பக்கம் எண் :

639
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

முல்லையாழ்த்திறம் 4.

1.நேர்திறம். 3.யாமை. 4.சாதாரி.
2.பெயர்திறம்.    
      


நெய்தல்யாழ்த்திறம் 2.

1.

திறனில்யாழ்.

 2.விளரி.  

8. அரபத்த நாவலர் பரதசாஸ்திரத்தில் கூறிய தமிழ்ப் பண்களின் பெயர்.

பூர்வ தமிழ்ச் சங்கீத நூல்கள் அரிய விஷயங்களுடையனவாய் மிக விரிவாக எழுதப்பட்டிருந்ததாகத் தெரிகிறது சங்கீதம், அரும்பதவுரை யாசிரியராகிய கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் காலத்திலிருந்ததற்கும் அடியார்க்கு நல்லார் காலத்தில் அதாவது 100 வருஷத்துக்குள் குறைந்து தோன்றுமானால் தற்காலத்தைக் கேட்பானேன்? தேவார திருவாசகங்களில் பூர்வத்தார் வழங்கி வந்த ராகங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவைகள் பூர்வ ராகங்களில் சிலவைகளாயிருக்கலாமென்று நினைக்க இடந்தருகின்றன. இருந்தாலும் பிங்கல முனிவர் காலத்து வழங்கிய ராகங்களின் பெயர்களை அதிகமாக அவற்றில் காணோம். பிற்காலத்தில் வழங்கி வந்த ராகங்களின் பெயர்களில் அனேகம் பூர்வ ராகங்களின் பெயர்களோடு வித்தியாசப்படுவதை நாம் காணலாம்.

தேவார திருவாசகங்களில் வழங்கி வந்த பண்களின் பேர்களும் அவைகளுக்குரிய ஸ்வரங்களும் சில விதிமுறைகளும் இருக்கின்றனவென்று கேள்விப்பட்டாலும் அவைகள் கிடைப்பது அரிதாயிருக்கிறது. அவைகளும் அழிந்துபோயின போலும்.

இற்றைக்கு 200 வருஷங்களுக்கு முன்னிருந்த அரபத்த நாவலர் எழுதிய பரதம் என்ற சிறுநூலில் சில ராகங்களின் பெயர்களும் அவைகளுக்குரிய ஸ்வரமும் சொல்லப்படுகின்றன. இவற்றை இவர் அகத்தியர் பரதத்திலிருந்து சுருக்கி எழுதினதாகச் சொன்னாலும் வேறு சில அபிப்பிராயங்களும் கலந்திருப்பதாகக் காணலாம். இருந்தாலும் தற்காலத்தில் வழங்கி வரும் ராகங்களின் பேர்களுக்கு இவர் எழுதிய ராகங்களின் பெயர்கள் ஒத்திருப்பதாகக் காண்போம். அவை வருமாறு :

பரத சாஸ்திரம், இராக வியல், பக்கம் 99, 100, 101, 102, 103, 104.

 பைரவி வசந்த பைரவி நாட்டை
பைரவி சந்திரகா பைரவி சாளக
பைரவி யாநந்த பைரவி யாகிரி
நாட்டை சாரங்க நாட்டை கேதார
நாட்டை நற்சல நாட்டை பூபாளம்
மஞ்சரி படமஞ் சரிசீ ராகம்
ரஞ்சனி மனோரஞ் சனிஸ்ரீ ரஞ்சனி
சுருதி ரஞ்சனி சூலினி பியாகடம்
சுரசிந்து பிலஹரி சோம சுந்தரம்
 
10வசந்தங் கோபிகா வசந்தம் ஸ்ரீநாக
வசந்தஞ் சுத்த வசந்தம் வீர
வசந்தம் பங்காளம் வனஸ்பதி யமுனா
கௌளங் கேதார கௌள நாராயண
கௌளம் பூர்வ கௌளம் மாளவ