இதுபோலவே 4 வது கலத்தில் ஆதார, தார ஷடஜ்ங்களின் லக்கங்களையும், ஒன்றாவதையும் 21-வது சுருதியையும், இரண்டாவதையும் 20-வது சுருதி எண்களையும், மூன்றாவதையும் 19-வது சுருதி எண்களையும் பெருக்கினால் 2 வரும். இதில் நடுவான பதினோராவது சுருதியைத் தன்னில் தானே பெருக்க வேண்டும். இன்னும் இக்கணக்குகளைக் கொண்டு எவ்வளவு விரிவாகச் சொன்னாலும் எத்தனை விதமாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் சுருதி ஸ்தானங்களை நிச்சயம் பண்ணிக் கொள்வதற்கு இதுவே போதுமென்று எண்ணுகிறேன். இதுவே சாரங்கதேவர் சுருதி சேர்த்துக் கொள்ளும்படியாகச் சொன்ன முறை. ஒரு ஸ்தாயிக்கு மற்றொரு ஸ்தாயி இரு மடங்காயிருக்க வேண்டுமென்ற அவர் கொள்கைப்படியும் 22 தந்திகளில் படிப்படியாய் உயர்ந்து நடுவில் வேறு ஓசையுண்டாகாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளிருக்க வேண்டுமானால் இதைத் தவிர வேறு எந்த முறையும் சரியான அளவைக் காட்டாதென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். அறிவாளிகளும் அதை ஒப்புக் கொள்வார்கள். ஒரு ஏணியின் படிகள் ஒரே அளவாயில்லாதிருக்குமானால் அதில் ஏறி இறங்குவது கடினமான காரியமென்று சாதாரண அறிவுடையோரும் தினப்பழக்கத்தில் அறிவார்கள். ஓசையிலும் அப்படியே ஒழுங்கில்லாதிருக்குமானால் இடறுதலுக்கே காரணமென்று ஏன் அறியாது போனார்கள்? அவர்கள் மேல் குற்றமில்லை. பின்ன எண்களைத் தலை வாலாய்ப் பெருக்கிச் சரிக்கட்டப் பார்த்தது இவர்கள் செய்த வேலைக்குப் பின்னமாயிற்று. அதோடு அப்பின்ன பாகங்களில் கிடைக்கும் ஓசைகளும் அபசுரமாயின. தாங்கள் சாரங்க தேவரின் அபிப்பிராயத்தின்படியே செய்கிறோமென்றும் மற்ற எவருக்கும் இது விளங்காதென்றும் நினைத்து ஒவ்வொருவரும் அவர் கருத்திற்கு நெடுந்தூரம் விலகிப் போனார்கள். விலகிப் போனவர்களும் ஒருவருக்கொருவர் பேதப்பட்டுத் தற்கால சங்கீதத்தோடு தங்கள் கருத்தை இணைப்பதற்கு கட்சியும் சேர்த்து வாத்தியங்களும் உண்டாக்கியிருக்கிறார்கள். இது பார்க்க மிகப் பரிதாபமாயிருக்கிறது. துலா ராசியில் சூரியன் நீசமாகி இருள் மூடிய காலத்தில் நடுக்கடலில் கடும்புயலில் அகப்பட்ட கப்பல் போல் தென்னிந்திய சங்கீதத்திற்கும் அபாயம் நேரிடுமோவென்று கலக்கமுறுகிறேன். சாரங்க தேவருடைய கருத்தைவிட்டு நிச்சயித்துக் கொண்ட தங்கள் சுருதிகளுக்கு அவர் சொல்லியபடி கிராமம் மாற்றும்பொழுது தங்களுடைய கணக்கு ஒவ்வாமையையறிந்து வேறு சில சுருதிகள் நூதனமாய் உண்டாகிறதென்று சிலர் சொல்லுகிறார்கள். ஷட்ஜ கிராமம், மத்திம கிராமம், காந்தார கிராமங்களில் மூன்று சுருதிகள் நூதனமாய் உண்டாகின்றனவென்று ஒருவர் சொல்லுகிறார். மற்றவர் அப்படி மாற்றுவதில் அநேக அனர்த்தங்கள் விளையுமென்றும் சுருதிகள் ஒவ்வா என்றும் அறிந்து விட்டுவிடுகிறார். வேறொருவர் ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகளிருக்குமானால் இவைகளுக்கு ஒத்து வருமென்று யோசித்து ஷட்ஜம-பஞ்சம முறைப்படி 53 சுருதி ஸ்தானங்கள் கண்டுபிடித்து அதில் 22ஐ பொருக்கிக் கொண்டேன் என்று சொல்லுகிறார். ஒரு ஸ்தாயியில் 22 என்று சொன்ன சாரங்கதேவரின் அபிப்பிராயத்திற்கு 23ம் 24ம் 25ம் 53ம் விபரீதமல்லவோ? கிரக மாற்றும்பொழுது 22 சுருதிகளும் தங்கள் எண்களில் குறையாமலும் பாடும் முறையில் ஓசை பிறழாமலும், வாதி சம்வாதி பொருத்தத்துடன் வர வேண்டுமென்பதை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 22 சுருதிகளும் அளவிலும் ஓசையிலும் கிரமப்பட்டிருக்குமானால் எந்த கிராமத்திற்கு அல்லது எந்த சுருதிக்கு வைத்தாலும் வாதி சம்வாதி பொருத்தமுடையவைகளாகவே யிருக்கும். ஒரே அளவான பழுக்களுள்ள இரண்டு ஏணிகளை ஒன்றோடொன்று வைத்துக் கட்டினாலும் அல்லது அதன் இரண்டு பழுக்கள் ஒன்றோடொன்று சேரும்படி அதன் 3/4, 1/2, 1/4 என்ற எந்த பாகத்தில் வைத்துக் கட்டினாலும்
|