என்றும் அதன்பின் திராவிட மென்றும் அழைத்த வடமொழியாளர் திராவிட சங்கீதமென்றும் திராவிட சங்கீதம் மிகச் சிறந்ததென்றும் சொன்னார்கள். தென்னிந்தியாவின் கீழ்கரையோரமாய்த் தஞ்சை முதல் நெல்லூர் வரையும் பரவியிருந்த கர்நாடக ராஜ்யத்தில் வந்து தங்கிய மேல் நாட்டு வர்த்தகரும் அவர் பின்னடி யாரும் தமிழ் மக்களின் கானத்தை கர்நாடக சங்கீதமென்றழைத் தார்கள். பொதுவாய்க் கவனிக்கும் மற்ற தேசத்தவர் இதை இந்து தேச கானமென்று சொல்லுகிறார்கள். தென்மதுரையிலுள்ள பூர்வ தமிழ் மக்கள் இதனை இசைத்தமிழ் என்று சொன்னார்கள். சிறந்த மார்க்க விதியுடையதான இசைத்தமிழையே தென்னிந்திய கானமென்றும் திராவிட சங்கீதமென்றும் கர்நாடக சங்கீதமென்றும் மற்றவர் சொல்லுகிறார்களென்பது தெளிவாய்த் தெரிகிறது. மேலும் ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு எழுத்துக்களில் சிலவற்றின் ஓசை சமஸ்கிருத எழுத்துக்களின் ஓசையைப் போலிருக்கிறதைக்கொண்டு சமஸ்கிருத பாஷையிலேயே முதல் முதல் சங்கீதம் உண்டானதென்று சொல்வாரும் உண்டு. அவற்றில் ச, க, ப, த என்னும் எழுத்துக்கள் வாதத்திற்கிடமானவை. இதில் ச என்ற முதல் எழுத்து தனக்கினமான மெல்லெழுத்தோடு வரும்பொழுது சமஸ்கிருதத்தில் ச வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தைப் போலிருக்கிறதென்றும் ஒற்றடுத்து வரும்பொழுது இரண்டாம் எழுத்தை ஒத்திருக்கிறதென்றும் இதன்முன் சொல்லியிருக்கிறோம். மற்றும் உயிர்மெய்யோடு மொழிக்கு முதலில் வல்லெழுத்துக்கள் வரும்போது அவைகள் மிருதுவான ஓசையுடையதாகின்றன. சரடு, சரக்கொன்றை, சரி, சரிகை, சரிபாதி, சருகு, சலசலப்பு, சவட்டுப்பூ, சவலை வெண்பா என்ற வார்த்தைகளில் வரும் ச, ச வர்க்கத்தில் வரும் முதுலெழுத்தேயொழிய வேறில்லை. ச, ரி, க, ம என்ற நாலு எழுத்துக்களில் முதல் எழுத்து தமிழ் வார்த்தைகளில் வழங்கிவரும் முறைப்படியே வழங்கிவருகிறதேயொழிய வேறில்லை. இதை அ என்று பூர்வத்தோர் வழங்கிவந்ததாகவும் காணப்படுகிறது. ம என்ற மெல்லெழுத்தின் முன்பின்னாக வரும் க, ப என்னும் வல்லெழுத்துக்கள் மெலிந்துவருவதும் ந என்ற மெல்லெழுத்துக்கு முன்பின்னாக வரும் த, ச என்னும் வல்லெழுத்துக்கள் மெலிந்துவருவதும் தமிழ்வழக்கே. இவ்வுச்சரிப்புகள் தமிழ்ப் பாஷைக்கு இயல்பாயுடைய ஓசையேயொழிய வேறில்லை. இதோடு தமிழ்நூலிலும், சமஸ்கிருதம், தெலுங்கு நூல்களிலும் சொல்லப்படுகிற ஏழு சுரங்கள் பிறந்த தீவுகள், பிறக்கும் இடம், கண்டுபிடித்தவர்கள், அதிதேவதைகள், உபயோகப்படுத்துகிறவர்கள், புஷ்பம், வாகனம், ஆபரணம், ஆயுதம் முதலியவைகளை அடியில் வரும் அட்டவணைகளில் காணலாம். அடியிற்கண்ட அட்டவணையை நாம் கவனிப்போமானல் தமிழ்மக்கள் வழங்கிவந்த இயற்றமிழில், செய்யுட் பொருத்தத்தில் காணப்படும் சாதி, நிலம், நிறம், நாள், இராசி, கிரகம் முதலியவை நான்கு பாவினங்களுக்கும் பொருந்தி வரவேண்டும் என்பதையும், ஒரு புலவன் தலைவனைப்பற்றியாவது தலைவியைப்பற்றியாவது பாடும்பொழுது முதலில் ஆரம்பிக்கும் மொழிகளில் மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம், எழுத்துப்பொருத்தம், தானப்பொருத்தம், பாற்பொருத்தம், வருணப்பொருத்தம், உண்டிப்பொருத்தம், பொருள்பொருத்தம், கதிபொருத்தம், கணப்பொருத்தம் என்னும் பத்துவிதமான பொருத்தங்களும் இருத்தல் வேண்டுமென்பதையும் கவனித்துச் செய்து வந்திருக்கிறார்களென்றும் நாம் அறிவோம். 3 |