பக்கம் எண் :

664
பகை நரம்பு காட்டும் சக்கரம்.

பகை நரம்பு காட்டும் சக்கரம்.

ப த நி ச ரி க ம என்பதில் க ஆறாவதாம். ச-ப விற்குமேல் பகை கிளை நட்பு என்னும் அங்கங்கள் சொல்லப்படவில்லை யென்றும் ச-ப, ச-ப வாக எடுத்துக்கொள்ளுகையில் அம்முறைகள் வரவேண்டுமென்றும் அப்படியே கவனித்துச் செய்திருக்கிறார்களென்றும் முன் பார்த்தோம்.

பகை ஆறாம் நரம்பென்று சொல்லுகையில் ஆறாவது இராசியைக் குறிக்குமே யொழிய சுரத்தைக் குறிக்காது. இளிக்கு ஆறாம் நரம்பாக வருவதினால் கைக்கிளையைப் பகை யென்றார்.