பக்கம் எண் :

837
இசைத் தமிழ் நூலில் வழங்கிவந்த ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களின் கணித முறை.

இவைகளில் பாட்டுடைத்தலைவன் எந்தப் பாவினால்பாடப்படுகிறானோ அப்பாவைக்கொண்டும், நிறத்தைக்கொண்டும், நிலத்தைக் கொண்டும், நட்சத்திரத்தைக்கொண்டும், இராசி, கிரகம் முதலியவைகளைக் கொண்டும் குறிப்பினால் பல காரியங்களை அறிந்துகொள்வதற்காக அமைத்து வழங்கிவந்திருக்கிறார்கள். இம்முறையே இசைத்தமிழில் ஏழுசுரங்களுக்கும் சிலகுறிப்புக்கள் சொல்லப்படுகின்றன.

இசைத்தமிழில் தேர்ந்த பூர்வ தமிழ்மக்கள் ஒரு இராகத்தில் சீவனாய் விளங்கும் சுரத்தை முதல் முதல் கணிதத்தினால் அறிந்துகொண்டு அதன்பின் சீவசுரத்திற்குச் சொல்லப்பட்ட அதிதேவதைகள் அல்லது தலைவன், அவன் உபயோகிக்கும் ஆகாரம், வஸ்திரம், வாகனம், ஆபரணம், ஆயுதம், விருக்ஷம் முதலிய பொருத்தம் அமையப் பாடுவது வழக்கமென்று தோன்றுகிறது. அதோடு ஏழு சுரங்களின் பிறப்பிடமும் ஓசையின் உவமை, அட்சரம், பிறக்கும் தீவுகள் முதலியவைகளையும் இவ்வட்டவணையில் காண்போம். இவைகளில் வழங்கிவந்த பூர்வ முறைகள் தற்காலத்தில் அதிக பழக்கத்திலில்லாமல் மறைந்துபோயின. அவைகளைப்பற்றிச்சொல்லும் நூல்கள் தற்சமயம் கிடைக்கவில்லை. கிடைக்கும்பொழுது இன்னும் விரிவாக அவைகளைப்பற்றி அறிந்துகொள்ளலாமென்று எண்ணுகிறேன்.

3. இசைத் தமிழ் நூலில் வழங்கிவந்த ஆயப்பாலையில் வரும் பன்னிரு
சுரங்களின் கணித முறை.

நாம் இதுவரையும் இசைத் தமிழில் வழங்கிவந்த ஏழு சுரங்களையும் அவைகள் பன்னிரு இராசியில் இணை நரம்பு, கிளை நரம்பு, பகை நரம்பு, நட்பு நரம்பு, இரண்டாம் நரம்பாகப் பொருந்தி வரும் முறையில் பிறக்கும் ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களையும் தெளிவாக அறிந்தோம். அதன்பின் வட்டப்பாலைச் சக்கரத்தில் இணை இணையாய் அதாவது வலமுறையாய் ச-ப, ச-ப வாக ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரு சுரங்கள் வருகின்றனவென்றும் இடமுறையாய் கிளை கிளையாய் (ச-ம வாக) ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரு சுரங்கள் வருகின்றனவென்றும் பார்த்தோம்.

இப்பன்னிரு சுரங்களில் எந்தெந்த இடைவெளிகளோடு ஆறு தாய் இராகங்கள் வழங்கி வருகின்றனவென்பதையும் அவைகளுக்குத் தற்காலத்தில் வழங்கிவரும் பெயர்களையும் இதற்கு முன் 822, 823-ம் பக்கங்களில் பார்த்தோம். அதோடு குரல் இளிக் கிரமத்தால் வலமுறையாய் உண்டாகும் பன்னிரு சுரங்களையும் அவைகளுக்குரிய அலகுகளையும் 825-ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறோம். அதுபோலவே உழை குரல் கிரமத்தில் இடவோட்டாக உண்டாகும் பன்னிரு சுரங்களையும் அவைகளின் அலகு முறையையும் அங்கே சொல்லியிருக்கிறோம்.

இப்பன்னிரு சுரங்களே தற்காலம் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வருகின்றனவென்று எவ்வித சந்தேகமுமின்றிச் சொல்வோம். அறிஞர்கள் யாவரும் ஒப்புக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். இப்பன்னிரு சுரங்களும் ஆயப்பாலை முறையாலும் வட்டப்பாலை முறையாலும் பூர்வ தமிழ் மக்கள் பல்லாயிர வருடங்களாக முதற் சங்கத்திற்கு முன்னுள்ள காலத்திலேயே வழங்கிவந்த சுரங்களே தவிர நூதனமானதொன்றல்ல.

லெமூரியா கடல் கொள்ளப்பட்ட காலத்தில் அங்கிருந்த தமிழ்மக்கள் தங்களுக்கு எதிர்ப்பட்ட பல இடங்களுக்கு ஓடித் தப்பிப் பிழைத்துப் பலதேசங்களில் குடியேயறினார்கள் என்றும் அவர்கள் போய்த் தங்கிய தேசங்களின் சீதோஷ்ண பேதத்தாலும் இயற்கை அமைப்பினாலும் பல நிறமும் பாஷையும் உடையவர்களாய்க் காணப் பட்டாலும் அவர்கள்