கூடிய நாதம், சுருதியென்றழைக்கப்படுகிறது. இருதயத்திலிருந்து மேல் நோக்கும் இடை, பிங்கலை என்ற நாடிகளில் 22 நாடிகளிருக்கின்றன. அந்த 22 நாடிகளில் குறுக்கே 22 நாடிகளிருக்கின்றன. அவற்றில் காற்று அடிபட்டு வரவரப் பருத்து நாதம் வெளிப்படுகிறது. இதே மாதிரி கண்ட ஸ்தானத்திலும் சிரசிலும் 22 ஸ்தானங்களிருக்கின்றன. இதை இரண்டு வீணையைக் கொண்டு ருசுப்படுத்துகிறேன். இரண்டு வீணை தயார் செய்து கொள். ஒவ்வொன்றுக்கும் 22 தந்திகள் போடு. அதில் ஒரு வீணையில் முதல் தந்தியில் உன்னால் கூடிய ஆரம்ப நாதம் வரும்படி வை. அதின் கீழ் வேறு நாதமிருக்கக் கூடாது. அதன் மேல் கொஞ்சம் கூடுதலாக 2-ம் தந்தியை அமைத்துக் கொள். இரண்டு தந்திக்கும் நடுமத்தியில் வேறு நாதம் உண்டாகாதபடியிருக்கட்டும். இதே பிரகாரமாக ஒன்றின்மேலொன்றாய் சுருதி சேர்த்துக்கொள். இப்படி மேல் தந்திகள் போகப் போக ஒன்றற்கொன்று தீவிரமாகும். அதில் ஷட்ஜம் 4 சுருதி கொண்டது. இதில் 4 வது சுருதியை ஷட்ஜமமாக வைத்துக்கொள். அதில் ஷட்ஜம் 4 சுருதி கொண்டது. 5 வது 6 வது 7 வது தந்திகளில் ரிஷபம் நிற்கும். காந்தாரத்திற்கு 2 சுருதி. 8 வது 9 வது தந்திகளில் வரும். மத்திமத்திற்கு 4 சுருதி. 10, 11, 12, 13 வது தந்திகளில் நிற்கும். அவையும் 21, 22-ல் முடிகின்றன. இதில் ஒன்று துருவ வீணை. மற்றொன்று சல வீணை என்று வைத்துக்கொள். அதில் சல வீணையை நான் சொல்லுகிறபடி மாற்று. 4 வது ஷட்ஜமத்தின் பின்னுள்ள ஷட்ஜமத்தின் 3 வது சுருதியிலிருந்து முன் கிரமப்படி ஸப்த சுரங்களை வைத்தால் ஒரு சுருதி குறையும். இரண்டாவது 2 சுருதி குறைத்துக் கொண்டு போக க வும் நி யும் ரிஷப தைவதத்தின் சுருதிகளில் ஒன்றை அடையும். மூன்றாவது 3 சுருதி குறைத்துக் கொண்டுபோக ரிஷப தைவதம் ஷட்ஜம பஞ்சமத்தின் 4 சுருதியைப் பெறும். 4 சுருதி மாற்றும்போது துருவ வீணையிலுள்ள நி, க, ம வில் சல வீணையின் ச, ம, ப லயத்தை அடைகிறது. அதாவது 22 ல் ஷட்ஜமமும் 9ல் மத்திமமும் 13ல் பஞ்சமமும் ஆரம்பிக்கும். இந்த நாலுவிதம் சுருதி குறைப்பதினால் துருவ வீணையிலுள்ள சுரங்களில் லயத்தை அடைகிறது. இதனால் சுரங்களின் கணக்கு அறியப்படும். இப்படிப்பட்ட சுருதிகளிலிருந்தும் ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழு சுரங்கள் உண்டாகின்றன. சுத ஷட்ஜம், அச்சுத ஷட்ஜம் என்று ஷட்ஜமம் இரு வகையாம். ஷட்ஜமம் 4 சுருதியிலிருந்து ஒரு சுருதி குறைக்கும் பொழுது ரிஷபம் நாலு சுருதி பெறுகிறது. அப்படியே மத்திமமும் குறையும்பொழுது சுதமாம். ஷட்ஜமம் தன் சுருதியில் இரண்டை காகலி நிஷாதத்துக்குக் கொடுத்து, இரண்டு சுருதியோடு நிற்கையில் அச்சுதமாம். இது ஒரு விக்ருதி. இப்படியே மத்திமம் இரண்டு சுருதியை அந்தரகாந்தாரத்திற்குக் கொடுத்து இரண்டு சுருதியோடு நிற்கையில் அச்சுதமாம். இதுவும் விக்ருதியே. ஷட்ஜமம் ஒரு சுருதி குறைந்து 22ஆம் இடம் ஆரம்பிக்கையில் 23 வது இடம் கைசிகமாம். 24 காகலியாம். இதில் கைசிகம் காகலி இரண்டும் விக்ருதியே. காகலிக்கு மேல் மூன்றாவது இடத்தில் வரும் ஷட்ஜம் சுத ஷட்ஜம். இதுவும் விக்ருதி. இது போலவே மத்திமமும் விக்ருதி. இது போலவே மத்திமமும் இரண்டு சுருதியோடு மாத்திரம் நிற்கையில் அச்சுத மத்திமம். இதுவும் விக்ருதி. சுத்த காந்தாரத்தில் மத்திமம் வருகையில் ஒரு சுருதி சாதாரண காந்தாரமாம். 2ஆம் சுருதி அந்தர காந்தாரமாம். இது ஒரு விக்ருதி. மூன்று சுருதி குறைந்த மத்திமம் சுதமாம். பஞ்சமம் மூன்று சுருதியோடு நிற்கையில் த்ரிசுருதி பஞ்சமமாம். இதுவும் விக்ருதி. மத்திமத்தின் நாலாவது சுருதியை பஞ்சமம்
|