மதுரை இருப்புப்பாதைக் குடியிருப்பினுள் அமைந்துள்ள
திருஇருதய ஆலயம், ஞான ஒளிவுபுரத்திலுள்ள புனித
சூசையப்பர் ஆலயம், அண்ணா நகரிலுள்ள அன்னை
வேளாங்கண்ணி ஆலயம் ஆகியவை மதுரை நகரிலுள்ள
இதர முக்கிய கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயங்களாகும்.சீர்திருத்த
கிறித்தவ சபையினரில் லூதர் சபையினருக்கும்
பொன்னகரத்தில் கி.பி. 1893இல் தோற்றுவிக்கப்பட்ட
இரட்சண்ய
ஆலயமும் மத்தியப் பேருந்து நிலையம் அருகில்
பரிசுத்த மீட்பர்
ஆலயமும் உள்ளன. பரிசுத்த மீட்பர் ஆலயம் சுவீடன்
நாட்டினர்
உதவியுடன் கி.பி.1966இல் கட்டப்பட்டது. சீர்திருத்த கிறித்தவ சபையினரின் ஒரு பிரிவினரான
ஆங்கிலத் திருச்சபையினரின் முக்கிய ஆலயம், மதுரை
நகரின் மத்தியில் உள்ளது. இது புனித ஜார்ஜ்
ஆலயம்
எனப்படுகிறது. கி.பி. 1800இல் சிறிய அளவில் கட்டப்பட்ட
இவ்வாலயம் கி.பி. 1880இல் விரிவுபடுத்திக் கட்டப்பட்டது. ஆங்கிலக் கட்டடக் கலையம்சத்தைக் கொண்டுள்ள
இவ்வாலயம், தென்னிந்தியாவிலுள்ள கிறித்தவ ஆலயங்களில்
முக்கிய ஒன்றாகும். மதுரை
நகரில் தென்னிந்தியத் திருச்சபையினருக்கான
ஆலயங்கள் பின்வருமாறு : 1. கீழவாசல் ஆலயம்,
2. தெற்கு வாசல் ஆலயம், 3.மேலவாசலிலுள்ள தூய
இம்மானுவேல் ஆலயம், 4. கரிமேட்டுப் பகுதியிலுள்ள
கிறிஸ்து
ஆலயம், 5. இருப்புப் பாதைக் குடியிருப்பிலுள்ள,
‘திவ்வியப்
பொறுமை’ கிறித்தவ ஆலயம், 6. பொன்னகரத்திலுள்ள
வெப்
நினைவு ஆலயம், 7. அமெரிக்கன் கல்லூரியிலுள்ள சிற்றாலயம்.
இவற்றுள் வெப் நினைவு ஆலயமும் அமெரிக்கன் கல்லூரிச்
சிற்றாலயமும் கட்டடக்கலைச் சிறப்புமிக்கவை. நரிமேட்டில்
புதிய ஒர் ஆலயம் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
|