சத்திய வேதாகமத்திலுள்ள சில மேற்கோள். ஏழு கிளைவிளக்குகள் யாத்திராகமம் 25 : 31 32 “பசும்பொன்னினால் குத்து விளக்கையும் உண்டாக்குவாயாக. அது பொன்னினால் அடிப்பு வேலையாய்ச் செய்யப்படவேண்டும். அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டவேண்டும். ஆறு கிளைகள் அதன் பக்கங்களில் விடவேண்டும். குத்து விளக்கின் மூன்று கிளைகள் அதன் ஒரு பக்கத்திலும் துத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதன் மறு பக்கத்திலும் விடவேண்டும். etc. ஏழு சபைகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு தூதர்கள், வெளிப்படுத்தின விசேஷம் 1: 12, 13, 14, 15, 16, 20 அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத்திரும்பினேன், திரும்பினபோது ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கிதரித்து மார்பருகே பொற் கச்சைகட்டியிருந்த மனுஷ குமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடையை சிரசும் மறிரும் வெண் பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தது. அவருடையை பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது. அவருடைய சத்தம் பெரும் வெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். அவர் வாயலிருந்து இருபுறமும் கருக்குள்ளபட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. etc etc என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்விளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.” இவைகள்போக ஏழு பொற்கலசங்கள், ஏழு எக்காளங்கள், ஏழு பசுக்கள், ஏழு வாதைகள், ஏழு ஆவிகள், ஏழு எழுபது. ஏழு முத்திரைகள், ஏழு கண்கள், ஏழு கொம்புகள், ஏழு தலைகள், ஏழு ஏழான நாற்பத்தொன்பது வருடங்கள் முதலிய இலக்கங்கள் சத்திய வேதாகமத்தில் பல இடங்களில் வழங்குகிவருகிறதாகக் காண்போம். பன்னிரண்டு என்ற இலக்கத்திலும் அநேக சம்பந்தம் வருகிறதாகக் காண்போம். தத்துவார்த்தமுடைய வெளிப்படுத்தின விசேஷத்தில் 21, 22-ம் அதிகாரங்களில் அவைகளைக் காண்போம். வெளிப்படுத்தின விசேஷம் 21 : 11 - 22. “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும் பளிங்கினொளியுள்ள வச்சிரக் கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும் கிழக்கே மூன்று வாசல்கள். வடக்கே மூன்று வாசல்கள் தெற்கே மூன்று வாசல்கள். மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே 12 தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின் மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபாரக்கற்களிருந்தன. அவைகள் மேல் ஆட்டுக்குட்டி யானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. என்னுடனே பேனினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும், அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்தநகரம் சதுரமாயிருந்தது. அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக்கோலினால் நகரத்தை அளந்தான். அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது.
|