பக்கம் எண் :

524

கடவுள் துணை


கருணாமிர்த சாகரம்.

முதல் புஸ்தகம்.

3-வது பாகம்.
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள்.
முகவுரை.

சிர்பெற்றிலங்கிய இந்தியா தேசத்தின் சங்கீதம் ஒரு காலத்தில் மிக உன்னத நிலை பெற்றிருந்ததென்றும் அது வரவரக் குறைந்த காலத்தில் அதைப் பற்றி எழுதிய சாஸ்திரங்களும் தற்கால வழக்கத்துக்கு ஒத்து வராதவையென்று பலர் சொல்லும்படியான நிலைக்கு வந்தனவென்றும் இதன் முன் பார்த்தோம்.

பூர்வ நூல்களின் அபிப்பிராயத்தை உள்ளது உள்ளபடி அர்த்தம் செய்து, பழையபடி அதை மேலான நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்று அநேக கனவான்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்களென்றும் அவர்கள் சாரங்க தேவர் கருத்தின்படி சுருதி சேர்க்காமல் வெவ்வேறு விதமாய்த் தங்கள் மனம் போல் செய்திருக்கிறார்களென்றும் இதன் முன்னுள்ள அட்டவணைகளில் தெளிவாகக் கண்டோம்.

அவைகள் யாவையும் பார்த்த நமக்கு யாவராலும் மிக அருமையும் சாஸ்திர முறைமையுமுடையதென்று மதிக்கப்படும் தென்னிந்திய சங்கீதத்திற்குப் பூர்வ தமிழ் நூல்களின் ஆதாரம் ஏதாவது உண்டா என்று விசாரிக்கும் எண்ணம் உண்டாகாமல் போகாது.