பக்கம் எண் :

790
கர்நாடக சங்கீதத்தின் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு. முகவுரை.

கானத்தில் நுட்பமான சுருதிகள் வழங்கி வருகின்றனவென்பதற்குத் தற்காலத்தில் பாடப்படும் இராகங்களின் மேற்கோள்களையும் பார்க்க வேண்டும்.

மூன்றாவது, தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் சுருதிகளை அனுசரித்தெழுதியவர்களின் சில குறிப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் பன்னிரு சுரங்களுக்கும் திட்டமான கணக்கு ஏற்படுமானால் அதன்பின் அதில் வழங்கிவரும் சுருதிகளையும் அதி நுட்பமான சுருதிகளையும் மிகச் சுலபமாய் அறிந்துகொள்ளலாம்.

இப்படி அறிந்துகொள்வதற்கு வாத்தியங்கள் யாவற்றிலும் சிறந்த யாழே முதன்மை பெற்றது. இவ்வுத்தமமான வாத்தியத்தின் அங்கமும் அமைப்பும் ஓசையின் அளவும் மானுட சரீரத்திற்கு ஒத்திருக்கிறதாகச்சொல்லலாம். மானுடசரீரத்தின் சில முக்கியமான அமைப்புக்கள் இதில் விளங்குகின்றன.

ஆகையால் முதல் முதல்யாழை ஒத்திருக்கும் முக்கியமான சில அம்சங்கள் சரீரத்திலிருப்பதாக நம் முன்னோர் சொல்லும் சில குறிப்புக்களை கவனிப்பது சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களின் கணக்கையும் சுருதிகளின் கணக்கையும்அறிய விரும்பும் நமக்குப் பிரயோசனமாயிருக்குமென்று எண்ணுகிறேன். அதில் விரிவாகச் சொல்லவேண்டிய அரிய விஷயங்களிற் சில மிகச்சுருக்கியும் விரிவஞ்சி விடப்பட்டுமிருக்கின்றன.