அவைகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கூடிய ஒழுங்குபட்டு நிற்குமேயொழிய பேதமாகமாட்டாது. ஆனால் வெவ்வேறு ஒழுங்கீனமான அளவுடன் பழுக்கள் அமைக்கப் பட்டிருக்குமானால் தன்னிலேயே உபயோகத்திற்குக் கடினமாயிருப்பதுந் தவிர மற்றொன்றோடு 3/4, 1/2, 1/4 என்ற அளவில் சேர்த்துக் கட்டும்பொழுது எத்தனையோ விதமான ஒழுங்கற்ற படிகள் உண்டாகும். துவாவிம்சதி சுருதியின் அளவு பேதத்தினாலேயே வெவ்வேறு விதமான தடுமாற்றமும் ஆட்சேபங்களும் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. தாங்கள் படிக்கும் கீதத்திற்கு சுரம் ஏற்படுத்தி அதைச் சாதனைக்குக் கொண்டு வந்தால் பிரயோசனமாயிருக்கும். அதை விட்டு விட்டுத் தங்களுக்கு அவசியமில்லாததும், சாதனைக்கு வரக்கூடாததும் தெரியாததுமான ஒன்றை எடுத்துக்கொண்டு குதர்க்கம் பண்ணுவதை அறிவாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மேலும் கிரக சுரம் எத்தனைக்கெத்தனை மாற்றுகிறார்களோ அத்தனைக் கத்தனை யாதவ குலத்திற்கு இருப்புலக்கையின் தூள்போல இவர்களுக்கு அனர்த்தத்தைத் தரும் அளவு விருத்தியாகி விடுகிறது. அதையும் இங்கு ஒருவாறு கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. அப்படிக் கவனிப்பது சாரங்க தேவரின் அபிப்பிராயத்தின்படி செய்த சுருதிகள் சரி அல்லது தப்பென்றும், மற்றவர்கள் செய்தது சரி அல்லது தப்பென்றும் யாவரும் அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாயிருக்கும். சாரங்கர் முறைப்படி கிரகம் மாற்றும் விபரம். சாரங்க தேவர் 22 தந்திகளுள்ள முதல் வீணையில் ஆரம்ப நாத முதற்கொண்டு படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு சுரம் உண்டாகாதபடி ஒரு ஸ்தாயியில் 22 சுருதியாகச் சுருதி சேர்க்கும் விதத்தை இதுவரை பார்த்தோம். அது போலவே, அவர் கிரகசுர மாற்றுவதையும் சற்றுக் கவனிப்போம். 22 தந்திகள் பூட்டிய இரண்டாவது வீணையில் முந்திய வீணையில் கண்ட 4 வது, 7 வது, 9 வது, 13 வது, 17 வது, 20 வது, 22 வது ஸ்தானங்களில் வரும் ஏழு சுரங்களையும் 3 வது, 6 வது, 8 வது, 12 வது, 16 வது, 19 வது, 21 வது தந்திகளில் அமைக்கச் சொல்லுகிறார். இது ஷட்ஜமத்தின் 3 வது சுருதியிலிருந்து ஷட்ஜமத்தின் நாலாவது சுருதி ஆரம்பித்து ஸப்த சுரங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சுருதி ஸ்தானம் குறைந்து வருகிறதைக் காட்டுகிறதேயொழிய வேறில்லை. இரண்டாவது :- ஷட்ஜமத்தின் 2 வது சுருதியிலிருந்து ஷட்ஜமத்தின் 4-வது சுருதி ஆரம்பித்து ஸப்த ஸ்வரங்களும் தங்கள் சுருதிகளில் ஒவ்வொன்று குறைந்து வருகிறது. இப்படி ஷட்ஜமத்தின் நாலாவது சுருதி ஷட்ஜமத்தின் இரண்டாவது சுருதியிலிருந்து ஆரம்பிப்பதினால் காந்தாரமும், நிஷாதமும் தங்களுக்குரிய இரண்டு சுருதி ஸ்தானங்களையும் விட்டுவிட்டு ரிஷப தைவதங்களில் லயத்தையடைகின்றன. மூன்றாவது :- ஷட்ஜமத்தின் முதல் சுருதியில் ஷட்ஜமத்தின் நாலாவது சுருதி ஆரம்பிக்கையில் ரிஷப, தைவதங்கள் தங்கள் மூன்று ஸ்தானங்களையும் விட்டுவிட்டு ஷட்ஜம பஞ்சமங்களின் 2, 3, 4 வது சுருதியில் லயத்தை அடைகிறது. நாலாவது :- 22 ஆம் ஸ்தானத்தில் ஷட்ஜமத்தின் 4 வது சுருதி ஆரம்பிக்கையில் ஷட்ஜமம் நிஷாதத்திலும், மத்திமம் காந்தாரத்திலும், பஞ்சமம் மத்திமத்திலும் லயத்தை யடைகிறதென்று சொல்லுகிறார். இதை வாசிக்கும் அன்பர்களே! சுருதி ஸ்தானங்களுக்கு முன்னோரிட்டு வழங்கிய பெயர்கள் சாரங்க தேவருடைய காலத்திலேயே சற்று மயங்கக் கூடியதாயிருந்ததாக அவர் புஸ்தகத்தாலேயே தெரிகிறது. அதன் பின் நூலாசிரியர்களும் சுருதியைப் பற்றியும் சுருதியின் பெயர்களைப் பற்றியும் சொல்லும் இடங்களில் சற்று ஒவ்வாமையுடையதான அநேக பெயர்களை வழங்கி வந்திருக்கிறார்கள். இதோடு இவைகள் யாவையும் அனர்த்தம் பண்ண 53 சுருதிகளும் வாடிகா,
|