410 வது பக்கம் 23 வது அட்டவணையில் காட்டியிருக்கிறோம். ச-ப, ச-ம முறையாக சங்கீத ரத்னாகரரின் கருத்தின்படி இவைகள் செய்யப்பட்டனவல்ல என்று 411 வது பக்கம் 24 வது அட்டவணையில் காட்டி இவர் சொல்லும் முறை சாரங்கதேவரின் கருத்தல்ல, கர்நாடக சங்கீதத்திற்கு உபயோகமுமல்ல என்று சொல்லியிருக்கிறோம். 9. பூவனூர் பிரதாப ராமசாமி பாகவதர் அவர்கள், தென்னிந்திய சங்கீதத்தில் 22 சுருதிகள் வழங்குகிறதென்று சங்கீத ரத்னாகரரின் கருத்தை ஸ்தாபிக்க வந்தவர், அவர் கருத்திற்கு முற்றிலும் ஒவ்வாத பாரிஜாதக்காரரின் கருத்தைச் சொல்வதினால் அதாவது (2/3) ,(3/4) ,(4/5) ,(5/6) என்ற அளவுடன் பிரிக்கச் சொல்லுவதினால் இம்முறைக்கும், சங்கீத ரத்னாகரர் முறைக்கும், தற்காலம் கர்நாடக சங்கீதத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒரு ஸ்தாயியில் 16, 17, 18, 19, 22, 29 சுருதிகள் வரலாமென்று அவர் கொடுத்த 25, 26, 27, 28, 29, 30, 31 முதலிய அட்டவணைகளில் காணப்படுவதாலும் சங்கீத ரத்னாகரர் சுருதிகள் 1, 2, 3, 4, 9, 22, 66 அனந்தம் என்று சொல்வதாலும் நினைத்தவர் நினைத்தபடி சொல்லலாம் என்று ஏற்படுகிறது. ஒரு ஸ்தாயியில் 22 தான் வர வேண்டுமென்று நிச்சயிப்பது கூடாத காரியம் என்று தோன்றுகிறது. 10. S. மாணிக்க முதலியார் அவர்கள் வீணை சுருதி சேர்க்கும் முறையில் சுருதி ஞானமுள்ளவர்களுக்கு ஒரு முறையும் சுருதி ஞானமில்லாதவர்களுக்கு ஒரு முறையும் சொல்லுகிறார். அதில் சுருதி ஞானமில்லாதவர்களுக்குச் சொல்லும் 3/4 முறையானது, பைதாகோரஸ் பாரிஜாதக்காரர் இதன்முன் கண்ட மற்றவர்கள் சொல்லும் என்ற ச-ம முறைக்கு ஒத்திருக்கிறது. ஆகையினால் 3/4 என்ற ஒரு மோட்டா அளவைக் கொண்டு கண்டுபிடிக்கும் சுரங்கள் சரியானவையல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. 11. சங்கீத பாரிஜாதக்காரர் சங்கீத ரத்னாகரருடைய துவாவிம்சதி சுருதியை ஒப்புக் கொண்டாலும் நாரதர் முறைப்படிச் சொல்லுகிறேன் என்று தந்தியில் (2/3), (3/4), (5/6) என்ற அளவு போடுகிறதைக் கவனிக்கையில் சங்கீத சந்திரிகை எழுதிய மாணிக்க முதலியார் சுரஞானமில்லாதவர்களுக்குச் சுருதி சேர்க்கும் முறையென்று சொல்லும் முறைப்படியே இதுவுமிருக்கிறதென்று சொல்ல வேண்டும். 12. பண்டர்க்கார் அவர்கள் தம்முடைய சொந்த அபிப்பிராயத்தின் படி சுருதி சொல்லும் 34-வது அட்டவணையையும் பாரிஜாதக்காரரின் அபிப்பிராயப்படி சுருதி சொல்லும் 35-வது அட்டவணையையும் நாம் பார்க்கும்பொழுது சில இடங்களில் அவைகள் வித்தியாசப் படுகிறதாயிருந்தாலும் (2/3) ,(3/4) ,(4/5) ,(5/6) என்ற முறையை அநுசரித்தே போகிறது. ஆனால் ஒரு ஸ்தாயியில் 12 சுரங்களை மாத்திரம் குறிக்கிறதாகத் தெரிகிறது. இவர் இந்துஸ்தானி சங்கீதத்திற்கே இப்படி வருகிறதென்று சொல்லுகிறதினால் இது கர்நாடக சங்கீதத்திற்கு ஏற்றதல்ல. மேலும் தீவிரம், கோமளம் என்ற பெயர்களை இந்துஸ்தானி சங்கீதத்திலிருந்து எடுத்துச் சொல்வதாகச் சொல்லுகிறார். ஆகையினால் இது கர்நாடக சங்கீதத்திற்குப் பொருந்தியதல்ல, சாரங்கர் முறையுமல்ல. 13. G. G. பார்வ் அவர்கள் பாரிஜாதக்காரரின் அபிப்பிராயத்தின்படி (2/3), (3/4), (5/6) என்ற கிரமத்தில் ஒரு ஸ்தாயியில் பன்னிரு சுரங்கள் கண்டுபிடிக்கிறார். அவர் கண்டுபிடிப்பதில் பாரிஜாதக்காரரின் சுலோகத்தின் மற்றொரு விதமான அர்த்தத்தைக் கொண்டு ரிஷப ஸ்தானத்தில் 151, 99 சென்ட்ஸ் வரும் இரண்டு ஸ்தானங்களைப் புதிதாகச் சொல்லுகிறார். இதில் 99 சென்ட்ஸ்களுள்ள
|