பக்கம் எண் :

804
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

2. இந்த சக்கரமே ஸுதர்சனமென்று பெயருள்ள மகா சக்கரம். அதின் ம்த்தியத்தில் நாபியில் தாரகம் (பிரணவம்) இருக்கின்றது. நாரசிம்ஹமாகின்ற ஏகாக்ஷர மெதுவுண்டோ அதாகவே இருக்கின்றது. அந்த சக்கரத்தின் ஆறு பத்திரங்களில் ஆறு அக்ஷரமுள்ள ஸுதர்சன மந்திர மிருக்கிறது. எட்டு பத்திரங்களில் எட்டு அக்ஷரங்களுமுள்ள நாராயணமந்திரம் இருக்கின்றது. பன்னிரண்டு பத்திரங்களில் பன்னிரண்டு அக்ஷரங்களுள்ள வாசுதேவ மந்திரமிருக்கின்றது. பதினாறு பத்திரங்களில் விந்துக்களுடன் கூடிய பதினாறு மாதிருகா அக்ஷரங்களான பதினாறு கலைகளிருக்கின்றன. முப்பத்திரண்டு பத்திரங்களில் முப்பத்திரண்டு அக்ஷரங்களுள்ள மந்திர ராஜ அனுஷ்டுப் மந்திரம் இருக்கின்றது.

இதுதான் சர்வ காமங்களையும் கொடுப்பதாகவும், மோக்ஷ துவாரமாகவும், ருக், யஜுஸ், ஸாம, அதர்வணவேதமயமாகவுமிருக்கின்ற மகா சக்கரம். இதற்கு முன் பக்கத்தில் வஸுக்களும் பின் பக்கத்தில் ஆதித்யர் களும், இடது பக்கத்தில் விச்வேதேவர்களும், நடுப்பக்கத்தில் பிரமன், விஷ்ணு, மகேசுவரர்களும் இருக்கின்றார்கள். சூரிய சந்திரர்கள் பக்கத்திலும் இருக்கின்றார்கள்.

இதற்கு ரிக்கு, முன் 5-வது உபநிஷத்தின் இரண்டாவது கன்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த மகா சக்கரத்தை அறிகின்ற பாலனாகட்டும். யுவாவாகட்டும் அவன் மகானாயும், குருவாயும், எல்லாமந்திரங்களையும் உபதேசிக்கக் கூடியவனாகவுமாகின்றன். இந்த அனுஷ்டுப் மந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும். இது ராக்ஷஸர்களை நாசம் செய்கின்றது. மிருத்யுவைத்தாண்டச் சக்தியைக்கொடுக்கின்றது. குருவிடமிருந்து கிடைத்த இந்த சக்கரத்தைக் கழுத்திலாவது கைகளிலாவது சிகையிலாவது கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு ஏழு தீவுகளுள்ள பூமியே தக்ஷணையாக ஏற்படும். ஆதலால் இதற்காக சிரத்தையுடன் எதைக்கொடுப்பினும் அது தக்ஷணையாகும்.

ப்ரச்நோப நிஷத் ஆறாவது ப்ரசனம் பக்கம் 438, 439.

1. ஸுகேசர் என்கிற பாரத்வாஜர் கேட்டதாவது ஹே! பகவானே! கோசல தேசியாகிய ஹிரண்யநாபன் என்ற (ஒரு) ராஜபுத்திரன் என்னிடத்தில் வந்து பதினாறு கலைகளுள்ள புருஷனை அறிவீராவென்ற இந்தக்ேள்வியைக்கேட்டான்.

இப்பொழுது அந்தக்கேள்வியை உம்மைக் கேட்கிறேன். அந்த புருஷன் எங்கு இருக்கிறார்.

2. இவர் பதில் சொன்னதாவது எந்த புருஷனிடத்தில் இந்த (அடியில் கண்ட) பதினாறு கலைகள் உண்டாயினவோ, அந்த புருஷன் இவ்விடத்திலேயே சரீரத்திற்குள்ளேயே இருக்கிறார்.

4. அவர் (ஹிரண்யகர்ப்பர் என்று பெயருள்ள) ப்ராணன், சிரத்தை, ஆகாசம், வாயு, அக்னி, ஜலம் பிருதிவி. இந்திரியம் (தசேந்திரியங்கள்) மனஸ், அன்னம், பலம், தபஸ், வேதங்கள். கர்மம். (அதன் பலனாகிய ஸ்வர்க்காதி லோகங்கள் நாமம் இவைகள் (இந்தபதினாறு கலைகளை ) சிருஷ்டித்தார்.

5. எப்படி சமுத்திரத்திலருந்து உற்பத்தியான இந்த நதிகள் பெருகா நின்றுகொண்டு மறுபடியும் சமுத்திரத்தையடைந்துபெயர். ரூபம் இவைகளை இல்லாமல் செய்து, (அப்படி கலந்த பிறகு) சமுத்திரமென்றே சொல்லப்படுகிறதோ அப்படி புருஷனிடத்திலே நின்றும் உண்டான இந்தப் பதினாறு கலைகளும், மறுபடியும் புருஷனை யடைந்து அததின் நாம ரூபங்களைப் போக்கடித்து, பிறகு புருஷன் என்றே சொல்லப்படுகின்றன. அந்த இந்த புருஷன் அகலனாயும், அமிருதனாயும் இருக்கிறான். அதற்கு இந்த ச்லோகம் இருக்கிறது.

6. ரத சக்கரத்திலுள்ள ஆரங்கள்போல இந்தக் கலைகள் எந்த புருஷனிடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனவோ, வேத்யனாயிருக்கிற அந்த பருஷனை அடையுங்கள். உங்களை மிருத்யு பீடிக்காமல் இருக்கட்டும்.