யிலும் அணுப்பிரமாணமும் கூடாமலும் குறையாமலும் வரக்கூடிய நுட்பமான ஒரு அளவுடையதாயிருக்க வேண்டும். அப்போது தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் நமக்குக் கிடைக்கும். சுருதிகளைப் பற்றிய சந்தேகம் யாவும் நீங்கும். மேற்காட்டிய இரு குறிப்புகளையும் கவனித்துச் சுருதி சேர்த்தால் ஒரு ஸ்தாயியில் இத்தனை சுருதிகள் வரலாமென்றும் அவைகள் இன்னின்ன அளவோடு வர வேண்டுமென்றும் நிச்சயிப்பதற்கு அனுகூலமாயிருக்கும். ஒரு ஸ்தாயியில் வரும் சுருதிகளை நிச்சயிக்கையில் சாரங்கர் முறைப்படி போனால் மாத்திரம் அவைகள் கிரகசுரம் பாடுவதற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் பொருத்தமாயிருக்கும். சற்றேறக்குறைய 2/3, 3/4ஆன பஞ்சம மத்திம முறைப்படிப் போகாமற் போனால் கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் ஒவ்வாது. ஆகையினால் சாரங்கர் சுருதி சேர்க்கும் முறையிலுள்ள ரகசியத்தின்படியும் 2/3, 3/4 என்று சுரஞானமற்றவர்களுக்குச் சொல்லும் அளவின்படி போகாமல் அதிலும் நுட்பமான ச-ப, ச-மவின் முறைப்படியும் சுருதிகள் எப்படி வருகின்றனவென்று பார்க்க வேண்டும். இப்படி இரு முறைகளையும் சேர்த்து நிச்சயம் பண்ணுவதற்கு முன் தென்னிந்திய சங்கீதத்தில் மிகத் தேர்ந்தவர்களும் இந்தியாவிற்குப் பூர்வகுடிகளுமான தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழில் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயத்தை ஒருவாறு சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமென்று எண்ணுகிறேன்.
|