| 4. களித்தோனவிநயம். |
"களித்தோ னவிநயங் கழறுங் காலை யொளித்தவை யொளியா னுரைத்த லின்மையுங் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலுங் களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும் பேரிசை யாளர் பேணினர் கொளலே." |
5. உவந்தோனவிநயம். |
"உவந்தோ னவிநய முரைக்குங் காலை நிவந்தினி தாகிய கண்மல ருடைமையு மிருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவு மொருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே." |
6. அழுக்காறுடையோனவிநயம். |
"அமுக்கா றுடையோ னவிநய முரைப்பி னிழுக்கொடு புணர்ந்த விசைபொரு ளுடைமையுங் கூம்பிய வாயுங் கோடிய வுரையு மோம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையு மாரணங் காகிய வெகுளி யுடைமையுங் காரண மின்றி மெலிந்தமுக முடைமையு மெலிவோடு புணர்ந்த விடும்பையு மேலாப் பொலியு மென்ப பொருந்துமொழிப் புலவர்." |
7. இன்பமுற்றோனவிநயம். |
"இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பிற் றுன்ப நீங்கித் துவர்த்த யாக்கையுந் தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு மயங்கி வந்த செலவுநனி யுடைமையு மழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையு மெழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையுங் கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு நலங்கெழு புலவர் நாடின ரென்ப." |
8. தெய்வமுற்றோனவிநயம். |
"தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையு மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையுந் துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கு மெய்து மென்ப வியல்புணர்ந் தோரே." |