பக்கம் எண் :

791
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

I. மனுடனும் யாழும்.

1. பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த யாழின் உயர்வு.

சீர் பெற்றோங்கிய முதல் ஊழியில் எண்ணுதற்கரிய பல்லாயிர வருடங்களாகத் தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுடையதாய் மிகுந்த தேர்ச்சிபெற்று வழங்கி வந்ததென்று நாம் இதன்முன் பார்த்திருக்கிறோம், அதில் பல வகை யாழ்களும் அவ்யாழில் வழங்கும் சுரங்களில் கிரக சுரமாக ஆரம்பிக்கும்பொழுது உண்டாகும் பல இராகங்களும் அவைகளின் அலகு முறையும் மிக விரிவாய்ப் பல நுட்பமான விதிகளுடன் வழங்கி வந்மனவென்றும் தோன்றுகிறது. அக்காலத்தில் வழங்கி வந்த யாழ் வகைகள் சிற் சில அங்கங்களில் சற்றுவேறுபட்டிருந்தாலும் மொத்தத்தில் ஒரு மானுட சரீரத்தீன் அமைப்புக்கும் அளவுக்கும் ஒத்திருந்ததாகக் காண்கிறோம். மானுடவடிவத்திற்கும் சாரீரத்திற்கும் ஒத்துவராத வாத்தியக்கருவிகள் பூர்வ காலத்தில் உயர்ந்ததாக வழங்கக்காணோம்.

பூர்வகாலத்தில் தமிழ்மக்கள் வழங்கிவந்த யாழ் வகைகளையும் அவைகளின் பெயர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அவைகள் 1, 2, 3, 4, 7, 9, 16, 17, 21, 100, 1000 முதலிய தந்திகள் போட்டு அவரவர்கள் பிரியத்திற் கேற்ற வடிவுடனும் அளவுடனும் வழங்கி வந்திருக்கிறதாக இதன் முன்பார்த்திருக்கிறோம். இவைகளில் 7 தந்திகளுள்ளதும் பலாமரம் போன்ற செம்மரத்தினால் செய்யப்பட்டதும் தற்காலத்தில் வீணை யென்று அழைக்கபடுவதுமான செங்கோட்டி யாழே பூர்வகாலந் தொட்டுத் தற்காலம் வரையும் தமிழ்மக்களால் அதிகமாய் உபயோகிக்கப் பட்டு வந்ததென்று தெரிகிறது. என்றாலும் அக்காலத்திலேயே மருத்துவயாழ், சுந்தரி, கின்னரி போன்ற 1, 2, 3, தந்திகளுள்ளதும் அதிக இனிமை தரக்கூடியதுமான யாழ் வகைகளும் தென்றமிழ் நாட்டில் ஒருவாறு குறைந்து இன்னும் வழங்கி வருகிறதென்று காண்கிறோம்.

தென்னிந்தியாவின் தமிழ்மக்கள் தற்காலத்திலும் வீணை அப்பியாசிப்பதை உயர்வாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். வீணாகானப் பிரியரான பரமசிவனை வணங்கும் தமிழ்மக்கள் வீணா கானத்தினால் அவரைத் துதிப்பது நல்லதென்று நாளதுவரையும் கொண்டாடுகிறார்கள். இப்படி வழங்கி வந்தயாழ் வகைகள் 1, 1 1/2 ரூபாய்க்கு வாங்கக்கூடியதான விட்டில், மவுத் ஹார்மோனியம், ஆர்மோனியம், எகுத்துண்டில் தட்டிவாசிக்கும் பியானா, தந்திகளில் தட்டிவாசிக்கும் பியானா முதலிய அன்னியதேச வாத்தியங்களும் சாரந்தா, சுரபத்து, மயில் வீணை, சித்தார் போன்ற வடதேசத்து வாத்தியங்களும் தென்னிந்தியாவில் வந்து வழங்கத் தலைப்பட்டிருக்கின்றன. 12 வருஷம் இசை வல்லோனை அடுத்து விடாப்பிடியாய் யாழைத் தீரக் கற்றுத்திறமையடைய இயலாதவர் மற்றும் அன்னியவாத்தியங்களில் சுலபமாய்வாசிக்கக்கற்றுக் கொண்டார்களேயொழிய யாழைச் சாதிக்கும் திறமையுடையோர் மற்ற வாத்தியங்களை மதிப்பதில்லை என்று இன்றும் காணலாம். அசுவதரர் கம்பலர் என்ற யாழ்வல்லோரைக் காதில் குழையாகத் தரித்து விறகாளாகித் தமது பக்தனாகிய பாணபத்திரனுக்காக யாழ் வாசித்தவரை நாம் அறிவோமே. அவர் யாழைத்தவிரவேறு வாத்தியம் கொண்டு வந்ததாகத்தெரியவில்லை. எவரும் வாங்கிக் கொள்ளமுடியாத அதிக விலைசொல்லி்ப் பாரமுள்ள பச்சை விறகை நடுக்குத்தலையுடன்