என்பது பூத பரிணாம முணர்த்துகின்றது. பூதங்களைந்தாவன: மண் முதலாயின; பொறியைந்தாவன: செவி முதலாயின; புலனைந்தாவன்: சத்த முதலாயின; வாதனையையைந்தாவன்: நரம்பு முதலிய ஐந்தும். நீர் முதலிய ஐந்தும், பசி முதலிய ஐந்தும், போக்கு முதலிய ஐந்தும், வெகுளி முதலிய ஐந்தும். தசவாயுக்களாவன. பிராணன் முதலிய பத்தும். தச நாடிகளாவன; இடை பிங்கலை முதலிய பத்தும். மூலாதாரத்து எழுபத்தீராயிர நாடிகளும் பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும்போல் இடை பிங்கலை சுழமுனை யென்னும் மூன்று நாடிகளுமாய் நடுவு நின்ற சுழுமுனையொழிய இரண்டானும் மேனோக்கியேறி இரண்டு மூக்கானும் ஒரோர் பாரிசத்து ஐந்து நாழிகைகயாகக்கொண்டு ஒரு மாத்திரையில் நூற்றிருபத்தைந்து சுவாதமாய் ஒரு சுவாதத்திலே பன்னிரண்டங்குலி வாயுப் புறப்பட்டு நாலங்குலி தேய்ந்து எண் விரலடங்குகின்றது பிராண வாயுவெனக்கொள்க. மாத்திரையாவது: இரண்டரை நாழிகையை எட்டுக்கூறிட்டு ஒரு கூறென்றறிக. அபான வாயு மலமூத்திரங்களைப்பெய்விக்கும். உதானன் கண்ட தானத்தில் நிற்கும். வியான வாயு போக்கு வரவு செய்து இயங்கப்பண்ணும். சமான வாயு அறுவகைச் சுவையையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாது வின் கண்ணுங்கலப்பிக்கும். கூர்மன் இமைப்பும் விழிப்பும் உறக்கமும் உணர்ச்சியும் பண்ணும். நாகன் விக்கலிடுவிக்கும். கிருகரன் கோபத்தைப் பண்ணுவிக்கும். தேவதத்தன் உடம்பெரிப்பைப் பண்ணுவிக்கும். தனஞ்சயன் பிராணன்போன பின்னும் உடம்பை விடாதே நின்று மூன்றா நாளுதிப்பித்து உச்சந்தலையிற் பிற் கூற்றிலே மூன்று நெற்கிடை வெடித்துப்போமென்றறிக. நாடிகள் எழுபத்தீராயிரத்திலும் தச நாடிகளும் தச வாயுக்களும் பிரதானமெனக்கொள்க. என்னை? “இடைபிங் கலையிரண்டு மேறும் பிராணன் புடைநின் றபானன்மலம் போக்குந் - தடையின்றி யுண்டனகீ ழாக்கு முதானன் சமானனெங்குங் கொண்டெறியு மாறிரதக் கூறு”. எனவும், “கூர்ம னிமைப்புவிழி கோணாகன் விக்கலாம் பேர்வில் வியானன் பெரிதியக்கும்-போர்மலியுங் கோபங் கிருகரனாங் கோப்பி னுடம்பெரிப்புத் தேவதத்த னாகுமென்று தேர். எனவும், “ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க் கழிந்தாலும் பின்னுடலைக் கட்டி-யழிந்தழிய முந்நா ளுதிப்பித்து முன்னியவான் மாவின்றிப் பின்னா வெடித்துவிடும் பேர்ந்து. எனவும், இசை நுணுக்கழுடையசிகண்டியாரும் கூறினாராகலின். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை பக்கம் 85. இங்ஙனம் பூதங்களானும் பொறிமுதலிய வற்றானும் வாயுக்களானும் நாடிகளானும் பரிணமித்துச் சுக்கில சுரோணிதங்களாலே உடம்பாகக் கொண்டு இருவினையுந் தன்னகத்தடக்கி உயிர் பிறக்கு மென்றறிக. “துய்யவுடம் பாவன தொண்ணூற்றா றங்குலியா மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான்-வையத் திருபாலு நாற்பத் தெழுபாதி நீக்கிக் கருவாகு மாதாரங் காண்”
|