| | சாரங்கம் பிர்ந்தா ரவசா ரங்கம் சாரு கர்ணாட சாரங்கம் பிபாசு உதய சந்திரிகை யுயர்தேவ கிரியை நாத நாமக் கிரியை நாராயணக் கிரியை நாத ராமக் கிரியை |
| 60 | அரிய குண்டக் கிரியையுஞ் சிந்து இராமக் கிரியை நாக நாதம் உசேனி சாமந்த மொளிர்நீ லாம் சுஜாவந் திதுஜா வந்தி பௌளி மேச பௌளி மேக விரஞ்சி காபி கன்னடங் கன்னடங் காபி வருணப் பிரியை கரஹரப் பிரியை சண்முகப் பிரியை சௌராஷ் டிரமே வண்மையாஞ் சிம்ம ஹாரந்தர் பாறு அம்சத் தொனியோ டாகுஞ் சரஸ்வதி |
| 70 | சங்கரா பரணந் தன்னோடு தீர சங்கரா பரணஞ் சுரணா வளியே மணிரங்கு மாஞ்சி மகிழ்கர் ணாடகம் சுருட்டிசெஞ் சுருட்டி ரகுப்தி கௌளி |
| 74 | பரசு மாந்தாளி யாம்பல வுளவே. |