ஒன்பதிற்குப் பதினேழும் பதின்மூன்றிற்கு இருபத்தொன்றும் வரும். ஒன்றிற்குப் பதின்மூன்று எப்படியோ அப்படியே பதின்மூன்றிற்கு தார ஸ்தாயியின் மூன்றாவது லக்கமும் அல்லது இருபத்தைந்தும் வரும். ஒன்பதற்கு இருபத்தொன்றும் வரும். இப்படி வருகிறது போலவே பிந்தின கலங்களில் கண்ட ஒவ்வொரு அளவும் ஒத்திருக்கும். இச் சுருதி ஸ்தானங்கள் எவ்வித பேதமுமின்றி ஒன்றோடொன்று ஒத்து நிற்பதை இன்னும் சற்றுத் தெளிவாய்ப் பார்ப்போம். அட்டவணையின் நாலாவது கலத்தில் முதலாவது சுருதி துருவத்திற்குக் கிடைத்த எண்ணைத் தன்னில் தானே பெருக்கினால் இரண்டாவது சுருதி ஸ்தானம் கிடைக்கிறது. இரண்டாவதை முதல் ஸ்தானத்தின் எண்ணால் பெருக்கினால் மூன்றாவது கிடைக்கிறது. எப்படியென்றால் :- I.9689844 வூ I.9689844 = I.9389310 ஆகிறது.மறுபடியும் I.9389310 வூ I.9689844 = I.9098095என்று வரும். இது போலவே ஒவ்வொரு சுருதிக்கும் வரும் எண்ணை முதல் சுருதியின் எண்ணால் என்று வரும். அடுத்த சுருதி கிடைத்துக் கொண்டேயிருக்கும். இது போலவே ஆறாவது நாலாவது கலங்களின் நாலாவது சுருதிக்குரிய லக்கத்தை தன்னில் தானே பெருக்க அதின் வர்க்கமாகிய 8வது ஸ்தான லக்கமும், அந்த நாலாவதை தன்னில் தானே மூன்று தரம் பெருக்க அதன் கனமாகிய 12-வதின் லக்கமும், இன்னும் நாலு தரம் பெருக்கும் பொழுது அதன் வர்க்கா வர்க்கமாகிய 16-வது ஸ்தானத்தின் லக்கமும் கிடைக்கும். இப்படியே எடுத்துக் கொண்ட எந்த லக்கத்திற்கும் எடுத்துக் கொண்ட அளவுக்கு ஒற்றுமையான பெருக்குப் பலன் கிடைக்கும் என்பது நிச்சயம். இது தவிர, வேறுவிதமான ஒற்றுமையையும் பார்ப்போம். அட்டவணையின் நாலாவது கலத்திலுள்ள முதல் சுருதியின் லக்கமாகிய 1.032008 ஐயும் 6-வது கலத்திலுள்ள .9689844 ஐயும் ஒன்றாகப் பெருக்கினால் 1ஆக வரும். (1.032008 வூ .9689844 = 1) அது போலவே இரண்டாவது லக்கம் 1.065041 ஐயும் 6-வது கலத்தின் இரண்டாவது லக்கமாகிய .9389310 ஐயும் பெருக்கினால் 1 வரும். (1.065041 வூ 9389310 = 1); இருபத்திரண்டுக்குரிய இரண்டையும் 6-வது கலத்தில் 22க்குரிய .5ஐயும் பெருக்க 1 வருகிறது. ( 2 வூ .5 = 1). இவைகள் அறிவாளிகளுக்கு மிகவும் சுலபமாய்த் தெரியும் உண்மைகள். மேலும் அட்டவணையின் 9, 10-வது கலத்தில் கண்ட சென்ட்ஸ் கணக்கைக் கவனிப்போமேயானால் அவைகள் ஒவ்வொன்றும் 54, 54 அல்லது சற்றேறக் குறைய 54(1/2), 54(1/2) ஆகப் படிப்படியாய்ப் பெருத்துப் போகிறதைக் காண்போம். இது தவிர 6-வது கலத்தில் கண்ட சுருதியின் தசாம்ச பின்ன பாகத்தில் ஆதார, தார ஷட்ஜங்களின் லக்கங்களையும், முதலாவதும் 21-வது சுருதியையும், இரண்டாவதையும் 20-வது சுருதியையும், மூன்றாவதையும் 19வது சுருதியின் லக்கங்களையும் ஒன்றோடொன்று பெருக்கினால் 1/2 ஆக
|