பக்கம் எண் :

592
யாழ் வகை.

திசைப் பாலனாகிய சந்திரன், வடதிசைப் பாலனாகிய குபேரன், தென்கீழ்த்திசைப் பாலனாகிய அக்கினி என்று பூர்வ நூல்களில் சொல்லியிருப்பதைக்கொண்டும், வாயுபுத்திரன், வருணகுலம், சூரியகுலம், இந்திரகுலம், சந்திரவம்சம், அக்கினிகுலம் என்பதைக்கொண்டும் இவர்கள் மனிதர்களாக இருந்தார்களென்றும் சந்ததிபரம்பரை யுடையவர்களாயிருந்தார்களென்றும் தெரிகிறது. மேலும் பூர்வம் 49 தமிழ் நாடுகளை அவரவர்கள் பாகப்படி ஆண்டுகொண்டிருந்தார்களென்றும் தென் மதுரை அழிந்தபின் இந்தியாவில் குடியேறி அம்முறையே ஆண்டுவந்தார்களென்றும் தெரிகிறது. இவர்கள் யாவரும் தமிழ் மக்கள் என்று சொல்லப் பல ஏதுக்களிருக்கின்றன. தென்மதுரை ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டபொழுது ஏழு முனிவர்களும் திராவிடதேசத்தரசனாகிய சத்திய விரதனோடு ஓரிடத்தில் ஏறி வடநாட்டிற்சென்று குடியேறினார்களென்று சொல்வதையும் கவனித்தால் அவர்களும் தமிழ்மக்களே என்று தெளிவாகக் காணலாம். ஏழு ஏழு என்ற லக்கத்துடன் வழங்கும் தேசங்களும் அரசர்களும், முனிவர்களும், மருத்துக்களும், மாதர்களும், சிரஞ்சீவிகளும், தீவுகளும், இசைகளும், தாளங்களும், தமிழ் நாட்டிற்கே சிறந்தவை என்று தோன்றுகிறது.

பிர்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற மூவரும் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும், அண்ட, பிண்ட சராசரங்களில் நடத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப ஏழு சுரங்களின் மூர்ச்சனைகளையும் அவைகளில் பிறக்கும் பன்னிருபாலையையும் அப்பன்னிருபாலையுள் பிறக்கும் ஏழு பெரும்பாலையையும் ஐந்து சிறு பாலையையும் நாலு யாழ்வகையையும் போல உலகத்தில் ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் செயலுடையவர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அண்ட பிண்ட சராசரங்களை அவர்களுக்கு யாழாகச் சொல்லியிருக்கலாம் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் அவைகள் அவர்கள் வைத்து வாசித்துவந்த யாழ்களின் வடிவத்தையே குறிக்குமென்று நினைக்கிறேன். இதற்கிணங்க இம்மூவர்களின் சக்தி சொரூபமான சரஸ்வதி கச்சபி என்ற யாழையும், லட்சுமி சாரங்கி என்ற யாழையும் கௌரி ருத்திரிகை என்ற யாழையும் வைத்து வாசித்தார்களென்று தெரிகிறது. இம்மூவரும் வைத்திருந்த யாழ்களும் அவைகளில் பாடப்பட்ட பண்களும் ஒன்றற்கொன்று தேர்ச்சியுடையன வாயிருந்தனவென்று இனிமேல் பார்ப்போம்.

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த சாரங்கதேவர் தமக்கு முன்னிருந்த பரதர், மதங்கர், கீர்த்திதார், கம்பலர், அசுவதரர், ஆஞ்சனேயர், அபினவ குப்தர், சோமேஸ்வரர் என்னும் பெரியோர்கள் எழுதிய சங்கீத சாஸ்திரங்களை ஆதாரமாகக்கொண்டு தாம் சங்கீதரத்னாகரம் எழுதினதாகச் சொல்லுகிறார். இவர்களில் முதல் முதலாகச் சொல்லப்படும் பரதர் கி. பி. 5-ம் நூற்றாண்டிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பரதர் எழுதிய பரதம் என்ற நூல் பிரான்ஸ் தேசத்திற்குக் கொண்டுபோகப்பட்டு பிரான்சு பாஷையில் 1888-ம் வருஷத்தில் புத்தகமாக அச்சிடப்பட்டிருக்கிறது. மதங்கர் முதலிய மற்றவர்கள் அதற்குப் பிற்பட்வர்களா யிருக்கலாமென்று நினைக்க ஏதுவிருக்கிறது. இதைக்கொண்டு தென்னிந்தியாவில் வழங்கிவந்த இசைத் தமிழின் அநேக பாகங்கள் குறைவுபட்ட காலத்தில் இவர்கள் தோன்றி நூல் எழுதியிருக்கிறார்கள். இந்நூலை ஆதாரமாக வைத்து எழுதிய சாரங்கர் இரண்டாம் புத்தகம் 520வது பக்கம் முதல் சில வாத்தியக்கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறார். அதில் ஒன்று முதல் பலதந்திகள் பூட்டிய வாத்தியங்கள் இன்னவையென்றும் அவைகளில் இன்னின்னார் வைத்திருந்த வாத்தியங்கள் இன்னின்ன பெயர் பெறும் என்றும் காணப்படுகிறது. அவை வருமாறு :-

சங்கீத ரத்னாகரம்.

விசுவாசு . . .. . . பிரஹதிவீணை.நாரதர் . . .. . . மகதி
தும்புரு . . .. . . களாவதி.சரஸ்வதி,. . . கச்சபி.