பக்கம் எண் :

819
பூர்வம் தமிழ் மக்கள் பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்களென்பது.

தென்னிந்தியாவின் சங்கீதபரம்பரையார் இசைத்தமிழின் சில நுட்பமான அம்சங்களை எழுதிய நூலின்கருத்தை அறிந்து கொள்ள இயலாமற்போனவர்களாயிருந்தாலும் ஆதிப்பண்கள் பலவும்ட அவர்களாலேயே பேணப்பட்டு வந்திருக்கின்றனவென்று நாம் அறிகிறோம். அப்படிப் பேணப்பட்டு வந்திருந்தாலும் சாத்திர முறைமையான ஆதாரமும் இராகங்களை யுண்டாக்கவும் பிழைகளைத் திருத்திக்கொள்ளவும் கூடியகணக்கும் மறைந்து போனதினால் சுருதியைப்பற்றி அந்நியபாஷைகளில் எழுதியநூல்களால் 22 சுருதிகள் உண்டென்று மயங்கநேரிட்டது.

தமிழ்மக்கள் கானத்தில் 12 அரைச் சுரங்களுக்கு மேல் நுட்பமான சுருதிகள் வழங்கிவருவதை அறிந்த மற்றவர் அவைகள் 22 சுருதி என்று சொல்லிக்காட்டினார்கள். அவைகள் ச-ப, ச-ம முறையாகவும் 2/3 , 3/4 ஆக இருக்கிறதென்றும் கணக்குகளும் காட்டினார்கள். அவைகள் ஒவ்வொன்றும் கர்நாடக சங்கீதத்திற்கொவ்வாதென்று இரண்டாம் பாகத்தில் பார்த்தோம்.

சாரங்கதேவரின் சிறந்த அபிப்பிராயப்படி கண்டு பிடிக்கப்பட்ட சுருதிமுறைக் கணக்கையும் பார்த்தோம். அவர், இயற்கை அமைப்பின்படியும் அதன் கணக்கின்படியும் (Geometrical Progression அல்லதுநிலை எண்ணிற்குவரும் எண்களின் மூலமுறைப்படி) சுரங்களிருக்க வேண்டுமென்ற சுருத்தமைய வெகு தெளிவாகச் சொல்லுகிறார். மந்தர மத்திய தாரமென்னும் மூன்று ஸ்தாயிகளும் ஒன்றுக்கு இரண்டாயும், இரண்டுக்கு நாலாயும் வரவேண்டு மென்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஒரு ஸ்தாயியை 12 இராசிகளாகப் பிரித்து 24 அலகுகளாக வைத்து அதில் விளரி கைக்கிளையில் 2 அலகு குறைத்துப் பாடவேண்டுமென்ற வட்டப்பாலையின் இரகசியமும் தமிழ்மக்களின் கானமும் நால்வகையாழின் முறையும் தெரிந்து கொள்ளாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வழங்கிவருகிறதென்றும் அவைகள் சட்ச மத்திம காந்தார கிராமங்களாக கிரகமாறுகிறதென்றும் அதில் காந்தார கிராமம் தேவலோகத்திற்குப்போய் விட்டதென்றும் சொல்லி 4, 3, 2, 4, 4, 3, 2, என்ற நெய்தல் யாழ் அலகுமுறையை சட்சக் கிராம மென்று சொல்லியிருக்கிறார். 22 க்குப்பதில் 24 சுருதிகள் ஒரு ஸ்தாயியிலிருக்கிறதென்றும் தொட்டராசிக்குமேல் இணைச் சுரமான ச-ப ஏழு இராசிகள் அல்லது 14 சுருதிகளுடைய தென்றும் ச-ம ஐந்து இராசிகள் அல்லது 10 சுருதிகளுடைய தென்றும் விளரி கைக்கிளை முறைப்படி இரண்டு சுருதி குறைத்துக் கானஞ்செய்யப்படவேண்டுமென்றும் சொல்லி யிருப்பா ரானால் சுருதிகளைப்பற்றிய எவ்விதமான சந்தேகமும் ஆட்சேபனையும் வந்திருக்கமாட்டாது. ஒருஸ்தாயியில் 22 சுருதிகள் என்பதை வைத்துக்கொண்டு இராகங்களுக்கு எழுதிய லட்சணங்களும் அமைப்பும் சுரங்களின் பெயர்களும் தற்காலம் பரம்பரையாய்ப் பாடப்பட்டு வரும் கர்நாடக இராகங்களுக்கு முற்றிலும் ஒவ்வாததென்றே சொல்லவேண்டும்.

சுமார் 2500 வருடங்களுக்குமுன் சட்சம-பஞ்சமம் 2/3 என்றும் சட்சம-மத்திமம் 3/4 என்றும் மேற்றிசைக்குக் கொண்டுபோன காலமுதல் சரியான சுரஸ்தானங்களின் கணக்கைப்பற்றிய பல ஆட்சேபனைகளும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் என்று சொன்ன பரதர் சங்கீத ரத்னாகரருக்குப் பின் சுருதிகளைப் பற்றிய ஆட்சேபனைகளும் சுரஸ்தானங்களைப் பற்றிய ஆட்சேபனைகளும் உண்டான நிமித்தம் அவைகள் நிவிர்த்தி செய்ய நானும் என் அபிப்பிராயத்தை எழுத அவசியம் நேரிட்டது. “இருப்புத்தூணைச் செல்லரிக்குமா?” என்ற முதுமொழியிருந்தாலும் காலக்கிரமத்தில் ஆகாயத்திலிருக்கும் பிராணவாயு அதைத்தின்று துருவாக்கி விடுகிற தென்பதை