பக்கம் எண் :

608
தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம்.

"கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்"
என்பதனாலுணர்க.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 68.

அவிநயமென்பது பாவகம். அஃது இருபத்து நான்கு வகைத்து. வரலாறு :-

1.வெகுண்டோனவிநயம்.13.

செத்தோனவிநயம்.

2.ஐயமுற்றோனவிநயம்.14.

மழை பெய்யப்பட்டோனவிநயம்.

3.சோம்பினோனவிநயம்.15.

பனித்தலைப்பட்டோனவிநயம்.

4.களித்தோனவிநயம்.16.

வெயிற்றலைப்பட்டோனவிநயம்.

5.உவந்தோனவிநயம்.17.

நாணமுற்றோனவிநயம்.

6.அழுக்காறுடையோனவிநயம்.18.

வருத்தமுற்றோனவிநயம்.

7.இன்பமுற்றோனவிநயம்.19.

கண்ணோவுற்றோனவிநயம்.

8.தெய்வமுற்றோனவிநயம்.20.

தலைநோவுற்றோனவிநயம்.

9.ஞஞ்ஞையுற்றோனவிநயம்.21.

அழற்றிறம்பட்டோனவிநயம்.

10.உடன்பட்டோனவிநயம்.22.

சீதமுற்றோனவிநயம்.

11.உறங்கினோனவிநயம்.23.

வெப்பமுற்றோனவிநயம்.

12.துயிலுணர்ந்தோனவிநயம்.24.

நஞ்சுண்டோனவிநயம் எனவிவை.

இவற்றுள் -

1. வெகுண்டோனவிநயம்.

"வெகுண்டோ னவிநயம் விளம்புங் காலை
மடித்த வாயு மலர்ந்த மார்புந்
துடித்த புருவமுஞ் சுட்டிய விரலுங்
கன்றின வுள்ளமொடு கைபுடைத் திடுதலு
மன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே"


2. ஐயமுற்றோனவிநயம்.

"பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த
வைய முற்றோ னவிநய முரைப்பின்
வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும்
பீடழி புலனும் பேசா திருத்தலும்
பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலு
மறைந்தனர் பிறவு மறிந்திசி னோரே."


3. சோம்பினோனவிநயம்.

"மடியி னவிநயம் வகுக்குங் காலை
நொடியொடு பலகொட் டாவிமிக வுடைமையு
மூரி நிமிர்த்தலு முனிவொடு புணர்தலுங்
காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும்
பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ
டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப."