நாம் அறிவோம். துருவரித்த இரும்பு ஒருமண்கட்டியைப் போல் உடைந்து போகக் கூடியதாயிருக்கிறது. இதுபோல் கர்நாடக சங்கீதத்தின் உண்மையும் பூர்வ தமிழ்மக்கள் பழகிவந்த இசைத்தமிழின் நுட்பமும்மறைந்துபோகுமேயென்னும் அனுதாபத்தினால். அவர்கள் சொல்லிய ஆயப்பாலையில் வழங்கிவரும் பன்னிரு சுரங்களும் வட்டப்பாலை முறையில் சொல்லிய 24 சுருதிகளும் அவர்கள் கானத்தில் வழங்கி வரும் வேறு நுட்பமான சுருதிகளும் இப்போதும் வழங்கிவருகின்றனவென்று சொல்லவேண்டியது அவசியமாயிற்று. சுமார் 12,000 வருடங்களாகவும் அதன்முன் பல்லாயிர வருடங்களாகவும் வழங்கி வந்த ஒன்றையே நான் இப்போது சொல்வது சற்று நூதனமாகத் தோன்று மென்றாலும் பூர்வம் மறைந்து மற்றவர் தங்களுடைய தென்று சொல்லும் காலத்திலாவது தனதுஉரிமையையும் முத்தமிழிலொன்றாகிய இசைத்தமிழின் பூர்வ மேன்மையையும் சொல்லாதிருப்பது ஒருதமிழனுக்கு முற்றிலும் கறைவானகாரியமென்றே இதை எழுதநேரிட்டது. மேலும் ஒரு மூர்ச்சனையில் இராகம் உண்டாக்கும் முறையைப் பற்றிப் பலவருடங்கள் இரவுபகலாய் விசாரித்து வருகையில் ஒருசிறந்த வைணீகர்”இவருக்குச் சங்கீதபைத்தியம் பிடித்து விட்டதென்றும் , இனிமேல் அதிகமாய் அதில் உழைக்கவேண்டாம் என்றும், மற்றொருவர் ஏழு கடல்களையும் அளந்து எல்லை போட்டாலும் போட்டுவிடலாம் ஏழு சுரங்களில் உண்டாகும் ஒரு இராகத்திற்கு எல்லைபோட்டு விதிசொல்வது கூடியகாரிய மல்ல, வீண்பிரயத்தனமென்றும், மற்றொருவர் இது தெய்வத்தால், ஆகவேண்டி காயம், மனுஷப் பிரயத்தனத்தால் ஒருநாளும் முடியாது, நானும் 20 வருடங்களாகப் பிரயத்தனப்பட்டேன், ஒன்று மாகவில்லை” என்றும் இவ்விதமாய்ப் பலரும் பலவிதமாகச் சொன்னாலும், மேற்றிசை கேம்பிர்ட்ஜ் கலாசாலையில் ஆசிரியரான Mr. Louis Dickinson என்பவரும் Mr. R. C. Travelien என்பவரும் இந்திய சங்கீத விஷயமாக விசாரிக்க 1913 u ஜனவரிமாதமத்தியில் என் வீட்டிற்கு வந்தபொழுது அநேககாரியங்களை விசாரித்தபின் ஒரு ஆரோகண அவரோகணத்தில் இராகம் உண்டாக்கும் முறை யிருக்கிறதா என்று கேட்டார்கள். ஒரு மூர்ச்சனையில் இராகம் உண்டாக்குவதையும் அவ்விராகத்திற்குச் சீவ சுரம், கிரகசுரம், விவாதிசுரம், இராகம் பாடும்முறை, இராக அமைப்புப்பொருந்திய கீதம் முதலிய வைகளையக்காட்டக்கூடியதாக நான் எழுதிக்கொண்டு வரும் கையெழுத்துப் பிரதியைப்பார்த்து இந்தியா முழுவதும் சுற்றி வருகிறோம். இராகம் உண்டாக்கும் முறையைப்பற்றி அங்கங்கே சங்கீத வித்துவான்களை விசாரிக்கையில் அவர்கள் தங்கள் தங்கள் அனுபோகத்தினால் அவதார புருஷர்களாகிய சிலர் செய்யக்கூடுமேயொழிய மற்றவர் செய்வதுமில்லை; அதற்கொரு முறையுமில்லை என்று சொன்னார்களென்று சொன்னதோடு புஸ்தகம் முடிந்தவுடன் எமக்கு சீக்கிரம் அனுப்பிவைக்கவேண்டு’ மென்றும் மிகவும் கேட்டுக்கொண்டார்கள். இராகம் உணடாக்குவதற்குறிய முறை சொல்வதற்கு முன் ஆதாரமாயிருக்கும் சுருதியின் கணக்குச் சொல்லவேண்டியது அவசியமே. இச்சுருதிகளைப் பற்றி இந்தியாவிலும் மற்றும் பல இடங்களிலும் பல அபிப்பிராயங்களிருக்கிறதாகத் தெரிந்தததனால் அச்சந்தேகங்களை நீக்கிச் சரியான ஒன்றைச் சொல்லவேண்டியது நியாயந்தானே. இதனால் இதன் முன்னுள்ள பலருடையை அபிப்பிராயங்களையும் பரிசோதனை செய்து இது கூடும் கூடாதென்று சொல்லவேண்டியது அவசியமாயிற்று. இராகங்கள் உண்டாக்கம் முறையைப் பற்றிப்பல முகமாய்ப் பதினைந்து வருடங்களாகப் பிரயத்தனப்பட்டும் ஒன்றும் கைகூடாமல் கடைசியாக 1909 வருடத்தில் தெய்வாதீனமாக அவ்விருப்பம் முற்றுப்பெற்றது. அதிலிருந்து எழுதிக்கொண்டுவரும் இராகம் உண்டாக்கும் முறைகள்
|