பக்கம் எண் :

591
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

காலத்தில் பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த வாத்தியங்களின் பெயர்களும் இராகங்களின் பெயர்களும் மற்றும் இசைத் தமிழ்க்குரிய சொற்களும் மாற்றப்பட்டுப் புத்தகரூபமாக எழுதப்பட்டும் புராணப் பிரசங்க வழியாக நமது வழக்கத்திற்கும் வந்துவிட்டன. இப்படி வழங்கி வந்த காலத்தில் எழுதப்பட்ட இசை நூல்கள் யாவும் பல கலப்புற்றபடியால் இனந் தெரிந்து கொள்ளக் கூடாமல் போயின. அடியில் வரும் வாத்தியங்களின் பெயர்களைக் கவனிக்கையில் அவைகள் மிகப் பூர்வமாயுள்ள பெரியோர்களின் பெயர்களை அனுசரித்திருப்பதினால் அவை மிகப் பூர்வமுடையவையென்று மற்றவர் சொல்லும் லெமூரியா அல்லது தென்மதுரையைச் சேர்ந்த 49 நாடுகளிலுள்ளவர்கள் வழங்கி வந்ததாயிருக்கலாமென்று தோன்றுகிறது.

நடநாதி வாத்தியரஞ்சனம் பக்கம், 111.

வீணை முதலிய நரம்புக் கருவியின் பேதம் 32

 

1.பிரமதேவனுக்கு....அண்டம்.17.சூரியன்....நாவீதம்.
2.விஷ்ணு....பிண்டம்.18.வியாழன்....வல்லகியாழ்.
3.ருத்திரர்  ....சராசுரம்.19.சுக்கிரன்....வாதினி.
4.கவுரீ....ருத்திரிகை.20.நாரதர்....மகதியாழ். (பிருகதி.)
5.காளி....காந்தாரி.21.

தும்புரு

....களாவதி. (மகதி.)
6.இலட்சுமி....சாரங்கி.22.விசுவாவசு....பிரகரதி.
7.சரஸ்வதி....கச்சபி. (களாவதி.)23.புதன்....வித்யாவதி.
8.இந்திரன்....சித்திரம்.24.அரம்பை....ஏக வீணை.
9.குபேரன்....அதிசித்திரம்.25.திலோத்தமை....நாராயணி.
10.வருணன்....கின்னரி.26.மேனகை....வாணி.
11.வாயு.... திக்குச்சிகையாழ்.27.ஜயந்தன்....சதுசும்.
12.அக்கினி....கோழாவளி.28.ஆகாவூகூ....நிர்மதி.
13.நமன்....அஸ்த கூர்மம்.29.சித்திரசேனன்....தர்மவதி. (கச்சளா.)
14.நிருதி....வராளியாழ்.30.அனுமார்....அனுமதம்.
15.ஆதிசேடன்....விபஞ்சகம்.31.இராவணன்....இராவணாசுரம்.
16.சந்திரன்....சரவீணை.32.ஊர்வசி....லகுவாக்ஷி.

மேற்கண்ட அட்டவணைகளைக் கவனிக்கையில், மேற்காட்டியவைகள் அரசர்களும், அவர்களின் தேவிமாரும், சில முனிவர்களும், நடன கன்னிகைகளும் வழங்கி வந்த வாத்தியங்களின் பெயர்களாகத் தெரிகின்றன. இந்திரன், குபேரன், வருணன், வாயு, அக்கினி, நமன், நிருதி, ஆதி சேடன், சந்திரன், சூரியன் முதலிய பெயர்கள் தென் இந்தியாவின் பல பாகங்களில் ஆண்டு கொண்டிருந்த சில அரசர்களின் பெயராகவே தோன்றுகின்றன. மற்றப்படி சூரிய சந்திரர்களும் வாயு, அக்கினி, நிருதி முதலியவர்களும் யாழ் வாசித்தார்கள் என்று சொல்வது பொருந்தாது. பூர்வம் மிக விசாலமாயிருந்த 49 நாடுகளும் அந்நாட்டிலுள்ள கலைகளும் அழிந்து வெகுகாலமான பின் நாம் இயற்கைக்கு விரோதமாய் உத்தேசிப்பது சரியல்லவே. இது புராணிகர்களின் சாமர்த்தியம். வாலி, சுக்கிரீவன், மாருதி முதலிய மைசூர்ப் பிரதேசங்களிலடங்கிய கிஷ்கிந்தா நாட்டு அரசர்களுக்கு குரங்குக் கொடி இருந்ததைக் கொண்டு அவர்களுக்கு வால் வைத்து அவர்களைக் குரங்குகள் ஆக்கினது போல், இங்கேயும் இவர்களை இந்நாட்டுக்குரிய அரசர்கள் என்று சொல்லாமல் வெட்டிப் பெயர் கொடுத்திருக்கிறார்கள். வெட்டிப் பாடுவதும் ஒட்டிப் பாடுவதும் புராணிகர்களுக்கு வழக்கம்.

வட மேற்றிசைப் பாலனாகிய வாயு, மேற்றிசைப் பாலனாகிய வருணன், தென் மேற்றிசைப் பாலனாகிய நிருதி, தென் திசைப் பாலனாகிய யமன், கீழ்த்திசைப் பாலனாகிய இந்திரன், வடகீழ்த்