பக்கம் எண் :

796
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

குறைந்துபோகின்றனவோ அப்படியே நாதமானது மேல்போகப் போகப் படிப்படியாக உயர்ந்து ஒன்றற்கொன்று தீவிரமாய் இடையில் வேறு நாதமுண்டாகாமல் வருகிறதென்று நாம் அறிவோம். மேருஸ்தானத்தில் ஒரு விரற்கடையுள்ள ரேக்கின் மத்தியில் நின்று இசை எழும் என்பதை இதன்பின் வரும் சில வரிகளால் காண்போம்.

இதுபோலவே தூலத்தில் அசைவாடும் பிராணவாயுவை மூலாதாரம் தொட்டு இத்தனை அங்குலத்தில் அசைவாடுகிற தென்றும் அதினின்றே இசை பிறக்குமென்றும் சொல்லுவதை அடியில் வரும் செய்யுட்களால் அறியலாம்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை பக்கம் 83.

அதனைப்,

“பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தித்ன மத்திமத்து
நாதமுத லாமெழுத்து நாலாகி-வீதி
வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட்ட
டிருவரத்தாற் றோற்ற மிசைக்கு.”

என்பதனாலுணர்க. புற்கலம்-உடம்பு, அப்புற்கலத்துக்கு முதலாயுள்ள பூதமாவன :- மண் நீர் தீ வளி வானெனவிவை. என்னை?

“மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதா
மெண்ணிய பூதங்க ளென்றறிந்து-நண்ணிய
மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
தென்னவர்கோ மானே தெளி.”

என்றாராகலின், இப்பூதங்களைந்தானும் புற்கலமாமென்ற ஆசாசனை மாணாக்கன் பணிந்து பூதங்கடாம் ஒன்றோடொன்று கூடுவனவல்ல; மண் செறிதலைக் குணமாக வுடைத்து; நீர் நெகிழ்தலைக் குணமாக வுடைத்து; தீத் தெறுதலைக் குணமாக வுடைத்து; காற்று ஒரிடத்தும் நிலைபெற்று நிற்பதன்று; ஆகாயமென்பது ஒருருவுண்டில்லயன்று; அன்றியும்.

“செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே
யப்பரிசு மண்ணைந்து நீர்நாலா-மொப்பிய
தீயாகின் மூன்றிரண்டு காற்றம் பரமொன்று
வேயாறுந் தோளி விளம்பு.”

என்பதனால் மண் ஐந்து பயனுடைத்து; நீர் நான்கு பயனுடைத்து; தீ மூன்று பயனுடைத்து காற்று இரண்டு பயனுடைத்து; வான் ஒரு பயனுடைத்து; ஆதலால் இவை ஒன்றோடொன்று கூடுவனவல்ல வாகவும் இவற்றின் கூட்ட முடம்பென்றீராதலால் இவ்வைந்தின் கூட்டம் உடம்பாவது எவ்வாறொவெனின். இதற்கு விடை:-

“மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
வைவாயு மாயவற்றின் மீதடுத்துத்-துய்ய
சுவையொளியூ றோசை நாற்றமென் றைந்தா
லவைமுதற் புற்கல மாம்.”