நாள்களும் மனிதனுக்கு 60 வருடம் கொண்ட ஒரு பரிவிருத்தியாகும். அப்படி இரண்டு பரிவிருத்திகொண்டது ஒரு காலச்சக்கரமாம். இதையே புருடஆயுள் என்று சொல்வார்கள். இது சூரியனுக்கு இரண்டு நாளாம். நவக்கிரகதிசை வருடங்கள் நூற்றுஇருபதென்று சோதிடத்தில் சொல்லப்படுகிறது. சூரியனுக்கு ஒரு மூச்சானது அல்லது சுற்றானது மனுஷனுக்கு இரவு பகலாக ஒருநாளாகிறது. ஒருநாளில் 21,600 சுவாசம்விடுகிறான். அப்படியானால் மனுடநாள்களின் கணக்கின்படி 21,600நாள் சூரியனுக்கு ஒரு நாள் ஆகிறது. அண்டத்திற்கொத்தது பிண்டத்திற்கு என்ற பூர்வ மொழிப்படி மனுடர் சுவாத்திற்கும் சூரியனுடைள சுழற்சிக்கும் சம்பந்தமிருக்கிறதென்று நாம் அறிகிறோம். இதுபோலவே ஒரு நான் 60 நாழிகையாகவும் ஒரு நாழிகை 60 தற்பரையாகவும். ஒரு தற்பரை 60 விதற்பரையாகவும் கணக்கிடுவோமானால் ஒரு நாள் 2,16,000 விதற்பரையாகும். ஆகவே பத்து விதற்பரைக்கு ஒரு மூச்சாக 21,600 சுவாசம்விடுகிறான். அதுபோலவே ஒரு நாள் 24 மணிநேரமும் ஒர மணி 60 நிமிஷம் ஒரு நிமிஷம் 60 செக்கண்டுமாக ஒரு நாளில் 86,400 செக்கண்டுகளாகின்றன. இதில் 4 செக்கண்டுக்கு ஒரு மூச்சாக அல்லது ஒரு நிமிஷத்திற்கு 15 மூச்சாக 21,600 சுவாசம் ஒரு மனிதன் விடுகிறான். சற்றேறக்குறைய மனுடனுடைய தூல சரீரத்திற்கும் சூக்கும சரீரத்திற்கும் யாழின் தூல வடிவமும் சூக்குமமான சுரம் சுருதிகளும் ஒத்திருப்பதனால் அவ்வோசையின் நுட்பமான அலைகளும் ஒருவாறு ஒத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். நீர் நிறைந்த ஒரு சிறு பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சுற்றும்பொழுது பாத்திரத்திலிருக்கும் தண்ணீரில் ஒரு துளிகூட தரையில் விழாமலிருக்க வேண்டுமானால் வெகு விரைவாகச் சுற்றவேண்டுமென்பதை நாம் பார்த்திருப்போம். இதுபோலவே விரித்த கையில் ஒரு ரூபாவை வைத்துக்கொண்டு சுற்றும்பொழுது அதிவேகமாய் அதாவது ஒரு ரூபா இயற்கையாய்ப் பூமியில் விழும் வேகத்திற்கும் மேற்பட்ட வேகத்துடன் நாம் சுற்றவேண்டும். இம்முறையே சூரியனும் சூரியனின்வேகத்தினாலும் கவர்ச்சியினாலும் நிலைபெற்றிருக்கும் பூமியும் அல்லது இவ்வண்டமும் இவ்வண்டத்தின் சுழற்சியாலும் கவர்ச்சியாலும் நிலைபெற்றிருக்கும் இப்பிண்டமும் இப்பிண்டத்திற்கொத்த யாழுமிருக்கவேண்டும். அதாவது சூரியனது அதிக வேகமான சுழற்சியும் அதன்பின் இவ்வண்டமாகிய பூமியின் சுழற்சியும் அதன்பின் இப்பிண்டத்தின் சுவாசமும் அதன்பின் மனுட சரீரத்திற்கொத்த யாழின் ஓசையின் அலைகளும் வரவரக்குறைந்திருக்கவேண்டும். பூமிதன்னில் தானே பூரணமாய் ஒரு சுற்றுவர 2,16,000 தற்பரையாகிறது. இது ஒரு நாள் என்று சொல்லப்படும். அதில் ஒரு மனுஷன் இரவு பகல் பூரணமாக 21,600 சுவாசம் விடுகிறான். இது ஒரு நாளுக்குரிய தற்பரை 2,16,000-ல் பத்தில் ஒன்றாகிறது. ஒரு மனிதனுடைய சுவாசம் 21,600 ஆனால் இதன் பத்தில் ஒன்று ஆகிய 2,160 யாழில் ஓசையின் அலைகளாயிருக்கவேண்டும். அப்படியானால் ஒரு யாழில் நாம் இப்போது வழக்கமாய் வழங்கிவரும் மந்தரம், மத்தியம், தாரம் என்னும் மூன்று ஸ்தாயிகளில் தாரஸ்தாயி சட்சத்திற்கு ஓசையின் அலைகள் 2160 ஆகும். ஓசை மந்தர ஸ்தாயிக்கு ஒன்றானால் மத்திய ஸ்தாயிக்கு இரண்டாகவும் தார ஸ்தாபிக்கும் அதன் இருமடங்காகவும் வரவேண்டுமென்ற நம் பூர்வத்தோர் அபிப்பிராயத்தின்படியே மத்திய ஸ்தாயிக்கு அதன் இருமடங்காகவும் வரவண்டுமென்ற நம் பூர்வத்தோர் அபிப்பிரர்யத்தின்படியே மத்திய ஸ்தாயி சட்சம் 2160 ஆன தாரஸ்தாயி சட்சத்தின் பாதியாகிய 1080 ஆகஇருக்கவேண்டும். அப்படியானால் 1080-ன் பாதி அதாவது 540 ஆதார சட்சத்தின் ஓசையின் அலைகளாகும். மந்தர ஸ்தாயியில் முடிந்த சட்சமே ஆதார சட்சமமாகக் கணக்கிடவேண்டும். மத்திய ஸ்தாயியின் முடிந்த சட்சமே மத்திய ஸ்தாயி சட்சமாம். மத்தியஸ்தாயிக்கு மேல் தார ஸ்தாயியில் முடிந்த சட்சமமே தாரசட்சமமாம்.
|