்தாயி அதனில் இருமடங்குமாக ஓசையையுடையதென்றும் சொல்வதே சங்கீதம் பூர்வத்தில் மிகுந்த தேர்ச்சியுடையதாயிருந்த தென்று சொல்வதற்குப் போதுமான ஆதாரமாகும். எப்படி ஸ்தாயிகள் 1, 2, 4, 8 ஆகப் போகிறதோ, அப்படியே சுரங்களுமிருக்க வேண்டுமென்ற அவருடைய கருத்தை நாம் யாவரும் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவ்விடத்தைச் சரியாய்க் கவனிக்காததினாலேயே பலரும் பலவிதமாய்ச் சொல்லும்படியான விபரீதம் வந்தது. ஆகையினால் அவர் நூலில் சொல்லிய துவாவிம்சதி சுருதிகளையும் அச்சுருதிகள் கிரமங்களாக மாறுகையில் எப்படி வருகின்றனவென்பதையும் எப்படி ஒத்து நடக்கின்றனவென்பதையும் பார்ப்பது நம்முடைய சந்தேகங்கள் யாவும் நீங்குவதற்கு ஏதுவாயிருக்கும். இதன் முன் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி அபிப்பிராயங்கள் சொன்ன மகா-ள-ள-ஸ்ரீ சசஸ்ரபுத்தி, ராஜாசுரேந்திர மோஹன் தாகூர், தேவால், கிளமென்ட்ஸ், நாகோஜிராவ், பார்வ், Dr. பண்டர்க்கார், சங்கீத சந்திரிகை எழுதிய மாணிக்க முதலியார், சின்னசாமி முதலியார், M. A. சுப்பிரமணிய சாஸ்திரிகள், பஞ்சாபகேச பாகவதர், பிரதாப ராமசாமி பாகவதர் முதலியவர்களின் வெவ்வேறு விதமான கணக்கே சாரங்க தேவருடைய அபிப்பிராயம் வேறாயிருக்குமென்று எண்ண இடம் கொடுத்தது. அவரது நூலை வைத்துக்கொண்டே சுருதிகள் கண்டுபிடித்த மேற்கண்டவர்கள் அவருடைய சுருதியில் முற்றிலும் சம்பந்தப்படவில்லையென்று இதன் பின்வரும் அட்டவணையில் பார்க்கலாம். ஆகையினால், முதல் முதல் அவருடைய அபிப்பிராயத்தின்படி சுருதிகளைக் கண்டுபிடித்த அதன் பின் கிரகமாற்றுவதினால் அச் சுருதிகளை நிச்சயப்படுத்திக் கொண்டு அவற்றை இதன் முன் அர்த்தம் பண்ணியிருக்கும் மற்றவர்கள் சுருதிக் கணக்கோடு ஒத்துப்பார்த்து, அவைகளை துவாவிம்சதி சுருதிகளல்ல அல்லது சங்கீத ரத்னாகாரின் அபிப்பிராயமல்லவென்று சொல்ல வேண்டும். "சாரங்க தேவர் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் சுர அத்தியாயத்தின் முக்கிய கருத்தைச் சுருக்கிச் சொல்லுகிறேன். அதாவது :- மனதில் நினைப்புண்டாகி அக்கினியை எழுப்ப, அது வாயுவை உண்டாக்குகிறது. வாயுவானது பிரமகிரந்தி அல்லது மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி நாபி, இருதயம், கண்டம், தலை, வாய் வழியாக நாதமாய் வெளிப்படுகிறது. இவ்வைந்து ஸ்தானங்களில், முதுல் முதல் நாதமானது அதி சூட்சமம், சூட்சமம், புஷ்டம், அபுஷ்டம், கிருத்திருமம் என்ற பேர்களை அடைகிறது. இருதயத்தில் மந்தரமாகவும், கண்டத்தில் மத்திமமாகவும், சிரசில் தாரமாகவும் முறையே ஒன்று இரண்டு நாலு போல் பருத்து நிற்கிறது. இப்படி உண்டாகிற நாதம் 22 பேதமாகிறது. காதினால் நன்றாய்க் கேட்கப்படக் ஆராய்ந்தறிந்து குணத்தைக் கொள்வதே மேன்மை. தற்கால அனுபோகத்திற்காக வேண்டித் தொன்று தொட்டுள்ள நல்லதைத் தள்ளி விடவும் கூடாது; தற்காலத்தில் அனுபோகத்திற்கு வராத பூர்வமான ஒன்றைக் கொள்ளாமல் விடவும் வேண்டும். சங்கீத ரத்னாகரர் எழுதிய முறை தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்ததுமல்ல. வட இந்திய சங்கீதமுமல்லவென்று இதன் பின்னால் வரும் காரியங்களால் திட்டமாய் அறியலாம். ஆகிலும் இந்திய சங்கீதத்திற்கு அது பூர்வ நூலாயிருப்பதினால் அவருடைய கருத்தின்படி சுருதி நிச்சயம் பண்ணிக் கொண்டு, அவர் கருத்து இன்னதென்று சொல்லும் வெவ்வேறு விதமான சுருதி நிச்சயத்தையும் சேர்த்துப் பார்த்து, இவைகள் இன்னபடி என்று சொல்ல வேண்டுமேயன்றி மற்றவர்கள் சொல்லுவதுபோல நியாயமின்றி நானும் சொல்லுவது தப்பிதமாகுமென்று நினைக்கிறேன். ஆகையால் சாரங்க தேவரின் கருத்து இன்னதென்று ஆராய்வோம். அவர் முதல் ஸ்தாயி ஒன்றானால் அதற்கடுத்த ஸ்தாயி அதற்கு இரு மடங்கும் அதற்கு மேல் ஸ்தாயி அதனில் இருமடங்குமாக ஓசையையுடையதென்றும் சொல்வதே சங்கீதம் பூர்வத்தில் மிகுந்த தேர்ச்சியுடையதாயிருந்த தென்று சொல்வதற்குப் போதுமான ஆதாரமாகும். எப்படி ஸ்தாயிகள் 1, 2, 4, 8 ஆகப் போகிறதோ, அப்படியே சுரங்களுமிருக்க வேண்டுமென்ற அவருடைய கருத்தை நாம் யாவரும் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவ்விடத்தைச் சரியாய்க் கவனிக்காததினாலேயே பலரும் பலவிதமாய்ச் சொல்லும்படியான விபரீதம் வந்தது. ஆகையினால் அவர் நூலில் சொல்லிய துவாவிம்சதி சுருதிகளையும் அச்சுருதிகள் கிரமங்களாக மாறுகையில் எப்படி வருகின்றனவென்பதையும் எப்படி ஒத்து நடக்கின்றனவென்பதையும் பார்ப்பது நம்முடைய சந்தேகங்கள் யாவும் நீங்குவதற்கு ஏதுவாயிருக்கும். இதன் முன் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி அபிப்பிராயங்கள் சொன்ன மகா-ள-ள-ஸ்ரீ சசஸ்ரபுத்தி, ராஜாசுரேந்திர மோஹன் தாகூர், தேவால், கிளமென்ட்ஸ், நாகோஜிராவ், பார்வ், Dr. பண்டர்க்கார், சங்கீத சந்திரிகை எழுதிய மாணிக்க முதலியார், சின்னசாமி முதலியார், M. A. சுப்பிரமணிய சாஸ்திரிகள், பஞ்சாபகேச பாகவதர், பிரதாப ராமசாமி பாகவதர் முதலியவர்களின் வெவ்வேறு விதமான கணக்கே சாரங்க தேவருடைய அபிப்பிராயம் வேறாயிருக்குமென்று எண்ண இடம் கொடுத்தது. அவரது நூலை வைத்துக்கொண்டே சுருதிகள் கண்டுபிடித்த மேற்கண்டவர்கள் அவருடைய சுருதியில் முற்றிலும் சம்பந்தப்படவில்லையென்று இதன் பின்வரும் அட்டவணையில் பார்க்கலாம். ஆகையினால், முதல் முதல் அவருடைய அபிப்பிராயத்தின்படி சுருதிகளைக் கண்டுபிடித்த அதன் பின் கிரகமாற்றுவதினால் அச் சுருதிகளை நிச்சயப்படுத்திக் கொண்டு அவற்றை இதன் முன் அர்த்தம் பண்ணியிருக்கும் மற்றவர்கள் சுருதிக் கணக்கோடு ஒத்துப்பார்த்து, அவைகளை துவாவிம்சதி சுருதிகளல்ல அல்லது சங்கீத ரத்னாகாரின் அபிப்பிராயமல்லவென்று சொல்ல வேண்டும். "சாரங்க தேவர் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் சுர அத்தியாயத்தின் முக்கிய கருத்தைச் சுருக்கிச் சொல்லுகிறேன். அதாவது :- மனதில் நினைப்புண்டாகி அக்கினியை எழுப்ப, அது வாயுவை உண்டாக்குகிறது. வாயுவானது பிரமகிரந்தி அல்லது மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி நாபி, இருதயம், கண்டம், தலை, வாய் வழியாக நாதமாய் வெளிப்படுகிறது. இவ்வைந்து ஸ்தானங்களில், முதுல் முதல் நாதமானது அதி சூட்சமம், சூட்சமம், புஷ்டம், அபுஷ்டம், கிருத்திருமம் என்ற பேர்களை அடைகிறது. இருதயத்தில் மந்தரமாகவும், கண்டத்தில் மத்திமமாகவும், சிரசில் தாரமாகவும் முறையே ஒன்று இரண்டு நாலு போல் பருத்து நிற்கிறது. இப்படி உண்டாகிற நாதம் 22 பேதமாகிறது. காதினால் நன்றாய்க் கேட்கப்படக்
|