பக்கம் எண் :

807
மனுட சூக்கும தத்துவங்களும் யாழ் ஓசையின் அமைப்பும்.

குருநூல் 441.

“கும்பித்துச் சுழுமுனையில் வாசி யோட்டிக்
குமுறவே பிராணாயத் தங்கி நாட்டி
வம்பித்து யிடைகலையால் தம்பித் தாக்கால்
வருஷிக்கு மதியமுர்த முண்ணாக் காலே
வெம்பித்து மதியமுர்த ருசினை கண்டு
விளங்கவே யவ்வமுர்த முண்டா லையா
கம்பித்த நசல்களெல்லா மோடிப் போச்சு
கழன்றிடுங்காண் தொண்ணூற்றாறு சட்டை பாச்சே.”

குருநூல் 657.

“ஆமென்ற குன்றிமணிப் பிரமாணங் கொண்டா
லதீதமென்ற போதையாவோர் சட்டை கழலும்
தூமென்ற குன்றிமணி தொண்ணூற்றா றுண்டால்
தோற்கருவி தொண்ணூற்றாறு முரியும் பாரு
நூமென்ற குன்றிமணி நூறுமணி யுண்டால்
நுண்மையது வாகிலும் நூறுகோடி வயதாம்
பாமென்ற பத்துநூறு குன்றிமணி யுண்டால்
பாடினோம் லோகாதி கர்த்த நீயாமே.”

திருமந்திரம் யாக்கை நிலையாமை பாட்டு 12

“முப்பது முப்பது முப்பத் தறுவருஞ்
செப்ப மதிளுடைக் கோவிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோவிற் சிதைந்தபின்
ஒப்ப வனைவரு மோட்டெடுத் தாரே”

திருமந்திரம் மத்திய சாக்கிராவத்தை பாட்டு 5.

“வைச்சவ னவச்சு வகையிரு பத்தஞ்சு
முச்சு முடன்மனை வானொரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி யென்றென்று
நச்சி யவனரு ணானுய்ந்த வாறே”

திருமந்திரம் மத்திய சாக்கிராவத்தை பாட்டு 6.

“நாலா றுடன்புருட னற்றத் துவமுடன்
வேறான வையைந்து மெய்ப்புரு டன்பரங்
கூறாவி யோமம் பரமெனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்வமே”

திருமந்திரம் மத்திய சாக்கிராவத்தை பாட்டு 12.

“நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிர
மேலுமோ ரைந்நூறு வேறா யடங்கிடும்
பாலவை தொண்ணூறோ டாறுட் படுமவை
கோலிய வையைந்து ளாகுங் குறிக்கிலே”