ப்ரச்நோபநிஷத் பக்கம் 425. ஐந்து பாதங்களுள்ளவரும் (ஆறு ருத்துக்களில் ஹேமந்த சிசிருதுக்களை ஒன்றாய் வைத்து. பாக்கி ஐந்து ருதுக்களாகிற பாதங்கள்); பன்னிரண்டு விதமான ஆகிருதியை உடையவரும் (12 மாதங்கள் ஆகிருதிகள்); பிதாவாயும் (எல்லோரையும் ஜனிப்பிவிக்கிறவர்) உதசமுள்ளவராயும் இருக்கிறவரை (காலாத்மாவையே) தேவலோகத்திற்கு மேலே (எல்லாவற்றிக்கும் உயர ) இருப்பதாக (இருக்கிற பரமாத்மாவென்று ) காலத்தையறிந்த சிலர் சொல்லுகிறார்கள்; மற்றசிலர் ஸர்வஞ்ஞராயிருக்கின்றவரை ஆறு ஆரங்களையுடைய (6 ருதுக்கள் ஆரங்கள்). ஏழு குதிரைகள் கட்டினசக்கிரத்தில் (ரதத்தில்) வைக்கப்பட்டிருக்கும் வஸ்துவாக ஆதித்யனாகிறகாலாத்மாவாக) சொல்லுகிறார்கள். முண்டகோபநிஷத்-இரண்டாவது முண்டகம் பக்கம் 447. 8. அவரிடத்திலிருந்து ஏழு பிராணன்கள் (இந்திரியங்கள், காது 2, கண்்2, மூக்கு 2, வாய் 1, ஆக 7; அவைகளின் ஏழு அர்ச்சிஸ்கள் (பிரகாசங்கள்); ஏழு ஸமித்துக்கள் விஷயங்கள்; ஏழு ஹோமங்கள் (மேற்படி விஷய ஞானங்கள்): ஏழுலோகங்கள் (இடங்கள்) உண்டாயின. அவைகள் ஹிருதயத்தில் எவ்வேழாக வைக்கப்பட்டன. 10. புருஷனே (பரமாத்மாவே) இந்த ஜகத், கர்மம், தபஸ், பிர்மம் என்றது பரமாமிருதம் என்றது; எல்லாம் அதுவே; அப்படிப்பட்ட ஆத்மா (நம்முடைய) ஹிருதயத்தில் இருப்பதாக யார் அறிகிறானோ அவன், இவ்விடத்திலேயே, அவித்யா முடிச்சை அவிழ்த்து விடுகிறான். வராகோபநிஷத் பக்கம் 409. மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்கள் சக்தி ஸ்தானமென்று சொல்லப்படுகின்றன. கழுத்து முதல் தலையுச்சி வரையில் சம்புவினுடைய ஸ்தானமென்று சொல்லப்படுகிறது. வராகோபநிஷத் பக்கம் 405. இந்த ஆரங்களிலே பிரதக்ஷிணக்கிரமமாய் நாடிகள் பன்னிரண்டு வாயுக்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன. நாடிகள் வஸ்திரங்கள் போலிருக்கின்றன. அவைகள் பலவருணங்களுடையனவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வஸ்திரத்தின் மத்திய பாகம் நாபீசக்கரமெனப்படுகிறது. நாரதபரிவிராஜ கோபநிஷத் பக்கம் 299. பதினாறு மாத்திரா சுவரூப மெப்படி யென்றால், அகாரம் முதலாவது, உகார மிரண்டாவது, மகாரம் மூன்றாவது, அர்த்த மாத்திரை நான்காவது, நாத மைந்தாவது, பிந்து ஆறாவது, களா ஏழாவது, களாதீதம்எட்டாவது, சாந்தி ஒன்பதாவது, சாந்தியதீதம் பத்தாவது, உன்மனி பதினொராவது, மனோன்மனி பன்னிரண்டாவது, புரீததி பதின்மூன்றாவது, தனுமத்தியமா பதினான்காவது, பதீ பதினைந்தாவது, பரா பதினாறாவது. கலிசந்தாரணோபநிஷத் பக்கம் 417. (இந்தப்பதினாறு நாமங்கள்) பதினாறு கலைகளால் சூழப்பட்டிருக்கிற ஜீவனுடைய ஆவரணத்தை (ஞானத்திற்கு மறைவாயிருக்கிற அவித்தையை) நாசம் செய்கிறது. அதற்குப் பிறகு, மேகம் போன பிறகு சூரிய மண்டலம் பிரகாசமாவதுபோல பரப் பிர்ம்மம் பிரகாசிக்கிறது. சாரீரகோபநிஷத் பக்கம் 357. மனது, புத்தி, அகங்காரம், ஆகாசம், வாயு, அக்கினி, ஜலம், பூமி இந்த எட்டும் பிரகிருதிகள் காது துவக்கு, கண், நாக்கு ஐந்தாவதாகிய மூக்கு, பாயு, உபஸ்தம், கைகள், கால்கள் பத்தாவதாகிய வாக்கு சப்த ஸ்பரிச ரூபரஸ கந்தம் இவைகள் பதினைந்து ஆக இந்ததத்துவங்கள் இருபத்துமூன்று, இருபத்து நான்காவது அவ்வியக்தமாகிய பிரதானம். அதற்கு அந்நியன் அல்லது கிரேஷ்டன் புருஷன்.
|