இதன்முன் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றிப் பல கனவான்கள் சொல்லும் அபிப்பிராயங்களைச் சேர்த்துப் பார்த்தல். 1. சகஸ்திரபுத்தி அவர்கள் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டு மென்பதை ஒப்புக்கொண்டு மத்திய ஸ்தாயியை 22 அங்குலமாக வைத்து ஒரு அங்குலத்துக்கு ஒரு சுருதி நிற்கிறதென்று சொல்லுகிறார். இவர் முறைப்படி தந்தியின் நடு மத்தியாகிய 11ம் அங்குலத்தில் மத்திமம் வருகிறது. அப்படியானால் மத்திமம் 9 சுருதிகள் கொண்டது என்று சொன்ன சாரங்கர் முறைக்கு இது பேதப்படுகிறது. அது போலவே 13 சுருதி பெற்ற பஞ்சமமும் 15வது அங்குலத்தில் அதாவது 15வது சுருதியில் வருகிறது. இது சாரங்கர் முறைக்கு ஒத்து வரமாட்டாதென்று தெரிகிறது. 2. ராஜா சுரேந்திரமோகன் தாகோர் அவர்கள் சாரங்கர் அபிப்பிராயப்படியே ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளிருக்கிறதென்று ஒப்புக்கொண்டு ஒரு ஸ்தாயியை சமபாகமாகப் பிரித்து மத்திமத்தின் கீழுள்ள பாகத்தை 9 சம பாகமாகவும், மத்திமத்தின் மேலுள்ள பாகத்தை 13 சம பாகமாகவும் பிரிக்கிறார். சங்கீத ரத்னாகரர் இப்படிச் சமபாகம் பிரிக்கவில்லை. மேலும் முந்தின 284வது பக்கம், முதலாவது அட்டவணையில் ரிஷப காந்தாரங்களுக்குரிய சென்ட்ஸ்கள் 254ம் 347 மாக சகஸ்திரபுத்தி கணக்கில் வருகிறது. தாகோருக்கோ 316ம், 435மாக சென்ட்ஸ்கள் வருகின்றன. இப்படியே மற்றும் சுரங்களும் பேதப்பட்டிருக்கக் காண்கிறோம். 3. K. B. தேவால் அவர்கள் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளிருக்கிறதென்று ஒப்புக்கொண்டு மத்திய ஸ்தாயியின் பாதி மத்திமமென்றும் (மொத்த தந்தியில் (3/4) என்றும்) பஞ்சமம் மொத்த தந்தியில் (2/3) என்றும் வைத்துக் கொண்டு ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் கண்டுபிடிக்கிறார். ச-ப, ச-ம முறைப்படி வாதி சம்வாதி விதிப்படி சுருதிகள் வருகின்றனவென்று சொன்னாலும் ச-ப, ச-ம முறைப்படி ஒரு ஸ்தாயியில் 22 வரவேண்டுமென்று சொல்லவேயில்லை. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்று சொன்ன சாரங்கர் ச-ம (3/4) என்றும், ச-ப(2/3) என்றும் அளவு சொல்லவேயில்லை. மேலும் (3/4) ,(2/3) ஆக ஒரு ஸ்தாயியில் சுருதிகள் கண்டுபிடிக்கும் முறையை பைதாகோரஸும் பாரிஜாதக்காரரும் சொல்லியிருந்தாலும் (2/3) ,(2/3)X(2/3) என்ற முறைப்படி ஒரு ஸ்தாயி முழுவதிலும் போகாமல் ச-ப, ப-ரி, ரி-த, த-க என்றதில் 4 வது அடுக்கில் கிடைக்க வேண்டிய சரியான 3033/4 க்குப் பதிலாக 33/4 ஐத் தள்ளிவிட்டு 300 ஓசையின் அலைகளையும், அப்படியே க-நி என்ற ஐந்தாவது அடுக்கில் 4555/8 என்ற சரியான அளவுக்குப் பதில் 55/8 ஐத் தள்ளி 450 ஓசையின் அலைகளையும் கொடுக்கிறார்கள். இவ்வாறு கொடுப்பது காந்தாரம் ஒரு தந்தியில் (4/5)ல் வரவேண்டுமென்றும், நிஷாதம் (8/15) ல் வரவேண்டுமென்றும் ருசுப்படுத்துவதற்காகவே. இது கர்நாடக சங்கீதத்திற்குப் பொருந்தியதுமல்ல. சாரங்கர் முறைப்படி செய்ததுமல்ல. 4. E. கிளமென்ட்ஸ் அவர்கள், ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்ற K. B. தேவால் அவர்களின் அபிப்பிராயத்தையே அனுசரித்து எழுதியிருப்பதாலும் 306ம் பக்கம் 4-வது அட்டவணையில் பதினோராவது பத்தொன்பதாவது சுருதி ஸ்தானங்களைப் புதிதாகச் சேர்த்து 24 என்று சொல்வதினாலும் இது சாரங்கர் சுருதி முறைக்கு ஒத்ததல்லவென்று சொல்ல வேண்டும்.
|