என்பது சூத்திர மென்னுதலிற்றோவெனின், வட்டப்பாலை மண்டலம் வருமிடத்துச் சாணுக்குச் சாணாக ஒரு வட்டங் கீறிப் பெருந்திசைகளின் மேலே இரண்டு வரம்புகீறி மண்டலஞ் செய்து பன்னிரண்டு கோணமாக வகுப்பது நுதலிற்று. "எதிருமி ராசி வலமிட மாக வெதிரா விடமீன மாக-முதிராத வீராறி ராசிகளை யிட்டடைவே நோக்கவே யேரார்த்த மண்டலமென் றெண்" என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இட்ட பன்னிரண்டு கோணத்திற் பன்னிரண்டி ராசிகளை நிறுத்தினால் இவற்றுள் நரம்புடனியல்வன ஏழென்பதுணர்த்துதனுதலிற்று. "ஏத்து மிடப மலவனுடன் சீயங் கோற்றனுக் கும்பமொடு மீனமிவை-பார்த்து குரன்முதற் றார மிறுவாய்க் கிடந்த நிரலேழுஞ் செம்பாலை நேர்" இவ்வேழும் இடபம், கற்கடகம், சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனமென இவற்றுணிற்கும். "துலைநிலைக் குரலுந் தனுநிலைத் துத்தமு நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையு மீனத் துழையும் விடைநிலத் திளியு மானக் கடகத்து மன்னிய விளரியு மரியிடைத் தாரமு மணைவுறக் கொளலே." இனி இந்நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு : "குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங் குரையா வுழையிளி நான்கு-விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்" எனக் கொள்க. இவற்றுள், தாரத்து உழைபிறக்கும்; உழையிற் குரல் பிறக்கும்; குரலுள் இளிபிறக்கும்; இறியுள் துத்தம் பிறக்கும்; துத்தத்துள் விளரி பிறக்கும்; விளரியுட் கைக்கிளை பிறக்குமெனக் கொள்க. இவற்றுள் முதலிற்றோன்றிய நரம்புதாரம்; இவை விரிப்பிற்பெருகும்; வந்தவழிக் கண்டுகொள்க." "மேற்காட்டிய சூத்திரங்களையும் அவற்றின் உரைகளையும் கவனிக்கும் போது, பின்காட்டிய சக்கரம் போல் ஒன்று செய்து அதை பன்னிரண்டாகப் பிரிக்க, ஒன்று, இரண்டு முதலிய அதாவது மேஷ மாதி மீனமீறாக 12 வீடுகள் அல்லது ராசிகள் அமைகின்றன. இப் பன்னிரண்டு ராசிகளில், இரண்டாவது | வீடாகிய | ரிஷபத்தில் | குரல் | (ச) | இளி | (ப) | என்ற 2 சுரங்களும் | நாலாவது | " | கடகத்தில் | துத்தம் | (ரி) | விளரி | (த) | " | ஐந்தாவது | " | சிம்மத்தில் | கைக்கிளை | (க) | தாரம் | (நி) | " | ஏழாவது | " | துலாத்தில் | உழை | (ம) | குரல் | (ச) | " | ஒன்பதாவது | " | தனுசில் | இளி | (ப) | துத்தம் | (ரி) | " |
|