பக்கம் எண் :

806
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

வாசுதேவமனனம் என்று வழங்குகிற விவேகசாரம் இருபத்தாறுவது தத்துவ நிருபகம் பக்கம் 168.

ருதியாதிகளில் தத்துவவிசாமும் பண்ணவேண்டுமென்று சொல்லுகிறபடியால் தத்துவமாவதேதெனின் 2-ம்-ஞானேந்திரிய பஞ்சகமும் கன்மேந்திய பஞ்சகமும் பிராணாதி பஞ்சகமும் சத்தாதி பஞ்சகமும் அந்தக்கரண சதுஷ்டயமுங்கூடி (24) தத்துவங்களாம்.

வராகோபநிஷத் பக்கம் 359.

சில வாதிகள் தத்துவம் இருபத்து நான்கென்றும் சிலர் முப்பத்தாறென்றும் பின்னும் சிலர் தொண்ணூற்றாறென்றும் நினைக்கிறார்கள். அவைகளின் கிரமத்தைச் சொல்லுகிறேன் கவனமான மனதுடன் கேளும்.

காது துவக்கு கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்து; வாக்கு கை கால் முதலிய கருமேந்திரியங்கள் ஐந்து; பிராணாதிகள் ஐந்து; சப்தாதிகள் ஐந்து மநோபுத்தி அகங்காரம் நான்கு; இப்படி இருபத்து நான்கு தத்துவங்களைப் பிர்ம வித்துக்களறிகிறார்கள்.

இவைகளுடன் பஞ்சீகிருத பூதங்களான பூமி ஜலம் அக்கிநி வாயு, ஆகாசம் ஐந்து என்றும், ஸ்தூல சூக்ஷ்ம காரணங்களை மூன்று, தேகங்களென்றும். ஜாக்கிர சுவப்ந சுஷுப்திகளை மூன்று அவஸ்தைகளென்றும் ஞானிகளறிகிறார்கள். ஆக தத்துவக் கூட்டங்கள் முப்பத்தாறென்று முனிகளறிகிறார்கள்.

வராகோபநிஷத் பக்கம் 361.

இந்த தத்துவங்களுடன் இருத்தல், உண்டாதல், வளருதல், திரிதல், குறைதல், நசித்தல் இவ்வாறும் ஷட்பாவ விகாரங்கள், பசி, தாகம், சோகம், மோகம், ஜரை, (கிழத்தனம்) மரணம் இவ்வாறும் ஷடூர்மிகள் என்று சொல்லுகிறார்கள். தோல், ரத்தம், மாம்ஸம், கொழுப்பு, ஊன், எலும்பு இவ்வாறும் ஷட்கோ சங்களென்று சொல்லப்படுகின்றன. காமக் குரோத லோப மோக மத மாச்சரியம் இவ்வாறு அரிஷட்வர்க்கங்களும். விசுவன் ரைஜஸன் பிராக்ஞன் என்ற மூன்று ஜீவன்களும், சத்துவ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள் மூன்றும், பிராரப்தம் ஆகாமியம் ஸஞ்சிதமென்ற கருமங்கள் மூன்றும், பேசுதல் எடுத்தல், நடத்தல், மலஜலம் விடுதல் ஆநந்தம் இவைகளாகிய கருமேந்திரிய வியாபாரங்களைந்தும், கங்கற்பம், பிரயத்தினம், அபிமானம் நிச்சயம் இவைகளும், சந்தோஷம் தயவு சினேகம் அசட்டை இந்நான்கும், திக்குகள், வாயு, சூரியன், வருணன், அசுவிரீதேவதைகள், அக்கிநி, இந்திரன், உபேந்திரன், மிருத்தியு, அப்படியே சந்திரன் சதுர்மூக பிரம்மா, ருத்தரன், க்ஷேத்திரக்ஞன், ஈசுவரன் ஆக தத்துவங்கள் தொண்ணூற்றாறென்று சொல்லப்பட்டன.

வராகோபநிஷத் பக்கம் 405.

சகல ஜந்துக்களுடைய தேகமானது தொண்ணூற்றாறு அங்குல முள்ளதாக விருக்கிறது. அதின் மத்தியில் அபான ஸ்தானத்திற்கு இரண்டங்குலத்திற்குமேலும் மேட்டிரத்திற்கு இரண்டங்குலத்திற்குக் கீழும் மத்தியப்பிரதேசமென்று சொல்லப்படுகிறது.

குருநூல் 236, 237.

தொண்ணூற்றாரு தத்துவம் கரணாதிகளறியவும்

“வட்டமென்ற வுள்வட்ட முடியு மாகி
மம்முடியி லாதார மாறு மாகி
அட்டகசந் துவாரபா லர்க ளாகி
யவ்வட்டம் பஞ்சகர்த்தாக்கள் மூர்த்தமாகி
நட்டமென்ற கண்ணோட்டஞ் சுழுனை யிலாகி
நவசரா சரங்களெல்லா மதற்கள் ளாகி
கட்டவொண்ணாக் கருவிகர ணாதி யாகிக்
கருவியென்ற தொண்ணுற்றாறு தத்துவமா மென்றே.”