ச-ப முறையாய் வட்டப்பாலையில் வலவோட்டாய் உண்டாகும் பன்னிரு சுரங்கள். | குரலுள் இளி ... ... ச2 ப2 | உழையுள் துத்தம் ... ... ம4 ரி2 | | இளியுள் துத்தம் ... ... ப2 ரி4 | துத்தத்துள் விளரி ... ... ரி2 த2 | | துத்தத்துள் விளரி ... ... ரி4 த4 | விளரியுள் கைக்கிளை ... த2 க2 | | விளரியுள் கைக்கிளை ... த4 க4 | கைக்கிளையுள் தாரம் ... ... க2 நி2 | | கைக்கிளையுள் தாரம் ... க4 நி4 | தாரத்துள் உழை ... ... ... நி2 ம2 | | தாரத்துள் உழை ... ... நி4 ம4 | உழையுள் குரல் ... ... ... ம2 ச2 |
ச-ப முறையாய் வட்டப்பாலையில் இடவோட்டாய் உண்டாகும் பன்னிரு சுரங்கள். | உழையுள் குரல் ... ... ... ம2 ச2 | தாரத்துள் உழை ... ... நி4 ம4 | | குரலுள் இளி ... ... ... ச2 ப2 | உழையுள் துத்தம் ... ... ம4 ரி2 | | இளியுள் துத்தம் ... ... ... ப2 ரி4 | துத்தத்துள் விளரி ... ... ரி2 த2 | | துத்தத்துள் விளரி ... ... ரி4 த4 | விளரியுள் கைக்கிளை..த2 க2 | | விளரியுள் கைக்கிளை .. ... க4 க4 | கைக்கிளையுள் தாரம்...க2 நி2 | | கைக்கிளையுள் தாரம் ... க4 நி4 | தாரத்துள் உழை ... ... நி2 ம2 |
இவை பூர்வம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் பாடிவந்த ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களில் ஏழு சுரங்களே, பூர்வ தமிழ் மக்கள் சொல்லி வந்த விதிமுறையை மீறி வழங்கிவரும் கானம் மார்க்கவிதியுடைய தல்ல. விசுவாமித்திர சிருஷ்டிபோலக் கிரமம் மீறிய வேறுசில சுரங்கள் கலந்தாலும் அது தேசிகமென்றும் மார்க்கவிதி அறியாதவர்கள் கானமென்றும் எண்ணப்படுமே யொழிய மார்க்கவிதி யுடையதென்று சொல்லப்படமாட்டாது. செம்பாலைப் பண்ணின் கணிதமுறையே மார்க்கமாம். மார்க்கவிதிப்படிப் பாடும் பண்களே விரும்பிய நன்மைகளைப் பெறுவதற்குச்சாதனமாகும். புன்னாகவராளியில் மகர விளரிக்குப் பதில் கும்பவிளரி அதாவது 4 அலகுள்ள விளரி சொல்லப்படுமானால் நாகசர்ப்பங்கள் ஆனந்தநிலையை இழந்து கோபமடைந்து கொத்த ஆரம்பிக்கும். இதை அனுபவத்திற் காணலாம். மெய்மறந்து ஆனந்தத்தால் ஒருவனை ஆடும்படி செய்கிற ஆனந்த பைரவியில் மகரவிளரிக்குப் பதில் கும்பத்தில்வரும் விளரி கலந்தால் ஆனந்தமின்றிச் சாதாரண நிலைக்குக் கொண்டுவரும் என்பதை நாம் காணலாம். இசைத்தமிழுக்கு மற்றவர் வழங்கிவந்த பல பெயர்கள். தனித் தனியாய் இனிமையுடையதும் இசைத்தமிழுக்குரிய மார்க்க விதியுடையதுமான தமிழ் மக்களின் கானத்தைக் கேட்ட மற்றவர் பல விதமான பெயர்களுடன் அழைத்தார்கள் என்று அறியவேண்டும். இந்தியாவின் வடபாகத்திலுள்ளோர் தமிழ் மக்களின் கானத்தை தென்னிந்திய கானமென்று சொன்னார்கள். திருவிடம் என்ற தென்னிந்தியாவை திரவிடம்
|