அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்று நாற்பத்து நான்கு முழமாயிருந்தது. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அரங்கரிக்கப்பட்டிருந்தன. முதாம் அஸ்திபாரம் வச்சிரக்கல, இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதம். ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்திஇவைகளே, பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது, நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப் பொன்னாயிருந்தது.” வெளிப்படுத்தின விசேஷம் 22 : 2 “நகரத்து வீதியின் மத்தியிலும் நதியின் இருகரையிலும் பன்னிரண்டு விதமான கனிகளைத்தும் ஜீவவிருட்சம்இருந்தது; அது மாதந்தோறும் தன்தன்கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” இதில் பன்னிரண்டு வாசல்கள், பன்னிரண்டு தூதர்கள், பன்னிரண்டு கோத்திரம், பன்னிரண்டு அஸ்திபாரக்கற்கள், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பன்னீராயிரம் ஸ்தாதிநீளமும் அகலமும், பன்னிரண்டுக்குப் பன்னிரண்டான நூற்று நாற்பத்து நான்குமுழம், பன்னிரண்டு விலையுயர்ந்தகற்கள், பன்னிரண்டு முத்துக்கள், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருக்ஷம், பன்னிரண்டுமாதம் என்று பன்னிரண்டு இலக்கத்தின் உபயோகம் சொல்லப்படுகிறது. இதுதவிர பன்னிரண்டு தேவ சமுகத்தப்பங்கள், பன்னிரண்டு சீஷர்கள், பன்னிரண்டு கோத்திரப்பிதாக்கள், பன்னிரண்டு கூடை, பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம். பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடம் என்று பல இடங்களிலும் உபயோக்கப் படுவதை நாம் காண்கிறோம். மேலும் ஒரு கோத்திரத்துக்கு முத்திரைபோடப் பட்டவர்கள் பன்னீராயிரமென்றும் மீட்கப்பட்டவர்கள் லட்சத்துநாற்பத்துநாலாயிரம் பேர் என்றும் சத்திய வேதாகமத்தில் சொல்லப்படுகிறது. இருபத்துநான்கு என்ற இலக்கமும் வழங்கி வந்ததென்று அடியில்வரும் வாக்கியத்தால் காண்கிறோம் வெளிப்படுத்தின் விசேஷம் 4 : 4 அந்தச்சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண் வஸ்திரந்தரித்து தங்கள் சிரசுகளில் பொன்முடிசூடி அந்த சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன். பன்னிரண்டு கோத்திரத்திற்கும் இரண்டு இரண்டாக இருபத்துநான்கு பலிகள்செலுத்தப்பட்டதாகக் காண்போம். எஸ்றா 8: 35 “சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும் தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவ நிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் பலியிட்டு அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்கதகன பலியாகச் செலுத்தினார்கள்.”
|