சோடிகா என்ற அவைகளின் பெயர்களும் வெளிப்பட்டிருக்கின்றன. ஆகையினால் ஒற்றுமையில்லாத இப் பெயர்களைக் கொண்டு உங்கள் மனதைக் குழப்பாமலிக்கும் படிக்கும் சுருதிகளை நிச்சயம் செய்யும் ஒரே முடிவுக்கு நீங்கள் வரவேண்டுமென்று உத்தேசித்தும், சுருதி ஸ்தானங்களுக்கு லக்கங்களை மாத்திரம் குறித்திருக்கிறேன். நிச்சயமில்லாத பெயர்கள் பலவற்றைச் சொல்லி ஆடம்பரம் செய்ய நான் விரும்பவில்லை. காரியத்தை விளங்கப் பண்ண எத்தனை விதம் சொல்ல வேண்டுமோ அத்தனையும் சொல்லுகிறேன். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. 1, 2, 3, 4 என்ற எண்கள் எப்படி படிப்படியாய்க் கிரமத்துடன் ஏணியின் பழுவைப் போல் ஒழுங்குபட்டு நிற்கிறதோ அப்படியே இவைகளும் ஒவ்வொன்றாய் எந்தப் பக்கம் தள்ளிக் கொண்டாலும் அதன்பின் வரும் சுருதி ஸ்தானங்களும் ஒரே அளவில் ஒற்றுமைப்பட்டு நடக்கின்றன. அவைகள் ஒற்றுமையில்லாத அளவுகளுள்ள தாயிருக்குமானால், ஆரம்ப சுரத்திலிருந்து அதன் பின்வரும் சுரங்கள் மற்ற வரிசையோடு ஒத்து நிற்கமாட்டாவென்று அறிவாளிகள் யாவரும் ஒப்புக் கொள்வார்கள். ஷட்ஜமத்தின் 4 சுருதிகளும், ரிஷபத்தின் 3 சுருதிகளும், காந்தாரத்தின் 2 சுருதிகளும் ஒன்றற்கொன்று ஒற்றுமையான அளவில்லாதிருக்குமானால் 22வது ஸ்தானத்திலிருந்து ஷட்ஜமம் ஆரம்பிக்கும்பொழுது ரிஷபத்தின் 3வது சுருதி ஷட்ஜமத்தின் 3வது சுருதியிலும் காந்தாரத்தின் முதல் சுருதி ஷட்ஜமத்தின் நாலாவது சுருதியிலும் வர இடம் கொடுக்குமா? மற்ற சுரங்களும் இப்படியே ஒன்றற்கொன்று பொருந்தி நிற்கும் ஒரு மேலான முறையைச் சொன்னார். ஒன்றற்கொன்று பொருந்தாத அளவுகளுள்ள சுருதி முறையை அவர் சொல்லவேயில்லையென்று இதனால் தெளிவாய்த் தெரிகிறது. கலக்கமறத் தெரிவதற்காக இதன் பின் வரும் அட்டவணையை ஒத்துப் பார்க்க. ச4 இல் இருந்து ஒவ்வொரு சுருதி ஸ்தானம் குறைத்துக் கொண்டு போகப் போக ஸப்த சுரங்களின் மூர்ச்சனைகள் ஒவ்வொன்றும் ஏற்படுகிறது. இதையே ஷட்ஜ கிராமமென்று சொல்லுகிறார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. ஷட்ஜமம் நிஷாதத்தின் 22-வது சுருதியில் ஆரம்பிக்க வேண்டுமானால் அதன் கீழ் ஒரு ஸ்தாயியிருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உன்னால் கூடிய ஆரம்ப நாதத்தை முதல் சுருதியாக வைத்துக்கொள் என்று சொல்லுகிறார். அப்படி ஷட்ஜமத்தின் முதல் சுருதி ஆரம்பித்த பின் அதன் கீழுள்ள ஒரு ஸ்தானம் ஓசையையுடையதாயிருக்க மாட்டாது. ஆகையினால் மத்தியஸ்தாயியிலிருந்தே இப்படிக் கிரக மாற்றுவது கூடிய காரியமென்று நாம் அறிய வேண்டும். மத்திய ஸ்தாயியியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு ஸ்தாயியும் பின் ஒரு ஸ்தாயியுமிருந்தால் கிரக சுரம் பாடுவதற்கு அனுகூலமான கணக்குக் குறித்துக் கொள்ள ஏதுவாயிருக்கும். ஷட்ஜ கிராமம். இதன் மேல் ஷட்ஜம கிராமம் வருகிறது. ஷட்ஜம கிராமமாவது ஷட்ஜமம் 4, ரிஷபம் 3, காந்தாரம் 2, மத்திமம் 4, பஞ்சமம் 4, தைவதம் 3, நிஷாதம் 2 ஆக 22. இவைகள் ஆரம்ப சுரம் எத்தனை சுருதி குறைத்துக் கொண்டாலும் ஸப்த சுரங்களும் சுருதி அளவில் ஒத்திருக்க வேண்டியது. மத்திம கிராமம். இது போலவே மத்திம கிராமமும் ஷட்ஜமம் 4, ரிஷபம் 3, காந்தாரம் 2, மத்திமம் 4, பஞ்சமம் 3, தைவதம் 4, நிஷாதம் 2 ஆக 22சுருதிகளாய் ஸப்த சுரங்களும் தங்கள் சுருதிக் கிரமப ்படி கானத்தில் உபயோகப்பட வேண்டுமென்பதே மத்திம கிராமத்தில் பஞ்சமம் ஒரு சுருதி குறைந்து வருகிறதென்றும் அதாவது பஞ்சமத்தின் மூன்றாவது சுருதியே அதற்குப்
|