மறைப்பு நீங்கிய சக்கரம் 
முன் காட்டிய மறைப்பு நீங்கிய சக்கரத்தில் குரல் இளி கிரமத்தில் சுரங்கள் யாவும் அமைக்கப்பட்டிருக்கின்றனவென்று தெளிவாய் அறிகிறோம். இவற்றுள் தாரத்துள் உழை தோன்றும் அதாவது மீனமாகிய பன்னிரண்டா மிடத்திலிருந்து ஏழாமிடமாகிய துலாத்தில் உழைதோன்றும். இது மீனராசிக்கு மேல் ஏழாவது வீடாகிறது. இப்படித் தொட்ட இராசிக்கு மேல் ஏழாவதேழாவது வீட்டில் இதன் பின்வரும் சுரங்கள் அமைகிறதாகக் காண்போம். அவைகளைக் காட்டும் இராசிக் சக்கரத்திலுள்ளபடி எல்லா விவரமும் கண்டுகொள்க. அச்சக்கரத்தில் வட்டப்பாலை முறைப்படி அலகுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. தொட்ட இராசிக்கு மேல் ஏழாவது வீட்டிலுள்ள சுரம் அவைகளுக்குப் பொருத்தமான சுரமாக
|