பக்கம் எண் :

795
மனுட சரீரத்திற்கு யாழ் ஒத்திருக்கிற தென்பதைப்பற்றி

மேற்கண்ட படத்தில் வீணாதண்டமென்றழைக்கப்படும் முதுகெலும்பு 24 கோர்வை துண்டுகளுகள்ளது. அப்படியே வீணையிலுள்ள தண்டிலும் 24 மெட்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. 24 மெட்டுகளுக்குமேல் தந்திகள் நிற்கும் மெட்டு வரையும் எவ்வளவு இடம் காலியிருக்கிறதேர் அப்படியே முதுகெலும்பின் மேலுள்ள பாகமுமிருக்கிறது.

மேலும் அவரவரின் கைக்கு அவரவர்கள் உடம்பு 8 சாணாயிருக்கிறதுபோலக் கீழ் மூலத்தின் நடுமத்தியிலிருந்து மேல் மூலத்தின் மத்திவரை நாலு சாணாயிருக்கவேண்டும். அதன் கீழ் பாகம் கீழ் மூலத்தின் நடுமத்தியிலிருந்து பாதம் வரை நாலு சாணாயிருக்கும். அப்படியே வீணையின் மேருமுதல் மெட்டு வரையுமுள்ள முக்கிய பாகம் நாலு சாண் நீளமென்று நாம் அறியவேண்டும். வீணைத்தண்டின் நீளம் மூன்று சாணாயிருப்பதுபோல மனுஷனுடைய முதுகெலும்பும் முச்சாணாயிருக்கும். இந்த முச்சாண் நீளமே மனுஷனுடைய தலையின் சுற்றளவாகும். அதுபோலவே வீணைக் குடத்தின் சுற்றளவுமிருக்கவேண்டும்.

சுவை, ஒளி. ஊறு. ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் கூடி நிற்கும் கபாலம் பெருத்திருக்குமானால் அறிவு அதிகமென்று நாம் எண்ணுகிறதுபோலவே முச்சாண்சுற்றளவுள்ள வீணைக் குடத்தைப் பார்க்கிலும் சுற்றளவு கூடுதலாயிருக்கும் குடம் அதிக ஓசை யுடையதென்று நம் அனுபோகத்தால் அறிகிறோம். என்றாலும் மேருமுதல் மெட்டு வரையு முள்ள நாலு சாண் அளவுக்கு மேல் போவது அந்தக்கேடாயும் கிரமத்திற்கு மீறியுமிருக்குமென்று எண்ணுகிறேன்.

எப்படி மனுட சரீரம் தோல், எலும்பு, தசை, மூளை, சுக்கிலம், இரத்தம், மச்சை என்னும் ஏழுதாதுக்கள்பெற்று பூரணமாகிறதேர அப்படியே வீணையும் எழு தந்திகளினால் பூரணமடைகிறது. ஏழு தாதுக்களுடன் ஜீவன்பெற்று நல்லறிவுள்ள மனிதனே இனியசெயல்களுக்கும் இனியஓசைக்கும் சிறந்தவனாக எண்ணப்படுவது போலவே ஏழு தந்திகளுள்ள வீணையும் மெட்டில் ஜீல் உடையதாய் இருக்கவேண்டும். அப்படியில்லாதிருந்தால் வீணையின் நாதம் இனிமை கொடுக்காமல் கட்டையாய் நிற்கும். இது வீணை மெட்டின் மேல்வைக்கும் ரேக்குத் தகடுகளில் வெகு நுட்பமாய் செய்துவைக்கப்படவேண்டும். அப்படி யில்லாதிருந்தால் தம்புராவுக்குப் பட்டுக்கயிறுகள் வைப்பதுபோல் வீணைக்கும் வைக்க நேரிடும், இந்த ரேக்கு வைக்கும் இடத்தில் பாதியிலிருந்து நாதம் உண்டாகிறது. ஆகையினால் ஓசையின் கணக்கறிய வீணையின் தந்தியை அளக்கும் பொழுது மெட்டில் தந்திபொருந்துமிடத்தை நுட்பமாக அளந்து அதின் சரிபாதியில் மத்திய ஸ்தாய் சட்சம் வைக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் சாஸ்தானங்களின் கணக்கு சற்று பேதப்படும்.

ஒரு சாண், பன்னிரண்டு விரற்கடை யென்று நாம் அறிவோம். இதனால் மேரு முதல் மெட்டுவரையுமுள்ள நீளம் 48 அங்குலமாகும். இதுபோலவே ஒருமனிதனின் புருவ மத்திமுதல் மூலா தாரத்தின் கருஸ்தானம் வரை 48 அங்குலமாயிருக்கும்.

மூலாதாரம் தொட்டு எப்படி முதுகெலும்புகள் மேல் போகப்போக இயற்கை அமைப்பின்படி குறுகிய அளவுடையதாயிருக்கின்றனவோ அதுபோலவே வீணையின் மேருமுதல் மெட்டுவரைச் செல்லும் சுரஸ்தானங்களின் அளவும் Geometrical Progression படி போகப் போகப் குறைந்த இடை வெளிகளிலுள்ளனவாயிருக்கின்றனவென்று நாம் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறோம். மேலும் மேருமுதல் படிப்படியாய் எப்படி மெட்டுக்களின் இடைவெளிகள்