| ஒரு தந்தி. | . . . ஏக தந்திரி வீணை. | ஏழு தந்தி. | | இரண்டு தந்தி. | . . . நகுலா. | ஒன்பது தந்தி. | | மூன்று தந்தி. | . . . அன்வர்தம் அல்லது ஜந்திரா. | இருபத்தொரு தந்தி .. மத்த கோகிலம். |
| கின்னரி | லக்குதி, பிரகதி. | பினாகி | மூங்கில் சம்பந்தப்பட்டவை. | | ஆலாபினி | லக்குதி, பிரகதி. | நிசங்கவீணா | மூங்கில் சம்பந்தப்பட்டவை. |
இவ்வட்டவணையிற் கண்ட் வாத்தியங்களும் அவைகளின் தந்திகளும் அவற்றை வழங்கிவந்தவர்களின் தொகையும் மிகவும் சொற்பமாயிருக்கின்றன. தென்னாட்டின் சங்கீதம் பலவிதத்திலும் அழிந்து குறைவுபட்ட சமயத்தில் இந்நூல் எழுதப்பட்டதென்று சொல்ல ஏதுவாயிருக்கிறது. கர்நாடக சங்கீதத்தின் வாசனையையறியாத (Hyderabad) ஐதராபாத்திலுள்ள தௌலாபாத்பட்டணத்தையும் இற்றைக்கு 700 வலுஷத்திற்கு முன்னுள்ள சாரங்கதேவரது காலத்தையும் கவனித்தால், சங்கீத நூல்களின் ஒளி மழுங்கிய காலத்தில் நூல் எழுதியிருக்கிறார்கள் என்று தெளிவாய்த் தெரிகிறது. அதன்பின் சங்கீதத்தை விசாரிக்கப்புகும் யாவரும் "குருடனுக்குக்குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே” என்றபடி சங்கீதரத்னாகரத்தைத் துணைதேட ஆரம்பித்தவர்கள் காரியமுமாயிற்று. தேடியவர்கள் 22 என்ற இடறுகல்லில் தங்கள் தலைகளை உடைத்துக்கொண்டார்களே யொழிய அனுபவத்துக்குக் கொண்டு வரவில்லை யென்று சாரங்கதேவர் நூலுக்கு அர்த்தம் செய்தவர்களின் கணக்கைக்கொண்டு இதன்முன்பார்த்தோம். இன்னும் பார்ப்போம். தமது பக்தனாகிய பாணபத்திரனுக்காக விறகாளாகி சாதாரி இராகம் பாடி வடநாட்டு வீணை வித்துவானாகிய ஏமநாதனை ஓடும்படிப் பரமசிவன் செய்தாரென்றும் அது வரகுணபாண்டியன் அரசாட்சி செய்த காலமென்றும் திருவிளையாடற் புராணத்தால் நாம் அறிகிறோம். இதைக்கொண்டும் கம்பலர், அசுவதரர் என்ற வைணீக சிரோமணிகளைத் தமது அருகில் வைத்து ஓயாது வீணாகானம் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதைக் கொண்டும் இசைத்தமிழில் மிகுந்த பாண்டித்திய முடையவராயும் விருப்ப முடையவராயுமிருந்து இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் ஆதரித்துத் தமிழ்ச் சங்கம் நடாத்தி முதல்வராய் விளங்கினாரென்றும் தெரிகிறது. அவர் சாதாரி இராகம் பாடிய காலத்தில் அவ்வின்னிசையினால் அங்கிருந்தவர்கள் மெய் மறந்து துரியநிலைக்கு வரவும் பட்டுப்போன மரங்கள் தளிர்த்துப் பூக்கவும் ஆரம்பித்தன வென்றும் சொல்லப்படுகிறது. அவ்வொப்பற்ற யாழ் வாசித்தலுக் கேற்றவிதமாய் யாழ் வாசிக்குங் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களும் விதிகளும் பூர்வ தமிழ் நூல்களில் அங்கங்கே காணப்படுகின்றன. அவைகள் தமிழ் மக்கள் வைத்திருந்த பலவகைப்பட்ட யாழ் வகைகளைப்போலவே மிகுந்த தேர்ச்சி யுடையவைகளாயிருக்கின்றன வென்று தோன்றுகின்றன. அவற்றில் காணப்படும் அநேக வார்த்தைகள் தற்காலத்தில் வழக்கத்திலில்லை. என்றாலும் பூர்வத்தில் யாழ் வாசிப்பதற்கென்று அநேக விதிகள் சொல்லப்பட்டிருந்தன. அவைகளை முற்றிலும் மறந்து யாழ் என்ற வார்த்தையும் போய் வீணையென்னும் வெறும் வார்த்தையில் வந்து நிற்கிறது. இதோடு யாழ் வாசிப்பதற்கு வேண்டிய சகல விதிகளும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுத் தமிழ் மக்களுக்குப் போதிக்குங்காலமாயிருக்கிறது. ஆனால் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கிவந்த யாழ் விதிகளில் சிலவற்றைப் பார்ப்பது உபயோகமானதாயிருக்குமென்று எண்ணி அவற்றை இங்கு எழுதுகிறேன்.
|