பக்கம் எண் :

511
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

தவிர மற்றவை நாகோஜிராவ் அவர்களின் அட்டவணையாகவேயிருக்கின்றன. ஆனால் தாம் ச-ம முறையாய் 53ல் பொருக்கிக் கொண்ட 22க்கும் இவைகளுக்கு மிகுந்த பேதமுண்டு.

(f) 353-வது பக்கம் 13-வது அட்டவணையில் ச-ம முறையில் 53 ஸ்தானங்கள் போய் பொருக்கிக் கொண்ட 22 சுருதிகளுக்கும் (7வது கலம்) இவர் கொடுக்கும் பின்னக் கணக்குக்கும் (10-வது கலம்) மிகுந்த பேதமிருக்கிறது. 9-வது கலத்தில் பேதங்கள் காட்டப்பட்டிருக்கிறது.

(g) 356 வது பக்கம் 14 வது அட்டவணையில் ச-ப, ச-ம முறையாய் தாம் கண்டுபிடித்த 53 சுருதிகளில் கிடைக்கும் 22 சுருதிகளையும் 4 வது கலத்தில் காண்போம். ச-ப, ச-ம முறையாய் 22 முறை போகும்போது ஒரு ஸ்தாயி பூர்த்தியடைகிறதில்லை என்று கண்டு இதில் பாதி அதில் பாதியாய் நிரவுகிறார். இப்படி வந்தாலும் 12-ம் இடத்திற்குக் கீழ்வரும் ம3 க்கும் 10-ம் இடத்திற்குக் மேலுள்ள ம3 க்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறது. அதாவது 157 சென்ட்ஸ்கள் பேதப்படுகின்றன. ஆகையினால் இது சரியான முறையல்ல. தொட்ட இடத்திற்கே திரும்பி வருமானால் மாத்திரம் ஒரு ஸ்தாயி பூர்த்தியாகும். பூர்த்தியாகாத ஒரு முறை தப்பென்றே சொல்ல வேண்டும். சங்கீத ரத்னாகரரின் கருத்துப்படி ச-ப 13 சுருதியாகப் போகும் பொழுதும், ச-ம 9 சுருதியாகப் போழும்பொழுதும், ஒரு ஸ்தாயி மிச்சமின்றித் தொட்ட இடத்திலே முடியுமென்பதையும் ச-ப 31 ஸ்தாயிலும், ச-ம 22 ஸ்தாயிலும் ஒருக்காலும் முடிவடையாதென்பதையும் 359-வது பக்கம் 15-வது அட்டவணையிலும், 360-வது பக்கம் 16-வது அட்டவணையிலும் காட்டியிருக்கிறோம்.

(h) 369-வது பக்கம் 17-வது அட்டவணையில் ச-ப  முறை 702 சென்ட்ஸாகவும், ச-ம3/4 முறை 498 சென்ட்ஸாகவும் போகும்பொழுது, ச-ப வில் 5-வது அடுக்கில் 2 சென்ட்ஸ்களைக் குறைத்தும், ச-ம வில் 4 வது அடுக்கில் 2 சென்ட்ஸ்களைக் கூட்டியும் கணக்குக் காட்டியிருக்கிறார். இப்படி அங்கொன்றும் இங்கொன்றும் கூட்டிக் குறைக்க வேண்டிய நியாயமில்லை. இது 366-வது Just intonation பக்கம் என்னும் ஐரோப்பிய முறைப்படி ஆரிய சங்கீத முறையிருக்கிறதென்று ருசுப்படுத்துவதற்காகவே. அம் முறையை 371-வது பக்கம் 18-வது அட்டவணை 7-வது கலத்தில் காண்போம்.

(i) 365-வது பக்கத்தில் மத்திமத்திலிருந்து ச-ப2/3முறையாய்ப் போகும் பொழுது கிடைக்கும் மத்திமத்திற்கு நெருங்கிய 2-வது சுரத்தையும், சுத்த மத்திமத்திலிருந்து ச-ப முறையாய் அவரோகணகதியாய்ப் போகும்பொழுது 12 வதாகக் கிடைக்கும் ஷட்ஜமத்திற்கு நெருங்கிய 12 வது சுரத்தையும் நம் முன்னோர்கள் எடுக்கவில்லை என்கிறார். நம் முன்னோருடைய அபிப்பிராயத்திற்கு மேற்கோள் ஒன்றுஞ் சொல்லவில்லை. இவர் தள்ளிவிட்ட சுரங்கள் இன்னவையென்று 371-வது பக்கம் 18-வது அட்டவணையில் 10-வது லக்கத்திலும் 23-வது லக்கத்திலும் காட்டியிருக்கிறோம். இந்த 10-வது 23-வது லக்கங்களுக்கு வரும் இடைவெளிகள் குறைந்தவைகள். ஆகையினால் நம் முன்னோர்கள் எடுக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறுதல். 20 சென்ட்ஸ்களுக்கும் 22 சென்ட்ஸ்களுக்கும் 24 சென்ட்ஸ் குறைந்ததல்ல.

(j) 374-வது பக்கத்தில் வைதீக சம்பிரதாயம், சுவய சம்பிரதாயம் லௌகீக சம்பிரதாயம் என்று மூன்று சம்பிரதாயங்களைப் பற்றிச் சொல்லுகிறார். அதி்ல் வைதீக சம்பிரதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய சென்ட்ஸ்களையும் சாமவேத சம்பிரதாயத்திற்குரிய சென்ட்ஸ்களையும்