பக்கம் எண் :

797
மனுட சரீரத்திற்கு யாழ் ஒத்திருக்கிற தென்பதைப்பற்றி

என்பது பூதங்கள் பரிணமித்து உடம்பாமாறு கூறுகின்றது. பூதாங்களைந்தும் தத்தம் தன்னை நீங்கி மண் உடம்பாயும், நீர் வாயாயும், தீக்கண்ணாயும், காற்று மூக்காயும், ஆகாயம் செவியாயுநின்று உடம்பாம். பொறிகடோறும் வினியோகப்பட்ட புலன் சுவைமுதல் ஐந்துவகைப்படும். இவ்வைந்தும் பொறியைந்தினுமேறி, மண்ணால் உடம்பு ஊறாயும், நீரால் வாய் சுவையாயும், தீயாற் கண் ஒளியாயும், காற்றால் மூக்கு நாற்றாமாயும் வானாற் செவி ஓசையாயும் வந்து உடம்பாம். அன்றியும் மண்ணின் பகுதி நரம்பு இறைச்சி என்பு மயிர் தோலெனவைந்து, நீரின் பகுதி நீர் மூளை சுக்கிலம் நிணம் உதிரமெனவைந்து.

“பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை
தெசிகின்ற தீக்குணமோ ரைந்து-மொசிகின்ற
போக்கு வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம்
வாக்குடைய காற்றின் வகை”

என்பது தீயின் குணமும் காலின் குணமுமுணர்த்துகின்றது; ஆவன; பசிசோம்பு மைதுனம் காட்சி நீர்வேட்கை யென விவை தீக்குணம், போக்கு வரவு நோய் கும்பித்தல் பரிசமெனவிவை காற்றின் குணம்.

“ஓங்கும் வெகுளி மதமான மாங்கார
நீங்கா வுலோபமுட னிவ்வைந்தும்-பாங்காய
வண்ண முலைமடவாய் வானகத்தின் கூறென்றா
ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண்.”

அது ஆகாயத்தின் குணமுணர்த்துகின்றது. வெகுளி மதம் மானம் ஆங்காரம் உலோபமெனவிவை. இப்பூதகுணம் இருபத்தைந்துங்கொண்டு உடம்பாம்.

“ஒப்பார் பிராண னபான னுதானனுடன்
றப்பா வியானன் சமானனே-யிப்பாலு
நாகன் றனஞ்சயன் கூர்மன் கிருகரன்
றீதிலாத் தேவதத்த னே”

என்பது தச வாயுக்களையுமுணர்த்துகின்றது. ஆவன: பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்சயனெனவிவை.

“இடைபிங் கலைசுழுனை காந்தாரி யத்தி
புடைநின்ற சிங்குவை சங்கினி பூடாவோ
டங்குகு கன்னி யலம்பு வெனவுரைத்தார்
தங்குதச நாடிக டாம்”

தசநாடிக ளாவன: இடை, பிங்கலை. சுழுமுனை, காந்தாரி. அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குகு, அலம்பு எனவிவை;

“பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந்தாய்
வாதனையோ ரையைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப்
பத்தாகு நாடிகளும் பப்பத்த்ாம் பாரிடத்தே
முத்திக்கு வித்தா முடம்பு”