375-வது பக்கத்தில் பார்க்கலாம். சாமவேத சம்பிரதாயமும் வைதீக சம்பிரதாயமும் வெவ்வேறு சுருதிகளுடையதாயிருக்கிற தென்பதைக் காண்கிறோம். அப்படியானால் 4 சம்பிரதாயங்கள் இருக்க வேண்டும். ச-ம முறைப்படியாய்ப் போன வைதீக சம்பிரதாயமும் Just intonation என்று ஒரு ஸ்தாயியில் 27 சுரங்கள் என்று போன மேற்றிசையார் கொடுத்த சாமவேத சம்பிரதாயமும் மிகுந்த வித்தியாசமுடையதாயிருக்கின்றன. சாமவேத சம்பிரதாயம் லௌகீகத்திற்குரியதோ? வைதீகத்திற்குரியதோ? அல்லவோ? இதற்கு முன் 353-வது பக்கம் 13-வது அட்டவணையில் 10-வது கலத்தில் 2, 4, 6, 8, 11, 13, 16, 18, 20, 22, 24, 27 என்ற வரிகளில் வரும் சென்ட்ஸ்களே சாம வேதத்திற்குரியதாகச் சொல்லுகிறார். அதே அட்டவணையில் 7-வது கலத்தில் 2, 4, 6, 8, 11, 13, 16, 18, 20, 22, 24, 27 என்ற வரிகளில் வருகிற சென்ட்ஸ்களுக்குரிய சுரங்களை வைதீக சம்பிரதாயம் என்கிறார். ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்ற சாரங்கர் சொல்லும் சுருதிகளில் இப்படிப் பிரிக்கப்படவில்லை. ச-ம முறையாய் 53 சுருதிகள் கண்டுபிடித்து அவர் அதில் 12 சுரங்களைப் பொருக்கவுமில்லை. 2/3 , 3/4 என்ற முறையாய் சாஸ்திரிகள் கண்டுபிடித்த பின்னங்களும் பைதாகோரஸின் பின்னமும் சேர்ந்து சாம வேதமாய் விளங்குகின்றன. இன்னும் என்னென்ன விபரீதங்கள் சாம வேதத்திற்குரியதென்று சொல்லப் போகிறாரோ? ச-ம முறைப்படிக் கிடைத்த பன்னிரு சுரங்களையும் சாம வேதத்திற்குரியதென்று சொன்னால் ஒருவாறு பொருத்தமாயிருக்கும். சாம வேதத்தில் முக்கியமாய் வழங்கும் சதுர் சுருதி ரிஷபமும் தைவதமும் சரியான அளவில் வரவில்லை. இப்படியே மற்ற சுரங்களும் பேதப்பட்டு வருகின்றன. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளிருக்க வேண்டுமென்று சொன்னவர் வைதீக சம்பிரதாயத்திலும் சாமவேத சம்பிரதாயத்திலும் 12 சுரங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டதற்கும் மற்றவைகளைச் சொல்லாமல் விட்டதற்கும் காரணம் சொல்லவில்லை. (k) 382-வது பக்கம் 20-வது அட்டவணை ச-ம முறைப்படிக் கிடைக்கும் 53 சுருதிகளே ச-ப முறையிலும் கிடைக்கிறதென்று சொல்லும் அபிப்பிராயம் முற்றிலும் ஒவ்வவில்லை என்று தெளிவாய்க் காட்டுகிறது. அதோடு ஒரு ஸ்தாயியில் 53 சம பாகங்களாகப் பிரித்துச் சொல்லும் மேற்றிசையாரின் கணக்குகளுக்கு இவர் கணக்கு ஒத்து வரவில்லையென்று காட்டியிருக்கிறது. அவ்வட்டவணையிலேயே இவர் பல தடவையிலும் பல விதமாகச் சொல்லும் 78 சுருதிகளும் அவைகளுக்கு இவர் வியாசத்தைக் கொண்டு மேற்கோளும் காட்டப்பட்டிருக்கின்றன. 8. (a) தஞ்சாவூர் பஞ்சாபகேச பாகவதர் அவர்கள் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்ற சாரங்கருடைய அபிப்பிராயத்தின் படி கர்நாடக சங்கீதத்திலும் வழங்க வேண்டுமென்று சொல்லுகிறார். ச-ப 31, ச-ம 22 முறைப்படியும், ச-க 17 முறைப்படியும் ஒரு ஸ்தாயியின் 53 சுருதிகள் கிடைக்கின்றனவென்றும், அதில் 22 ஐ நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவைகளே கர்நாடக சங்கீதத்தில் வழங்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். அதில் வலமுறையாகச் செல்லும் தேவதத்தனும் இடமுறையாகச் செல்லும் தானவதத்தனும் 11, 11 படிகள் போன பின் சாரங்கர் சொன்ன துவாவிம்சதி சுருதிகளின் பெயர்களையுடைய படிகள் கிடைக்காமல் பாதாளத்திற்குப் போய்விடுகிறார்கள். இம் முறை பிசகென்றும் 12 வது 12 வதாகக் கிடைக்கும் சரியான இடங்கள் சுப்பிரமணிய சாஸ்திரிகளால் விடப்பட்டிருக்கின்றனவென்றும் 369-வது பக்கம் 17-வது அட்டவணையிலும், 371-வது பக்கம் 18-வது அட்டவணையிலும் காட்டியிருக்கிறோம். (b) 3861/3 சென்ட்ஸ்களுள்ள 4/5 ஆகிய ச-க முறைப்படி 53 சுருதிகள் கிடைக்கின்றனவென்று சொல்வதும் முற்றிலும் தவறுதலாயிருக்கிறதென்று
|