5. சாரங்கர் சுருதியின் முறைப்படி (1) ஷட்ஜ (2) மத்திம (3) காந்தார கிராமம் மாற்றும்போது கூடுதலான 3 சுரங்கள் கிடைத்தாகச் சொல்லுகிறார். அவற்றை 309ம் பக்கம் 5-வது அட்டவணை 10, 16, 1 என்ற இடங்களில் காண்போம். சாரங்கர் முறைப்படி 22 சுருதிகள் சேர்த்து கிரகம் மாற்றினால் இப்படி வேறு சுருதிகள் உண்டாகமாட்டாதென்று 310ம் பக்கத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். 6. ராவ் பகதூர் C நாகோஜிராவ் அவர்கள், ஒரு ஸ்தாயியில் 22 சுருதி என்பதை ஒப்புக்கொண்டு, ச-ப2/3 என்றும், ச-ம3/4 என்றும் போன தேவால் அவர்களின் அபிப்பிராயத்தையே அனுசரித்திருக்கிறார்கள். இது சங்கீத ரத்னாகரருடைய சுருதி முறைக்கு ஒத்ததல்ல. கர்நாடக சங்கீத முறைக்கு 2/3 , 3/4 என்ற முறை ஒத்துவரமாட்டாது என்று நினைக்கிறேன். 7. (a) சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் உண்டு என்ற சாரங்கர் அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளுகிறார். பாரிஜாதக்காரரும் பைதாகோரஸும் சொல்லும் ச-ப, 2/3 ச-ம 3/4 என்னும் அளவுகளைக் கொண்டு ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் கண்டுபிடிக்கிறார். அவைகளில் பைதாகோரஸையும், உவாட்சனையும் அனுசரித்து பாரிஜாதக்காரருடைய சில சுலோகங்களை மாற்றி 22 என்று கொடுத்திருக்கிறார். 334-வது பக்கம் 7-வது அட்டவணையில் காண்போம். இது முற்றிலும் சங்கீத ரத்னாகரர் துவாவிம்சதி சுருதி முறையுமல்ல. சங்கீத பாரிஜாதக்காரர் முறையுமல்ல. பைதாகோரஸ் உவாட்சன் சொல்லிய சுருதி முறைகளையாவது முற்றிலும் ஒத்திருக்கவுமில்லை. கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் ஒவ்வாததென்றே சொல்ல வேண்டும். (b) 336-வது பக்கம் 8-வது அட்டவணை 21-வது கலத்தில் ஷட்ஜம-பஞ்சம முறையாய்ப் போகும் போது ஐந்தாவது அடுக்கில் த1 க்குப் பின் க1 வரவேண்டுமென்பதற்காகவும், 17-வது அடுக்கில் த2 க்குப்பின் க2 வர வேண்டியதற்காகவும் கூட்டல் கழித்தல் கணக்குகளில் வேண்டுமென்று பிசகு செய்கிறார். (c) 338-வது பக்கம் 9-வது அட்டவணையில் ச-ப, ச-ம முறைப்படி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் கிடைக்கின்றனவென்று சொல்லுகிறார். அம்முறைப்படி ஒரு ஸ்தாயி பூரணப்படவில்லை. 2/3 ன் பெருக்குப் பலனாக சுரங்கள் முன் பின்னான அளவுடன் வருவதையும் சில இடங்கள் விட்டுப் போவதையும் 340-வது பக்கம் 10-வது அட்டவணையில் காண்போம். (d) ஒரு ஸ்தாயியில் ச-ம முறைப்படி 53 சுருதிகள் தமது நூதன முறையால் கண்டு பிடித்ததென்று சொல்வதை 346, 347 வது பக்கங்களில் 11-வது அட்டவணையில் காட்டியிருக்கிறோம். இதில் இரண்டாவது பாகத்தில் அவர்கள் குறித்திருக்கும் பெயர்களைக் காண்போம். 17-வது சுருதியிலிருந்து 35-வது சுருதி வரையும் எவ்விதமான பெயரும் சொல்லப்படவில்லை. ஆனால் ச-ப முறையாய் ஆரோகண கதியாய் முதல் பன்னிரு சுரங்களும் அவரோகண கதியாய் ச-ம முறைப்படி 12 சுரங்களும் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் ச-ப முறையாயும் ச-ம முறையாயும் கண்டுபிடிக்கும் சுரங்கள் ஒரே அளவுடையவையாயில்லை என்பது சென்ட்ஸ்களினால் தெரிகிறது. (e) 349-வது பக்கம் 12-வது அட்டவணையில் ச-ம முறைப்படி தாம் புதிதாய்க் கண்டுபிடித்த 22 சுருதிகள் கிடைத்தனவென்று சொல்லுகிறார். அவற்றில் மத்திமத்தின் 3 சுருதிகளைத்
|