.9389310 என்பதாகும். இது போலவே 3, 4, 5 முதலிய சுருதிகளுக்கு எதிரில் ஐந்தாவது கலத்தில் கிடைக்கும் ஓசையின் அலைகளால் 540ஐ வகுக்க அதற்கு எதிரில் 6வது கலத்தில் காட்டிய தந்தியின் பாகங்கள் கிடைக்கும். இருபத்திரண்டாவது சுருதிக்கு எதிரிலுள்ள 1080 ஓசையின் அலைகளுக்கு 540/1080 = 1/2 = .5 என்ற பின்னம் கிடைக்கிறது. இது ஒன்றாயிருந்த ஆதார ஷட்ஜத்திலிருந்து அதன் பாதியாயிருந்த தார ஷட்ஜம் வரையுமுள்ள தந்தியின் அளவில் எப்படி 22 சுருதிகளும் படிப்படியாய் அளவில் குறைந்தும் இடைவெளியில் வேறு நாதமுண்டாகாமலும் அமைந்திருக்கின்றனவென்று காட்டுகிறது. இந்த அளவு நாம் எடுத்துக் கொண்ட 32 அங்குல தந்தியில் எந்தெந்த இடத்தில் வருகிறதென்று நாம் இனிமேல் கவனிக்க வேண்டும். ஆதார ஷட்ஜம் 32 அங்குல நீளமுள்ள தந்தியில் மேருவில் பேசுகிறதென்றும் அந்தத் தந்தியின் சரிபாதியில் அதாவது 16 அங்குலத்தில் தார ஷட்ஜம் பேசுகிறதென்றும் நாம் யாவரும் அறிவோம். இந்த 16 அங்குலத்திற்குள் 22 சுருதிகளும் வரவேண்டும். அவைகளில் ஆரம்ப நாதத்திற்கு ஒன்றற்கொன்று படிப்படியாய்த் தீவிரமாயிருக்க வேண்டும். உண்டாகும் நாதங்கள் ஒன்றற்கொன்று உயர்ந்து வருவது மாத்திரமல்ல, இடைவெளிகளில் வேறு சுரம் உண்டாகாதபடி கிரமப்பட்டுத் தந்தியின் பாதியில் முடிய வேண்டும். ஆகையால் முன் காட்டிய அட்டவணையில் 6வது கலத்தில் தந்தியின் பாதி அளவில் 22 சுருதிகளும் வரக்கூடிய பாகங்களைக் கொண்டே கண்டுபிடிப்பது நல்லது. தந்தியின் மேருவில் ஒன்றென்று வைத்துக் கொண்டால் அந்த இடத்திலேயே 32 அங்குலம் முடிகிறது. அதுவே 1 x 32 = 32 என்பதாகும். இது அட்டவணையில் 7 வது கலத்தில் முதல் அளவு. முதல் சுருதி அதாவது ஷட்ஜமத்தின் நாலு சுருதிகளில் இரண்டாம் சுருதி தந்தியின் முழு அளவில் .9689844 என்று 6வது கலத்தின் இரண்டாவது லக்கமாக வருகிறது. இதை 32ஆல் பெருக்கினால் (.9689844 வூ 32) 31.007501 என்று அதற்கு எதிரிலுள்ள 7 வது கலத்தில் இரண்டாவது அளவாக வரும். இது போலவே 6 வது கலத்திலுள்ள 2, 3, 4, 5 முதலிய சுருதியின் ஸ்தானங்களை 32 ஆல் பெருக்க ஒவ்வொரு சுரமும் தந்தியின் இத்தனையாவது அங்குலத்தில் வருகிறதென்று காட்டக்கூடிய அளவுகள் கிடைக்கும். 22வது ஸ்தானத்திலுள்ள .5 என்ற எண்ணை 32 ஆல் பெருக்க (.5 வூ 32) 16 என்று வருவதைக் காணலாம். இப்படிக் கிடைத்த அளவை அட்டவணையின் 7 வது கலத்தில் காட்டியிருக்கிறோம். இந்த அளவுகளை நாம் கவனித்துப் பார்ப்போமேயானால் ஒன்றிற்கும் மற்றொன்றிற்குமுள்ள ஒற்றுமை நன்றாக விளங்கும். சுருதிகளில் ஒன்றற்கொன்றுள்ள ஒற்றுமை. முதலாவது கலமாகிய சுருதி ஸ்தானங்களிலுள்ள 1, 2, 3, 4, 5 என்ற எண்கள் எப்படி ஒன்றற்கொன்று கிரமமான அளவில் வருகிறதோ எப்படி ஒன்றற்கொன்று ஒவ்வொன்று அதிகப்பட்டு வருகிறதோ, அப்படியே அதன் பின் வரும் கலத்திலுள்ள யாவும் ஒன்றற்கொன்று ஒற்றுமைப்பட்டு வருகிறதென்பதை நாம் பிரத்தியட்சமாய்க் காணலாம். இதில் எந்த ஸ்தானத்திலிருந்தென்றாலும் ஒவ்வொரு சுருதியைக் கூட்டிக் கொண்டு போகலாம். அளவில் வேறு விதமான பேதம் உண்டாகமாட்டாது. ஒன்றிற்கும் நாலுக்கும் எப்படியோ அப்படியே நாலுக்கு ஏழாகும். நாலுக்கு ஏழு எப்படியோ அப்படியே ஏழிற்குப் பத்தாகும். ஒன்றிற்கு ஐந்து எப்படியோ அப்படியே ஐந்திற்கு ஒன்பதும், ஒன்பதிற்குப் பதின்மூன்றும் பதின்மூன்றிற்குப் பதினேழும் பதினேழுக்கு இருபத்தொன்றும் வரும். ஒன்றிற்கு ஒன்பது எப்படியோ அப்படியே
|