பக்கம் எண் :

793
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அவ்விதமாகவே அந்தரிக்ஷஸ்வர்க்கங்களும் விஷ்ணுரூபமாகவும் இருக்கிறது. பிருத்வீ அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் ஆக 3 லோகங்களும் சாதிகளால் பிரதி பாதிக்கப்பட்டு 3 லோகத்திற்கும் அதிஷ்டானமாகிறது. 3 லோகத்தின் ஸாரமான அக்கினி, வாயு ஆதித்தியன் என்னும் தேவர்களுக்கு அதிஷ்டானமாகிறது. 3 தேவதைகளுக்கும் ஸாரமான ருக் யஜுர் ஸாமமென்கிற 3 வேதத்திற்கும் அதிஷ்டானமாகிறது. அத்யாத்மமான சக்ஷுஸ்சுரோத்திரம், மனது இவைகளுக்கும், பிராணன், அபானன், வியானன் இவைகளுக்கும் அதிஷ்டானமாகிறது. ஆகையால் ஸ்பர் சாதிகளால் பிரதி பாதிக்கப்பட்ட பிரம்மாதிதனுக்கள் தைவீ வீணை என்றுபெயர் அடைகிறது. விஷ்ணுவின் கானத்துக்கு ஹேதுவாகஇருப்பதால் தேவனாகிற விஷ்ணுவின் வீணை என்றுபெயர். அப்படிக்கிருக்கையில் மரத்தினால் செய்யப்பட்ட மனுஷிய, வீணைக்கும் வீணை என்று பெயர் கொடுக்கலாமா? பிரம்மாதி தேகத்தின் ஸாதிருசியம் மனுஷிய வீணையிலும் இருப்பதால் அதற்கும் வீணை என்று பெயர் சொல்லலாம். இதைப்பற்றி ஐத்ரேய 3-ம் ஆரண்யகம் 2-ம் அத்தியாயம் 5-ம் அனுவாகத்தில் சொல்லியிருக்கிறது.

Prithivya rupam sparsah; antarikshasyosh manah; divah svarah. Agne rupam sparsah; vayorushmanah; adityasya svarah. Rigvedasya rupam sparsah; yajurvedasyoshmanah; samavedsaya svarah. Chakshusho rupam sparsah; srotrasyoshmanah; manasoh svarah. Pranasyarupam sparsash; apanasyoshmanah; Vyahasya svarah. Atha khalviyam daivi vina bhavati. Tadanukritirasau manushi vina bhavati. Yathasyah sira evamamu;shyah sirah; yathasyah udarame; vamam;ushyah ambhanam; yathasya jihvai vamamushya vadanam; yathasyas tantrya evamamushy-angulayah; yathasyah svara evamamu;shyah svarah; yathasyah sparsa evamumushyah sparsaha yatha hyeveyam sabdavati tardmavati; evamsau sabdavati tardmavati. yatha hyeveyam lomasena charmana pihita lomasena has sma eharmana pura vina apidadhati. Sa yo haitam vinam veda srutavadano bhavati.

பொருள் “பிருத்வியின் ரூபம் ஸ்பர்சங்கள், அந்தரிக்ஷத்தின் ரூபம் ஊஷ்மாக்கள், சுவர்க்கலோகத்தின் ரூபம் ஸ்வரங்கள், இவ்விதமாகவே அக்கினி, வாயு ஆதித்தியன் ரூபங்கள் ஸ்பர்ச ஊஷமா ஸ்வரங்கள் ருக், யஜுர், ஸாமவேதங்களின் ரூபங்களும் சக்ஷுஸ், சுரோத்திரம், மனது ரூபங்களும் பிராணன் அபானன் வியானன் ரூபங்களும் ஸ்பர்ச ஊஷ்மா ஸ்வரங்கள். இதற்குதைவீ வீணையேன்று பெயர். அதன் ரூபத்திற்கொத்திருப்பதால் மரத்தால் செய்யப்பட்டது மானுஷீ வீணை, பிர்ம்மாதி தனுக்களில் உள்ள அவயவங்கள் மனுஷிய வீணையிலுமிருக்கிறது. தேகத்தின் சிரஸு போல் வீணைக்கும் சிரஸு, உதரம் போல் உதரத்திற்கு சமான மான மத்ய பாகம், ஜிஹ்வைபோல வாதனம் என்னும் சலாகா, கை விரல்களைப்போல தந்திரிகள், உதாத்தாதி ஸ்வரங்கள்’ அல்லது அகாராதி வர்ணங்கள்போல் ஷட்ஜாதி ஸ்வரங்கள், ஸப, ஸம, என்று சொல்லப்படும் அக்ஷரங்கள் அல்லது ஸ்பர்சாதிகள்போல் அங்குளிகளின் சம்பந்தத்தால் தந்திரிகளில் உன்னமன அவநமனாதிகளைச் செய்வது எப்படி தேவ வீணை னுத்வநியுடம் நாதத்துடனும் இருக்கிறதோ, அவ்விதமாகவே மனுஷிய வீணையும் நாதத்தோடு கூடியது; எப்படி சர்மாவினாலும், கேசத்தினாலும் தேவ வீணை மூடப்பட்டிருக்கிறதோ அவ்விதமாகவே கிருத யுகத்தில் கேசத்தினாலும் தோலினாலும் மூடப்பட்டது. பிரம்மாதி தேகங்களை விஷ்னு வீனையென்று பக்கியோடு எவன் நினைக்கிறானோ, அவன் வித்தையுடன் கூடினவனாகிறான்,’ ஆகையால் வீணையின் லக்ஷணத்தை அறிந்துகொண்டு ஸங்கீதத்தை அதில் அப்பியாஸிக்கவேண்டும். நாதபிரம்ம உபாஸ கரான நாரதரும் வீணையைககொண்டே கானம் செய்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.”

மேற்கண்ட வரிகளில் சரீரத்திற்கு ஒத்திருக்கும் அநேக குறிப்புக்களை நாம் காண்கிறோம். அவைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதினால் வேறு சொல்ல அவசிய மில்லை என்று நினைக்கிறோம்.

அடுத்த பக்கத்தில் காணப்படும் படத்தில் அவைகளைத் தெளிவாகத் காணலாம்.