பக்கம் எண் :

792
மனுட சரீரத்திற்கு யாழ் ஒத்திருக்கிற தென்பதைப்பற்றி

சுமப்பவருக்கு யாழைப்பார்க்கிலும் மிக இலேசான பிட்டில் சுமப்பது சுலபமல்லவா? இவைகள் அக்காலத்திலிருந்ததாகத் தெரியவில்லை. வடி வத்திலும் அளவிலும், ஓசையிலும், இனிமையிலும் மேன்மை பெற்ற யாழ் என்ற வாத்தியமே பூர்வதமிழ் மக்கள் பழகிவந்த வாத்தியமென்று தெளிவாக அறிகிறோம். சுத்த சுரங்களையும் நுட்பமான சுருதிகளையும் சொல்வதற்குச் சிறந்த கருவியாகிய யாழே முதன்மை பெற்றது. இதனால் மாத்திரம் ம்னுடர்குரலுக்கு ஒத்த பண்களைப் பாடக்கூடும். மனுடசாரீரத்தில் உச்சரிக்கும் குறில், நெடில், ஒற்று கமகம் முதலிய ஓசைகளை உள்ளபடியே காட்டக்கூடிய இயல்புடையது யாழே, மற்ற எந்த வாத்தியங்களிலும் யாழைப் போல் தெளிவாய்ச் சொல்லக்கூடா மலிருப்பதினால் யாழ் ஒன்றே உயிருள்ள வாத்திய மென்றும் தேவவாத்தியமென்றும் மற்ற வாத்தியங்களை ஊமை வாத்தியங்கள் என்றும் யாவரும் சொல்லிக்கொள்வதை நாம் அறிவோமே. உயிருள்ள வாத்திய மென்பதினாலும் தேவவாத்திய மென்பதினாலும் நாம் அறியவேண்டியதாவது, தெய்வத்தை இன்னிசையால் துதிக்கும் ஒரு பக்தன் யாழை ஒத்திருக்கிறானென்றும் அவன் தன் வடிவத்தின்படி மரத்தினால் யாழ் செய்து அதன் இன்னிசையைத் துணையாய்க்கொண்டு தானும் கூடப்பாடுவதின் நீமித்தம் தேவவீணையென்றும் உயிருள்ள வாத்தியமென்றும் மனுடனையும் யாழையும் சொன்னார்கள் என்பதே, மனுடனைக் காத்திர வீணையென்றும் அவன் வாசிக்கும் வீணையைத்தாரு வீணையென்றும் சொன்னார்கள். சாம வேதத்தின் துவக்கத்திலுள்ள அடியில் வரும் சுலோகத்தில்காண்போம்.

“தாருவீ காத்ர வீணாச த்வே வீணே கான ஜாதிஷு
ஸாமிகோ காத்ர வீணாது தஸ்யா ச்ருணத லட்சணம்

சரிரமென்கிற காத்திர வீணையும் மரத்தாற்செய்யப்பட்ட தாருவீணையும் கானத்திற்குரியவை. இனிச் சாமவேதத்தைக் கானம் செய்யக்கூடிய காத்திர வீணைக்கு லட்சணம் சொல்லுகிறேம்.

2. மனுட சரீரத்திற்கு யாழ் ஒத்திருக்கிற தென்பதைப்பற்றி

தெய்வத்திற்குப் பிரியமாகிய சரீரமான இவ்வீணையைக் கொண்டே ஒருவன் பகவானைத்துதிக்க வேண்டுமென்றும் மரத்தினால் செய்யப்பட்ட வீணையைத் தன் கானத்திற்கு துணைகொள்ள வேண்டுமென்றும் இதன்முன் பார்த்தோம். மானுட சரீரத்திற்கு முற்றிலும் யாழ் ஒத்திருந்ததென்று வற்புறுத்திக்காட்டும் பல வாக்கியங்களை அடியிற் காணலாம்.

சங்கீத வித்தியா மகாஜனசங்கம் முன்றாவது கூட்டத்தில் விஜயநகரம் வீணை வித்துவான் மகா---ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்களால் படிக்கப்பட்டது. பக்கம் 24, 25.

“தவிரவும் விஷ்ணுவின் கானத்திற்குக் காரணமாயிருக்கும் பிரம்மாதிதனுவுக்கு வீணைஒத்திருப்பதால் ஐத்ரேய ஆரண்யகத்தில் சொல்லியபடி மனுஷிய வீணையும் தைவ வீணைக்குச் சரியாகும். ஆகையால், வீணையைக் கொண்டப்பியஸிக்கவேண்டும்.

பாகவதம், 3 வது ஸ்கந்தம், 12-ம் அத்தியாயத்தில் சொல்லியபடி ககாராதிமகாரம் முடிய 25 அக்ஷரங்களான ஸ்பர்சங்கள் சப்த பிரம்மத்தின் ஜீவன். அகாரம்முதல் 16 அக்ஷரங்களாகிய ஸ்வரங்கள் தேகம், ச, ஷ, ஸ, ஹ, என்கிற 4 அக்ஷரங்களாகிற ஊஷ்மா இந்திரியங்களாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்பர்ச ஸ்வர ஊஷ்மா ரூபமான சப்தபிரமம் விகிருதிஅவஸ்தை அடைந்து விஷ்ணு என்றுபெயர் அடையுங்காலத்தில் அதன் அம்சம் பிருத்வியில் இருப்பதால் பிருத்வீ விஷ்ணுரூபமாகவும்