பக்கம் எண் :

594
யாழ் வாசிக்கும் பொழுது தமிழ்மக்கள் கவனித்துவந்த சில முக்கிய குறிப்புகள்.

2. யாழ் வாசிக்கும் பொழுது தமிழ்மக்கள் கவனித்துவந்த
சில முக்கிய குறிப்புகள்.

பூர்வம் தென்மதுரையிலுள்ளோர் பழகிவந்த யாழ்வகைகளையும் அவர்கள் பழகிவந்த கானத்தில் வரும் சுரங்களின் அலகுமுறையையும் இதன்முன் நாம் பார்த்தோம். யாழ் வாசிக்குங் காலத்தில் யாழைப்பிடிக்க வேண்டியவிதத்தைப் பற்றியும் மீட்டவேண்டிய விதத்தைப் பற்றியும் கமகங்களைப்பற்றியும் இதன்பின் வரும் சிலவரிகளில் பார்ப்போம். அவர்கள் யாழ் என்னும் சிறந்த வாத்தியத்தை வாசிக்குங்காலத்தில் தங்கள் மனம் பரவசப்பட்டுத் தெய்வதியானத்தில் நிற்பதற்கு உதவியாயிருக்கிறதென்று “தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்” என்று கொண்டாடி “செழுங் கோட்டில் மலர் புனைந்து” என்பதற்கிணங்க புஷ்பமாலையினால் அலங்கரித்து மிகுந்த பயபக்தியுடன் வாசித்து வந்தார்கள். நாம் சாதாரணமாக இன்றைக்கும் யாழ் உயிருள்ளவாத்தியமென்றும் மற்றவை ஊமை வாத்தியமென்றும் சொல்லிக்கொள்ளுகிறோம். மக்கள் வாயால் சொல்லும் குறில், நெடில், ஒற்று முதலிய எழுத்துக்கள் தோன்ற பாடக்கூடிய வாத்தியம் யாழ் ஒன்றே என்பதை அறிவாளிகள் அறிவார்கள். இதைப்பற்றி நாம் முழுதும் அறியக் கூடாதிருந்தாலும் பூர்வத்தில் தமிழ்மக்கள் யாழ் வாசிப்பதில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தார்களென்று அறிவதற்கு இவை போதுமானதென்றே நினைக்கிறேன்.

சிலப்பதிகாரம் வேனிற்காதை, பக்கம் 201.
யாழ் வாசிக்கும் முறையை,

“நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி
யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த
தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த்
திருகையின் வாங்கி யிடவயி னிரீஇ,
மருவிய விநய மாட்டுதல் கடனே”

என்பதனானறிக. விநயம்-தேவபாணி.

“வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
யிடக்கை நால்விரன் மாடகந் தழீஇ”

இ-ள், வலக்கையைப் பதாகையாகக் கோட்டின்மிசையே வைத்து இடக்கை நால் விரலான் மாடகத்தைத்தழுவி யென்க. பதாகைக்கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரலெல்லா நிமிர்த்தல்; என்னை?

“எல்லா விரலு நிமிர்த்திடை யின்றிப்
பெருவிரல் குஞ்சித்தல் பதாகை யாகும்”

என்றாராகலின். மாடகம்-வீக்குங்கருவி. அது முன்னர் ஆணியென்பதனுட் கூறினாம்.

“செம்பகை யார்ப்பே யதிர்வே கூடம்
வெம்பகை நீங்கும் விரகுளி யறிந்து”

செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடமென்னு நான்கினும் செம்பகை தாழ்ந்த விசை = இன்பமின்றி இசைத்தல். ஆர்ப்பு மாத்திரை யிறந்த சுருதி = ஓங்கவிசைத்தல். அதிர்வு நரம்பைச் சிதறவுந்தல், கூடம் இசை நிறவாதது = தன் பகையாகிய ஆறாநரம்பினிசையிற் குன்றித் தன்னோசை மழுங்கலெனக் கொள்க.