Art of teaching as applied to Music: Page 97, 98 "Insects and some few spiders are the lowest animals which voluntarily produce any sound, and this is generally effected by the aid of beautifully constructed stridulating organs. The sounds thus produced consist I believe in all cases, of the same note repeated rhythmically. The auditory hairs with which Crustaceans are provided have been seen to vibrate in response to musical sounds; as also have the antennae of gnats. As we ascend the scale of mammalian development, so is the capacity for appreciating differences in musical sounds increased, until we reach the Hylobates agilis, an ape having many characteristics in common with man. According to Mr. Waterhouse ("general introduction to natural History of Mammalian Animals," by W. C. L. Martin). this gibbon possessing an extremely loud but musical voice, appeared to him to ascend and descend the musical scale in exact half-tones, and he was sure that the highest note was the exact octave to the lowest; and he continues : "I do not doubt that a good violinist would be able to give a correct idea of the gibbon's composition, excepting as regards its loudness." Professor Owen who was a musician, confirms this view, and says that this gibbon, "alone of brute mammals, may be said to sing." Were it not beyond the scope of this work, it would be easy, and in some respects profitable, to trace the evolutionary process by which the gibbon, in arriving at his chromatic scale, proves the general truth of the assumption that in proportion to the complexity and age historically of the organism is the discrimination of degrees of pitch in musical sound developed. We have however, referred to the fact (sec. 74) that in the more advanced mammals the several stages of mental progress are all passed through (though more rapidly in the life of the individual itself than in the lower forms), and it is this fact that enables even young children not only to imitate accurately sounds heard but to label mentally their relations one to another." "ஜீவராசிகளுக்குள் அதிக தாழ்ந்தவையென்று எண்ணப்படுபவைகளுள் சாதாரணப்பூச்சிகளும் சிலந்திப்பூச்சிகளுள் சிலவைகளுமே சுயேச்சையாய் சத்தம் உண்டுபண்ணக்கூடியவை. இந்தச்சத்தமானது அவைகளுடைய உடம்பில் வெகு அழகாய் அமைக்கப்பட்டிருக்கும் தொனிக்கருவிகளிலினின்று உண்டாகிறது. இப்படியுண்டாகும் சத்தமானது அநேகமாய் ஒரேஸ்வரத்தைத் தாள அமைப்போடு ஒழுங்காய் சொல்லுவதுபோல் நமக்குப்புலப்படுகிறது. உடம்பில் ஓடுமூடியிருக்கும் Crustaceans என்ற ஜாதியைச்சேர்ந்த இனங்களுக்கு உடம்பில் ஒரு விதமயிர்கள் உண்டு. அவைகளின் மூலமாய் அவைகள் தொனியைக் கிரகிக்கின்றன. அந்தமயிர்கள் ஸங்கீதத் தொனியைக்கேட்கும்போது அவைகளுக்குள் ஒருவித அசைவு உண்டாகிறதாகத் தெரிகிறது. கொசுக்களுக்கு முன்னால் இருக்கும் antennae என்னப்பட்ட ஒருவிதக்கொம்புகளும் இப்படியே ஸங்கீத சத்தத்தைக்கேட்டவுடன் அசைகின்றன. இப்படியே மிருகாதிகளுக்குள் படிப்படியாய் உயர்ந்த ராசிகளைக்கவனிப்போமானால் ஜாதி உயர உயர ஸங்கீதத்தைக்கிரகிக்கும் ஞானமும் உயர்ந்து வருவதாகத் தெரிகிறது. இப்படி உயர உயரக் கவனித்துப்போகும்கால் குரங்கின் இனத்தில் Hylobates agilis என்ற ஓர் வித வால்இல்லாக்குரங்கானது மனிதருக்கு இருக்கும் சக்திகளில் அநேகத்தை உடைத்தாயிருக்கிறதாக அறிகிறோம். Waterhouse என்னப்பட்ட சாஸ்திரி ஒருவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாரென்றால், இந்த வால்இல்லாக்குரங்கானது அதிக உரத்தசத்தமாய்க்கத்தின போதிலும் அதின் சத்தம் ஸங்கீதத்துக்கு அமைந்ததாகவே இருக்கிறது. அது அரைஸ்வரங்களால் அமைந்துள்ள ஆரோகண அவரோகணத்தை கீழ் சட்ஜமம் தொடங்கி மேல் சட்ஜமம் வரைக்கும் ஒரு ஸ்வரம்தப்பாமல் பாடுகிற தென்றும், பிடில்வாசிப்பதில் தேர்ந்த ஓர் வித்வான் இந்தக் குரங்கு பாடும் ஆரோகண அவரோகணத்தை அந்தவாத்தியத்தில் சரியாய்வாசித்துக் காண்பிக்க முடியும்; ஆனால் குரங்கு பாடுகிற அவ்வளவு சுத்தமாய் வாசிக்க முடியாது, என்றும்சொல்லுகிறார். ஸங்கீத வித்துவானான
|