பக்கம் எண் :

610
தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம்.

9. ஞஞ்ஞையுற்றோனவிநயம்.

"ஞஞ்ஞை யுற்றோ னவிநய நாடிற்
பன்மென் றிறுகிய நாவழி வுடைமையு
நுரைசேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க்
குரைப்பான் போல வுணர்வி லாமையும்
விழிப்போன் போல விழியா திருத்தலும்
விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும்
வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவு
மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர்."
                               இஃது ஏமுறுமாக்களவிநயம்.


10. உடன்பட்டோனவிநயம்.

"சிந்தையுடம் பட்டோ னவிநயந் தெரியின்
முந்தை யாயினு முணரா நிலைமையும்
பிடித்த கைமே லடைத்த கவினு
முடித்த லுறாத கரும நிலைமையுஞ்
சொல்வது யாது முணரா நிலைமையும்
புல்லு மென்ப பொருந்துமொழிப் புலவர்."


11. உறங்கினோனவிநயம்.

"துஞ்சா நின்றோ னவிநயந் துணியி
னெஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு
மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு
மலர்ந்துயிர்ப் புடைய வாற்றலு மாகும்."


12. துயிலுணர்ந்தோனவிநயம்.

"இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பி
லொன்றிய குறுங்கொட் டாவியு முயிர்ப்புந்
தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பு
மோங்கிய திரிபு மொழிந்தவுங் கொளலே."


13. செத்தோனவிநயம்.

"செத்தோ னவிநயஞ் செப்புங் காலை
யத்தக வச்சமு மழிப்பு மாக்கலுங்
கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப்
போந்ததுணி வுடைமையும் வலித்த வுறுப்பு
மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும்
வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலு
முண்மையிற் புலவ ருணர்ந்த வாறே"