என்றாலும், கணக்கின் நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி இதற்கு முன் சுருதியில் சந்தேகமுண்டானது போல இனி எக்காலத்திலும் உண்டாகாதிருக்கும்படி, கூடியவரை நாலு இடங்களையாவது கவனிப்பது மிகவும் நலம். இதன் முன் இரண்டின் துருவம் .3010300 என்று எடுத்துக் கொண்டது போல .3010300 என்ற துருவத்திற்கு லக்கம் இரண்டு வருவதாகப் பிரத்தியட்சமாய் அறிந்து கொள்வோம். துவாவிம்சதி சுருதிகளின் ஓசையின் அலைகளின் கணக்கு. முதல் ஸ்தாயி ஒன்றானால் அதன் மேல் ஸ்தாயி இருமடங்காயிருக்க வேண்டுமென்பது சாரங்க தேவரின் அபிப்பிராயம் என்பதை நாம் அறிவோம். ஆதார ஷட்ஜம் ஒன்றானால் தார ஷட்ஜம் இரண்டாயிருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இரண்டு வரைக்குமுள்ள இடைவெளியில் எப்படி 22 சுருதிகளும் வருகின்றனவென்று பார்த்தோம். அப்படியே ஆதார ஷட்ஜம் 540 ஓசையின் அலைகளையுடையதாயிருக்கும். 540 ஓசையின் அலைகளிலிருந்து மற்றொரு 540 ஓசையின் அலைகள் எப்படி படிப்படியாய் 22 ஸ்தானங்களிலும் வேறு இடைவெளிகள் வராமல் ஓசை சமமாக வந்தனவென்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆதார ஷட்ஜம் ஒன்றானால் அதற்கு 540 ஓசை அலைகள். இதையே 1 வூ 540 = 540 என்று ஐந்தாவது கலத்தின் முதல் எண்ணாகக் குறித்திருக்கிறோம் என்று அறிய வேண்டும். அப்படியே நாலாவது கலத்தில் முதலாவது சுருதி துருவத்திற்கு வரும் எண்ணாகிய 1.032008 ஐ 540 ஆல் பெருக்க 557.28432 (1.032008 வூ 540 = 557.28432) என்பதாகும். இரண்டாவது சுருதி துருவத்தின் எண்ணாகிய 1.065041 ஐ 540 ஆல் பெருக்க 575.12268 (1.065041 வூ 540 = 575.12268) என்று வரும். இப்படியே 3, 4, 5 முதலிய 22 சுருதி துருவத்திற்கும் வரும் எண்களை 540 ஆல் பெருக்க அட்டவணையில் 4வது கலத்திற்கு எதிரிலுள்ள ஐந்தாவது கலத்தின் ஓசையின் அலைகளின் எண்கள் கிடைக்கும். இது 22வது சுருதி ஸ்தானத்தில் 2 வூ 540 = 1080 என்று முடிகிறது. இது வரையும் தந்தியின் அளவில் எந்தெந்த இடத்தில் சுருதிகள் வருகின்றனவென்றும் ஒவ்வொரு சுருதியும் இத்தனை ஓசையின் அலைகளுடையதாயிருக்கிறதென்றும் நாம் பார்த்தோம். சுருதி ஸ்தானங்களின் அளவை தசாம்ச பின்னமாகவே வைத்துக் கொள்வது மிகவும் நலமாகும். அதில் ஒன்று, இரண்டு, மூன்று, நாலு இடங்களை இஷ்டப்படி நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதைப் பின்னமாக்கிக் கொள்ளுவோமானால் மொத்தத்தில் கூடி வரும் பொழுது கணக்கில் மிகுந்த பேதமுண்டாகிவிடும். 22 சுருதிகள் 32 அங்குல தந்தியில் இன்ன பாகத்தில் வருகிறதென்று காட்டும் கணக்கு. இனிமேல் ஒரு தந்தியின் நீளம் 32 அங்குலமென்று வைத்துக் கொள்வோமேயானால் எந்தெந்த அளவில் சுருதி ஸ்தானங்கள் வருகிறதென்று நாம் அறிய வேண்டும். ஒரு தந்தியின் நீளத்தில் முதலில் ஆதார ஷட்ஜமும் அதன் பாதியில் தார ஷட்ஜமும் கிடைக்கின்றன. ஆகையினால் ஒரு தந்தியின் பாதிக்குள் அதாவது ஒன்றிலிருந்து அரைக்குள்ளாக 22 சுருதிகளும் எப்படித் தந்தியின் அளவில் குறைந்து குறைந்து 1/2 ஆக வருகின்றனவென்று நாம் கவனிக்க வேண்டும். ஆதார ஷட்ஜம் 540 ஓசையின் அலைகளையுடையது. அது ஒன்றாகிய மேருவில் பேசுகிறது. முதல் சுருதி 557.28432 ஓசையின் அலைகளையுடையதென்று அட்டவணையில் ஐந்தாவது கலத்தில் காட்டியிருக்கிறோம். 540 ஐ 557.28432 என்ற எண்ணினால் வகுக்க (540/557.2843) நமக்குக் கிடைப்பது .9689844 என்பதாம். அப்படியே இரண்டாவது சுருதியின் ஓசையின் அலைகளாகிய 575.12268ஐக் கொண்டு 540ஐ வகுக்க (540/575,12268)
|